Published:Updated:

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை,நாகை,திருவாரூரில் முழு அடைப்பு போராட்டம்!

தஞ்சாவூர்: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில்,மறியலில் ஈடுபட்ட  விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான  தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெற  வில்லை.

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடக அரசு  மறுத்து வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு 11 மணி முதல் கர்நாடக அரசு  காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டது.

ஆனாலும் இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது என விவசாயிகள்  தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட மறுத்ததால்  டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி  வருகிறது.

இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகத்தை  கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர மத்திய அரசை  வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  தமிழக விவசாயிகள் சங்கம், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து   இருந்தது.

அதனபடி இன்று காலை 6 மணிமுதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முழு அடைப்பு காரணமாக தனியார் பஸ்கள்  ஓடவில்லை. அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு  அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. சில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன்  இயக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,மதிமுக,விடுதலை சிறுத்தைகள், பாமக, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன. தஞ்சையில் தனியார் பள்ளிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

##~~##
தஞ்சையில் இன்று காலை வழக்கம்போல் பஸ்கள் இயங்கியது. தஞ்சை மாவட்டம்  ஒரத்த நாடு பகுதியில் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. அரசு பஸ்கள் போலீஸ்  பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. திருவாரூரில் இன்று அனைத்து கடைகளும்  அடைக்கப்பட்டு இருந்தது. அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் கிராமப் புறங்களுக்கு செல்ல  வில்லை. தனியார் பஸ்கள் ஓடவில்லை.
திருவாரூரில் இன்று காலை விவசாயிகள் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மன்னார் குடியில் இன்று காலை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மன்னார் குடியில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயிலை  அவர்கள் மறித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வை.சிவபுண்ணியம் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டில் தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் சென்னம்  பட்டியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட கரும்பு  விவசாயிகள் சங்க தலைவர் திருப்பதி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.  இதில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.