Election bannerElection banner
Published:Updated:

மரபணு மாற்றுப் பயிர்களால் வருங்கால சந்ததி அழிந்துவிடும்..! அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

மரபணு மாற்றுப் பயிர்களால் வருங்கால சந்ததி அழிந்துவிடும்..! அய்யாக்கண்ணு எச்சரிக்கை!
மரபணு மாற்றுப் பயிர்களால் வருங்கால சந்ததி அழிந்துவிடும்..! அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

மரபணு மாற்றுப் பயிர்களால் வருங்கால சந்ததி அழிந்துவிடும்..! அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதித்தால் நமது வருங்கால சந்ததி முழுமையாக அழிந்துவிடும். இந்த ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த இருப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அய்யாக்கண்ணு, குமரி மாவட்டத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கினார். தமிழகத்தின் 32 மாவட்டங்கள் வழியாக சென்னை வரை 100 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்பு உணர்வுப் பயணத்தில், நஞ்சில்லாத உணவின் மூலமாக மனித குலத்தை மீட்க வேண்டும், மரபணு மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.

இந்தப் பயணத்தை தொடங்கி வைத்த பின்னர் குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ’’விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழிசெய்யும் வகையில், அவர்களின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும். பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் ஏற்கெனவே பல கட்டப் போராட்டங்களை நடத்தி உள்ளோம். 

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அவர்களை தொடர்ந்து இழப்பைச் சந்திக்க வைத்தால் அவர்கள் விவசாயத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது. அதன் பின்னர், அந்த நிலங்களை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து மரபணு மாற்றுப் பயிர்களைப் பயிரிடலாம் என்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது. ஆனால், மரபணு மாற்று உணவுப் பொருட்களால் ஆண்களுக்கு ஆண்மை இழப்பும், பெண்களுக்கு கருச்சிதைவும் ஏற்படும். மரபணு மாற்றுப் பொருட்களால் நமது வருங்கால சந்ததியே அழிந்து விடும் ஆபத்து உள்ளது. 

அதனால் தான் மரபணு மாற்று விதைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இது குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறவே இந்தப் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளோம். அனைத்து மாவட்டங்களின் வழியாகச் சென்று விவசாயிகளைச் சந்திக்கும் நாங்கள், வரும் ஜூன் 8-ம் தேதி சென்னையில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அத்துடன், நவம்பர் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்’’ என்றார். 
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு