Published:Updated:

வீராணம் ஏரியை அமைத்த ராஜாதித்த சோழனுக்கு சிலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

ஜி.சதாசிவம்
வீராணம் ஏரியை அமைத்த ராஜாதித்த சோழனுக்கு சிலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
வீராணம் ஏரியை அமைத்த ராஜாதித்த சோழனுக்கு சிலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகவும், கடலூர் மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாகவும் உள்ள  வீராணம் ஏரியை அமைத்த ராஜாதித்த சோழனுக்கு ஏரிக்கரையில் சிலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

இதுகுறித்து ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வடமூர் ரங்கநாயகி மற்றும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள், கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியிடம் அளித்துள்ள மனுவில், 'தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பராந்தகச் சோழன் காலத்தில் அவரின் முதல் மகன் ராஜாதித்த சோழனால் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவில் ஓடி விணாக கடலில் கலந்து வந்தது. வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து மக்களுக்குப் பயன்படும் வகையில் செய்ய வேண்டும் என ராஜாதித்த சோழன் முடிவு செய்தார்.

இதையடுத்து 74 கணவாய்கள், 16 கிலோ மீட்டர் நீளம், 4 கிலோ மீட்டர் அகலம் கொண்ட கடல் போன்ற விசாலமான பெரிய ஏரியை தனது தந்தை வீரநாராயணன் பெயரில் ராஜாதித்த சோழன் அமைத்தார். அவர் அன்று எடுத்த முயற்சி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் விவசாயத்துக்கும் மக்களுக்கும் உயிர் தந்துகொண்டிருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக வீராணம் ஏரிக்கரையில் கந்தகுமாரன் கிராமத்தில் உள்ள ராதா மதகில் ராஜாதித்த சோழனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தமிழக அரசுக்கு இதுகுறித்து பரிந்துரை செய்து சிலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.