Published:Updated:

1,325 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம்; விவசாயிகளை அழைக்கும் தோட்டக்கலைத்துறை!

farming
farming

2021-22-ம் ஆண்டின் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 675 ஹெக்டேர், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம் 650 ஹெக்டேர் என மொத்தம்1,325 ஹெக்டேர் பரப்பளவை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலான அரசு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது தொற்றுப் பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரியில் ஆன்லைன் மூலம் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்
கோவை வனப்பகுதியில் சேர்க்கப்பட்ட 1,049 ஹெக்டேர் நிலம்! - ஆட்சியர் நாகராஜன் அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத் துறையின் நீலகிரி மாவட்ட இணை இயக்குநர், உதவி இயக்குநர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் 23 கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

நீலகிரியில் இயற்கை விவசாயம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் 2021-22-ம் ஆண்டின் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 675 ஹெக்டேர், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம் 650 ஹெக்டேர் என மொத்தம் 1,325 ஹெக்டேர் பரப்பளவை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
ரசாயனங்கள் இல்லாமலே பூச்சித் தொல்லைக்கு `குட்பை' சொல்லுங்க... இயற்கை விவசாயம் காட்டும் வழிகள்!

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. துணை நிலை நீர் மேலாண் திட்டம் மூலம் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் கிணறு, நீர் தொட்டி அமைக்கவும் டீசல் மோட்டருக்கு பின்னேற்பு மானியமும் வழங்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு