Published:Updated:

அதிகாரிகள் அலட்சியம்... மதுராந்தகம் அருகே மழையில் நனைந்த 8,000 நெல் மூட்டைகள்!

மதுராந்தகம் அருகே அரசுக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர். மேலும், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள குருகுலம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் செய்யும் தற்காலிகக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மதுராந்தகம், செய்யூர் போன்ற பகுதிகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இப்பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழக ரைஸ்மில்களுக்கு அவை கொண்டு செல்லப்பட்டு அரைக்கப்படும். பிறகு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்குத் தேவையான அரிசி அனுப்பி வைக்கப்படும். கிடங்கில் இருந்த நெல்மூட்டைகள் மீது தார்ப்பாய் போட்டுப் பாதுகாக்காமல் அலட்சியம் காட்டியதால் நேற்றைய மழையில் மட்டும் சுமார் 8,000 நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சோழனூர் ஏழுமலையிடம் பேசினோம். “வருடந்தோறும் நட்டக் கணக்கு காட்டுவதற்காகவே அரசு அதிகாரிகள் நெல் மூட்டைகளை வேண்டுமென்றே நனையவிடுகிறார்கள். நேற்று பெய்த மழையில் மட்டும் 8,000 நெல் மூட்டைகள் நனைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து மழைபெய்வதால் அதைக் காய வைக்க முடியாது. மழை பெய்யும் என முன்பே வானிலை அறிக்கையில் தெரிவிக்கிறார்கள். இதுகூட ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. தெரிந்தாலும் இதைப் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை.தார்ப்பாய் வாங்குவதற்கென்று நிதி ஒதுக்குகிறார்கள். தார்ப்பாய் வாங்கியதாகவும் கணக்கு காட்டுகிறார்கள். விவசாயிகள் இரவு பகலாக உழைத்து உற்பத்தி செய்த நெல்லை, பாதுகாக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். மாதம் தவறாமல் சம்பளம் வாங்கும் அவர்களுக்கு எங்களின் வேதனை தெரிய வாய்ப்பு இல்லை” என்றார்.