
#NammalvarArt
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மண்ணில் விதைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த 25-01-2014 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், அட்டைப்படமாக வெளியான நம்மாழ்வாரின் ஓவியத்தை, பெரிய வடிவில் புத்தகத்துடன் சேர்த்து வழங்குமாறு வாசகர்கள் கேட்டிருந்தனர்.

புத்தகத்துடன் கொடுக்கும்போது, மடிப்புகள் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், விகடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். இதைப் பசுமை விகடன் மற்றும் விகடன் இணையதளம் வாயிலாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த ஓவியத்தைப் பதிவிறக்கம்செய்து, தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தப் படம் இங்கே உங்களுக்காக...
நம்மாழ்வாரின் ஓவியத்தை High Quality-யில் டவுன்லோடு செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்யவும்!
நம்மாழ்வாரின் ஓவியத்தை மொபைல் வால்பேப்பராக வைப்பதற்கான படம் கீழே...
