Published:Updated:

‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

‘‘ஏ1, ஏ2 பாலை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

கூட்டம்பா.ஜெயவேல் - படங்கள்: தே.சிலம்பரசன்

‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

கூட்டம்பா.ஜெயவேல் - படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:
‘‘ஏ1, ஏ2 பாலை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

ண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கடுகுப்பட்டுக் கிராமத்தில் ‘கரிம விவசாயிகள் கட்டமை’ப்பின் 18-ம் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, இயற்கை இடுபொருள் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசிய கரிம விவசாயிகள் கட்டமைப்பின் நிறுவனர் முனைவர் அரு.சோலையப்பன், “தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்கள் பலரும் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தை நோக்கி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ‘எடுத்த எடுப்பிலேயே, வேலையை விட்டுவிடாமல், பகுதி நேரமாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும். விடுமுறை நாள்களில் தோட்டத்துக்கு வந்து விவசாயம் செய்து பழகி, பிறகு விவசாயம் சரிப்பட்டு வந்தால் மட்டுமே வேலையை விட வேண்டும்’ என்று நான் அறிவுறுத்தி வருகிறேன். இயற்கை விவசாயத்தின் பக்கம், விவசாயிகள் திரும்பி வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞானிகள், முன்னோடி விவசாயிகள் வந்துள்ளனர். இவர்களின் அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

‘‘ஏ1, ஏ2 பாலை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் பேராசிரியர் முனைவர் குமாரவேல், “இயற்கை விவசாயத்துக்குக் கால்நடைகள் அவசியம். கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி நாங்கள் விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன்பலனாக நாட்டு மாடுகள், ஆடுகள், நாட்டுக்கோழிகள் போன்றவற்றை விவசாயிகள் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், புலிக்குளம் போன்ற நாட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகள் விரும்பிக் கேட்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில், நாட்டு மாடுகளுக்கு அதிகத்தேவை இருப்பதால், நாட்டு மாடுகளை வளர்த்து கிடேரிகளாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

மாடுகளுக்கு வரும் சின்னச்சின்ன நோய்களுக்கு எல்லாம் டாக்டரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்காமல், கை வைத்தியம் செய்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாகப் பால் மாடுகளுக்கு அதிகமாக வரும் மடிவீக்க நோய்க்கான இயற்கை வைத்திய முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஏ1, ஏ2 பாலை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

ஒரு மடல் சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் தூள், கொட்டைப்பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து அரைத்துக்கொண்டு, சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வுருண்டையுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு ஏழுமுறை மடியில் தடவி விட வேண்டும். இப்படி ஐந்து நாள்கள் செய்துவந்தால், மடிவீக்க நோய் குணமாகிவிடும்.

அதேபோலப் பரிசோதனை முறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். பாலைச் சோதனை செய்து மடிவீக்க நோயைக் கண்டுபிடிப்பதற்காக எளிய கருவியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இரண்டு சொட்டுப் பாலில் இந்த மருந்தை விடும்போது, பால் நீல நிறமாக மாறினால் மடி வீக்க நோய் என்று அர்த்தம். இந்தச் சோதனையை விவசாயிகளே எளிதாகச் செய்ய முடியும்.

‘‘ஏ1, ஏ2 பாலை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

அதேபோல, பாலில் வெளிநாட்டு மாட்டினங்களின் பாலையும், நாட்டு மாட்டுப் பாலையும் எளிதாகக் கண்டறிய முடியும். இதற்காக நாங்கள் உருவாக்கியிருக்கும் அட்டையில், இரண்டு சொட்டு பாலை விடவேண்டும். அது அட்டையில் காய்ந்துவிடும். அடுத்த 24 மணிநேரத்தில், சென்னை மாதவரத்தில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டுவந்தால், அந்தப்பால் ஏ1 (வெளிநாட்டு மாடு) ஏ2 (நாட்டு மாடு) இனத்திலிருந்து கறக்கப்பட்டதா? என எளிதில் கண்டறிந்து விடுவோம். இதன் மூலம் நாட்டு மாட்டுப் பால் விற்பனை செய்பவர்கள், தங்களது பால் சுத்தமான நாட்டுமாட்டுப் பால் என இந்த ஆய்வு முடிவுபடி விற்பனை செய்ய முடியும். இதுபோன்ற எளிமையான, விவசாயிகளுக்குப் பயனுள்ள நுட்பங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளன’’ என்றார்.

முருகப்பா செட்டியார் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர் ரவிச்சந்திரன். “நிலத்தில் ஆர்கானிக் கார்பன் அதிகமாக இருந்தால்தான் மண்ணில் இடப்படும் ஊட்டச்சத்துகள் பயிருக்குக் கிடைக்கும்.

‘‘ஏ1, ஏ2 பாலை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!’’

தேங்காய் மட்டை உள்ளிட்ட தாவரக் கழிவுகளை மூட்டம் போட்டு எரித்து எடுக்கப்பட்ட கரிதான் பயோ கார்பன். வறட்சிப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குப் பயோ கார்பன் அதிகமாகத் தேவைப்படும்.

பயோ கார்பன், நிலத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். ஒரு கிராம் கார்பன் மூன்று கிராம் தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும். இதனால், நுண்ணுயிரிகள் அதிகரித்து, செடிகளுக்குத் தேவையான சத்துகள் எளிதில் கிடைக்கும்” என்றார். நிகழ்ச்சியின் நிறைவாக முன்னோடி விவசாயிகள் சுப்பு, கரும்பு தனபால், ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன்... போன்றவர்கள் தங்கள்து அனுபவங்களையும், இயற்கை இடுபொருள் தயாரிப்புக்குக் குறித்துச் செயல்முறை விளக்கத்தையும் அளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism