Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

அலங்கார மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 14, 15-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, ‘பாசன நீரைச் சேமிக்கும் தொழில்நுட்பமுறைகள்’ 21, 22-ம் தேதிகளில் ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 26, 27-ம் தேதிகளில் ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 27, 28-ம் தேதிகளில் ‘ஊறுகாய் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.


இயற்கை இடுபொருள்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 13-ம் தேதி ‘இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல்’, 15-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில்  தீவன வளர்ப்பு’, 22-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 27-ம் தேதி ‘காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716. 

கறவை மாடு வளர்ப்பு


கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 13-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு, 20-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.


மாடித்தோட்டம்

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 13-ம் தேதி ‘பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு’, 16-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி ‘வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள்’, 26-ம் தேதி ‘மீன் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பயறு வகைப் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

பால் பொருள்கள் தயாரிப்பு

திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 13-ம் தேதி ‘கறவை மாடுகள் வளர்ப்பு மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு’, 20-ம் தேதி ‘வெண்பன்றி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04175 206577.


நன்னீர் மீன் வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையத்தில் மார்ச் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ‘நன்னீர் மீன் வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு,தொலைபேசி: 04652 286107

மண்வள மேம்பாடு


சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 13-ம் தேதி ‘மண் வள மேம்பாடு’, 15-ம் தேதி ‘உளுந்து மதிப்புக் கூட்டல்’, 16-ம் தேதி ‘கோடைக்காலக் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

கட்டணப் பயிற்சிகள்

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 23, 24, 25 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைப் பயிற்சி’ நடைபெறவுள்ளது.

முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ 450. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 98424 33187, 0431 2331879.


அசோலா வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 24-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism