Published:Updated:

‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’

‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’

நாட்டு நடப்புஆறுச்சாமி

‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’

நாட்டு நடப்புஆறுச்சாமி

Published:Updated:
‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’

ண்மையில் நபார்டு வங்கியின் மாநிலக் கடனுதவிக் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலக் கடனுதவி மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுத் தமிழகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசும்போது, “மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்துடன் இணைந்து, நபார்டு உதவியோடு விரைவில் திண்டிவனத்தில் ஓர் உணவுப் பூங்க அமைக்கப்பட இருக்கிறது.

மேலும் பத்து மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த உணவுப் பூங்காக்களில் தனியார் முதலீடுகள் அத்தியாவசியமானவை என்பதால், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனையும், கடனுதவியும் அளித்து உதவ வேண்டும்.

கிராமச்சாலைகள் முதல் பாடசாலைகள் வரை, கால்நடை மருத்துவ மையங்கள் முதல் மீன்பிடித் துறைமுகங்கள் வரை, விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் முதல் பொது விநியோகக் கிடங்குகள் வரை அனைத்துவிதமான கிராம முன்னேற்றத் திட்டங்களிலும் நபார்டு வங்கி தனது ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு நிதியுதவி அளித்து வருவதை நான் இங்கே மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன்மூலமாக 6.14 லட்சம் ஹெக்டேர் அளவு நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளன. சுமார் 57 ஆயிரம் கி.மீ தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 86 ஆயிரத்து 973 மீட்டர் நீளத்துக்குப் பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. 13.02 லட்சம் டன் கொள்ளளவுக்குச் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர, 36 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன’’ என்றார்.

‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’

கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய நபார்டு தலைமைப் பொதுமேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா, ‘‘மாநில வளர்ச்சிக்கான தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் நபார்டு கை கொடுக்கும். நபார்டு தயாரித்துள்ள இரண்டு லட்சம் கோடி மதிப்பிலான வழிகாட்டு அறிக்கையின் அடிப்படையில் வங்கிகள் 2018-19-ம் ஆண்டுக்கான மாநிலக் கடன் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதைச் சாதிப்பதற்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி “உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சந்தைக்கு வரும் வகையில், தொடர்ச்சியான வசதிகள் செய்யப்படவேண்டியது இன்றைய விவசாயத்தில் முக்கியச் சவாலாக இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.398 கோடி செலவில் விவசாய உற்பத்திப்பொருள்கள் சேகரிப்பு மையங்களையும், பதப்படுத்தும் மையங்களையும் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. ’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இயற்கை விவசாயத்தில் ஜெயித்துவிட்டேன்!’’


கருத்தரங்கின் ஒரு பகுதியாக நபார்டு பல்வேறு விருதுகளை வழங்கியது. பாரத ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஈரோடு மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தண்ணீர்ப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மைக்காக நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன், பூமி டிரஸ்ட், மைராடா ஆகிய நிறுவனங்கள் விருதுகள் பெற்றன.

தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவில் நபார்டுடன் இணைந்து சமூகப் பணியாற்றிவரும் ஹேண்டு இன் ஹேண்டு, டால்மியா சிமென்ட் நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம், விருதுநகர் வள்ளலார் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம், சேலம் குளுமை பால் உற்பத்தி நிறுவனம், திண்டுக்கல் ஆகியவை சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான விருதுகளைப் பெற்றன. திருநெல்வேலி மாவட்டம் ‘புளியங்குடி’ அந்தோணிசாமிக்குச் சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது வழங்கப்பட்டது.

‘‘இயற்கை விவசாயத்தின்மூலம், நான் ஜெயித்துவிட்டேன். இயற்கை விவசாயத்தை நம்பினால் நிச்சயம் லாபம் கிடைக்கும். கடன் வாங்கி நொந்து நின்றபோது, இயற்கை விவசாயம்தான் எனக்குக் கைகொடுத்தது. என்னுடைய தோட்டத்தைப் பல வெளிநாடுகளிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் பாராட்டிச் செல்கிறார்கள். ஆனால், பக்கத்து ஊரிலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் அருமை தெரியவில்லை. இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு, என் பண்ணை பாடம் சொல்லிக்கொடுக்கும் பயிற்சிக்களமாக உள்ளது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism