Published:Updated:

அலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்!

அலட்சிய அதிகாரிகள்...  விரக்தியில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்!

பிரச்னைஇ.கார்த்திகேயன் - படங்கள்: ரா.ராம்குமார்

அலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்!

பிரச்னைஇ.கார்த்திகேயன் - படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
அலட்சிய அதிகாரிகள்...  விரக்தியில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்!

‘ஒகி புயல் ஓய்ந்து மூன்று மாதங்களாகியும் சேதமுற்ற பயிர்களுக்கான இழப்பீட்டுத்தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை’ எனப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்.

கடந்த நவம்பர் 30-ம் தேதி மையம் கொண்ட ஒகி புயலால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அமைச்சர்கள் மற்றும் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு சேதக் கணக்கீட்டுப் பணியில் ஈடுபட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழுவும் ஆய்வு செய்தது. ஆனால், இதுவரை ஆய்வறிக்கை குறித்து எந்த விஷயமும் வெளியிடப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

அலட்சிய அதிகாரிகள்...  விரக்தியில் விவசாயிகள்!

‘புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கு உடனடி நிவாரண உதவியாக 325 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதில் தமிழகத்துக்கு 280 கோடி ரூபாயும் கேரளாவுக்கு 76 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்’ என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணம் மட்டுமே, இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படாததால், மறுநடவு செய்யக் கூட வழியின்றி விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலட்சிய அதிகாரிகள்...  விரக்தியில் விவசாயிகள்!


இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்டப் பாசன சபைத்தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, “ஒகி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம்தான். 30 லட்சம் ரப்பர் மரங்கள், 75 ஆயிரம் தென்னை மரங்கள், 85 லட்சம் வாழை மரங்கள், 50 ஆயிரம் பாக்கு மரங்கள், ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு ஆகியவை முற்றிலும் சேதமாகியுள்ளன. மேலும், 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர் செய்யப்பட்டிருந்த மா, பலா, பனை, முந்திரி, கிராம்பு, மிளகு, கோகோ போன்றவையும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

‘சில மாதங்களுக்கு முன்பு நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தின்போது சேதமடைந்த மரங்களுக்கு, ஒரு ரப்பர் மரத்துக்கு 10,000-15,000 ரூபாய், ஒரு தென்னை மரத்துக்கு 4,000-7,000 ரூபாய், ஒரு வாழை மரத்துக்கு 400-700 ரூபாய், ஒரு பாக்கு மரத்துக்கு 1,000-2,000 ரூபாய் என்ற மதிப்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதே மதிப்பில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். உடனடியாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என முதல்வர், துணை முதல்வர், பிரதமர் என அனைவருக்கும் மனு அளித்தோம். இழப்பீட்டுத்தொகை வழங்கிட வலியுறுத்தி ஆர்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், முழுக் கடையடைப்பு எனப் பல போராட்டங்களை நடத்தினோம். அதன்பிறகு வாழை, நெல், மரவள்ளி, காய்கறிகள் தவிர நிரந்தரப்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 18,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அலட்சிய அதிகாரிகள்...  விரக்தியில் விவசாயிகள்!

அந்தத் தொகையையும் இதுவரை வழங்கவில்லை. விண்ணப்பித்த விவசாயிகளில் பலருக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் குறைவான தொகையே கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளைக் கிள்ளுக்கீரையாகத்தான் நினைக்கிறார்கள ஆள்பவர்கள்” என்றார்.

நிறைவாகப் பேசிய வின்ஸ் ஆன்றோ, “புயலில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றியபோது மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் மின்சாரம் தாக்கியது போன்ற சம்பவங்களால் 25 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த துணை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒரு விவசாயி பலியாகியுள்ளார். இவர்களின் குடும்பத்தினருக்கும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை” என்றார் விரக்தியாக.

ரூ.9 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது!

புயல் நிவாரணம் குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டியனிடம் பேசினோம். “நிவாரணத் தொகைக்காக விண்ணப்பித்த 4,857 விவசாயிகளில் 4,703 பேருக்கு 75,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 154 விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண் தவறாக உள்ளதால் பணம் செலுத்த இயலவில்லை. ஒரு ஹெக்டேர் தென்னைக்கு 18,000 ரூபாய் எனவும் ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு 13,500 ரூபாய் எனவும் வேளாண்மைத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வாழை, ரப்பர் போன்ற மரங்கள் பயிர்செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத்துறை சார்பாக 9 கோடி ரூபாய்க்குமேல் நிவாரணத்தொகை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism