Published:Updated:

உணர வேண்டும்!

உணர வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணர வேண்டும்!

உணர வேண்டும்!

உணர வேண்டும்!

உணர வேண்டும்!

Published:Updated:
உணர வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணர வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்! 

பூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டம்-2017 என்பதைத் தற்போது கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. பூச்சிக்கொல்லி விஷப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவற்றை முறைப்படுத்துவதுதான் சட்டத்தின் நோக்கம் என்கிறது அரசு. ஆனால், ‘தயாரிப்பு நிறுவனங்களைப் பாதுகாக்கவே இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. விவசாயிகளின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சுகாதாரம் உள்ளிட்டவை பற்றியெல்லாம், இச்சட்டத்தில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை’ என்று விவசாயிகள் மற்றும் சூழலியலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

‘அரசு எதைச் செய்தாலும், எதிர்ப்பு காட்டுவதே வேலை’ என்று சர்வசாதாரணமாக யாரும் இதைக் கடந்துவிட முடியாது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பூச்சிக்கொல்லி விஷத்தை வயல்வெளிகளில் தெளிக்கும் பணியின்போது, பாதிக்கப்படும் மற்றும் உயிரை இழக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது. மண்புழுக்கள் உள்ளிட்ட அத்தனை மண்ணுயிரிகள் மட்டுமல்லாது, எங்கோ வானத்தில் வட்டமிடும் வல்லூறுகள் வரை இதன் பாதிப்பு நீண்டுகொண்டே இருக்கிறது. இவையெல்லாம் ஆய்வுப்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டு ஆண்டுகள் பலவாகின்றன. ஆனாலும், பூச்சிக்கொல்லி விஷ விற்பனைக்குக் கேள்வியே இல்லாமல் சிவப்புக் கம்பளம் விரிப்பது தொடர்கிறது.

இச்சட்டம் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்று. ஆனால், அதைச் சொல்லியே, இந்தச் சட்டத்தைக் கண்மூடித்தனமாக நிறைவேற்றுவது நல்லதல்ல. காங்கிரஸின் தவறுகளையெல்லாம் களைவதற்காக ஆட்சி பொறுப்பேற்றிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு அது அழகும் அல்ல!

பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு; பயன்படுத்தும் விவசாயிக்குக் காப்பீடு  உள்ளிட்ட முக்கியமான அம்சங்களையும் சட்டத்தில் சேர்ப்பதுதான், விவசாயிகளையும் இந்த மண்ணையும் வாழவைப்பதாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

-ஆசிரியர்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism