Published:Updated:

பயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்

கே.குணசீலன்
பயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்
பயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்

விவசாயிகளிடம் 'உழவர் ரதம்' என்கிற பெயரில் பயிர் காப்பீடு குறித்து  நாட்டுப்புறக்  கலைகள்மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமான ரதத்தை தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார். இந்த ரதத்தில் மாவட்டம் முழுவதும் கலைஞர்கள் சென்று நாட்டுப்புறக் கலைகள் இசைத்து, பாட்டுப் பாடி பயிர் காப்பீடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், இன்று 'உழவர் ரதம்' என்கிற பெயரில் பயிர்  காப்பீடுகுறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் ரதத்தை ஆட்சியர் அண்ணாதுரை கொடியசைத்துத்  தொடக்கி வைத்தார். முன்னதாக, நாட்டுப்புறக் கலைஞர்கள் பறை இசைத்து நடனமாடினர். மேள தாளம் மற்றும் நாதஸ்வரமும் இசைக்கப்பட்டன. அதன் பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு, சம்பா  மற்றும் தாளடி பருவத்துக்கு பயிர் காப்பீடு செய்வதுகுறித்து, விவசாயிகளிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு தொடர்பான விளம்பரப் பலகைகள் வைப்பது, கலைக் குழுவினர்  வேளாண்மைத் துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி இந்த  ரதம் மூலம், தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கங்களுக்கும் சென்று, விவசாயிகளிடையே பயிர்க் காப்பீடுகுறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

இதன்மூலம் பயிர்க் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம்குறித்து விவசாயிகளிடையே விளக்கப்படும். மேலும், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படுவதோடு,பயிர்க் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தும் முறைகள் குறித்து  எடுத்துரைக்கப்படும் என்று கூறினார். விவசாயிகள் பயிர்காப்பீடு குறித்த அவசியத்தை உணர்த்தவும்,அதில் உள்ள பயன்கள் அவை விவசாயிகள் எளிதாகப் புரிந்து கொள்ளவுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.