Published:Updated:

அலட்சியத்தால் வீணான 14,000 நெல் மூட்டைகள்; தொடரும் அரசாங்க அவலம்

வெட்டவெளியில் மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகள்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச் செல்லாமலும் தேக்கி வைப்பதால் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகின்றன.

அலட்சியத்தால் வீணான 14,000 நெல் மூட்டைகள்; தொடரும் அரசாங்க அவலம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச் செல்லாமலும் தேக்கி வைப்பதால் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகின்றன.

Published:Updated:
வெட்டவெளியில் மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் திருவெற்றியூர், புல்லுர், கற்காத்தகுடி, பாண்டுகுடி, மங்கலக்குடி , திருவாடானை, நிலமழகியமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன.

இப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி வருகிறது. இந்நிலையில் நிலமழகிய மங்கலத்தில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 14,000 நெல் மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

பாக்கியநாதன்
பாக்கியநாதன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன், ``அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச் செல்லாமலும் தேக்கி வைப்பதால், மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய்கூட அதிகாரிகள் கொடுப்பதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நெல் சேமிப்பு கிடங்கு தேவை எனத் தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். கடந்த வேளாண் பட்ஜெட்டில்கூட சேமிப்புக் கிடங்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், தமிழக அரசு எங்களை ஏமாற்றி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி. இங்கு ஒரு போக சாகுபடி செய்வதற்கே விவசாயிகள் படாதபாடு படுகின்றனர். அப்படி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனையவிட்டு வீணாக்குவதைப் பார்க்கும்போது வேதனையாக'' உள்ளது என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism