Published:Updated:

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை! - கேரளாவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை! - கேரளாவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்
News
முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை! - கேரளாவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை! – கேரளாவுக்கு எதிராக கொந்தளிக்கும் விவசாயிகள்.

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்துவருவது முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

123 ஆண்டுகள் பழைமையான முல்லைப்பெரியாறு அணையினால், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்கள் நேரடியாகப் பயன்பெறுகிறார்கள். 136 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளக் கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு அணையின் மொத்த கொள்ளளவான 152 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் பெய்த கனமழையினால், கேரளாவின் அனைத்து அணைகளும் நிரம்பியது. அதைக் காரணமாகக் கூறி, முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டது கேரள அரசு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய 7 நிபந்தனைகளுடன் மத்திய அமைச்சகம் கேரள அரசுக்கு அனுமதியளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதியளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகளிடம் பேசியபோது, ``உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு நடந்துகொள்கிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எதுவும் செய்ய முடியாது. அப்படி இருக்கையில், புதிதாக அணை கட்டப்போகிறோம் என்று கேரள அரசு கொடி பிடிப்பதற்குக் காரணம் சபரிமலைப் பிரசனையை திசைதிருப்பவே என்று நினைக்கிறோம். அப்படி புதிய அணை தொடர்பாக கேரள அரசு முயற்சி செய்தால் மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தைச் சந்திக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்.” என்றனர்.