தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

மா சாகுபடி (Mango Cultivation IIHR)

மாம்பழச் சாகுபடி குறித்த தகவல்களைக் கொண்ட இச்செயலியைப் பெங்களூருவில் இருக்கும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டும்தான் இச்செயலியில் தகவல்களைப் பெற முடியும். கன்று நடுவது, நிலத்தைத் தயார் செய்வது, நீர் மேலாண்மை போன்றவற்றிலிருந்து அறுவடை வரை எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், ரகங்கள், நோய் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, தொழில்நுட்பங்கள், சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்கள் ஆகியவை குறித்தும் தனித்தனியாக விளக்கப்பட்டிருக்கின்றன.

இச்செயலியை https://bit.ly/2GfawfS என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.

விவசாயக் கணக்கர்

விவசாயமாக இருந்தாலும் சரி, மற்ற தொழில்களாக இருந்தாலும் சரி... வரவு-செலவுக் கணக்கு முக்கியமானது. முன்பெல்லாம் தினசரி வரவு-செலவுக் கணக்குகளை ‘டைரி’ அல்லது கணக்கு ‘நோட்’டுகளில் எழுதி வைப்பார்கள். தற்போது டைரி எழுதும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், கணக்கு வழக்கு எழுதுவதை எளிமையாக்குகிறது, இந்தச் செயலி. இதன் மூலமாக வரவு-செலவுகளை எளிதாக நிர்வகிக்க முடியும்.

இதில் வரவு-செலவு அறிக்கை, நினைவூட்டல், அமைப்பு மற்றும் நகல் மீட்டல் என்ற பகுதிகள் தரப்பட்டுள்ளன. வரவு-செலவு என்ற பகுதியில் விவசாயம் தொடர்பான செலவுகளை நாள், நேரம், எதற்காகப் பணம் வரவு வைக்கப்படுகிறது அல்லது செலவு செய்யப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பெடுத்துக் கொள்ள முடியும்.

புகைப்படங்களை இணைக்கும் வசதியும் இதில் இருக்கிறது. அறிக்கை என்ற பகுதியில் சேமித்து வைத்த மொத்த வரவு-செலவு கணக்குகளையும் அறிந்துகொள்ள முடியும். யாருக்கேனும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதை நினைவூட்டுவதற்காக இதில் இருக்கும் நினைவூட்டும் சேவையைப் பயன்படுத்தலாம். நகல் மீட்டல் என்ற பகுதியில் கணக்குகளை சி.எஸ்.வி ஃபைலாக (எக்ஸெல் ஷீட் போன்று) மாற்றிக்கொள்ள முடியும்.

இச்செயலியை https://bit.ly/2KY8Mvj என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.