Published:Updated:

‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”

‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”
பிரீமியம் ஸ்டோரி
‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”

விழாகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் ‘கிரியேட்-நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் சார்பில்... கடந்த மே 21, 22 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான பாரம்பர்ய நெல் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக, விவசாயிகள் திரண்டு ஊர்வலமாக விழா நடக்கும் அரங்கத்துக்கு வந்தனர். 

‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”

விழாவின் ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமனின் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்... வேளாண் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”

விழாவில் பேசிய ‘சர்வதேச உயிரின பன்மய அமைப்பு’க்கான தெற்காசியப் பிரதிநிதி  முனைவர் கிருஷ்ணகுமார், “நமது உணவில் 75 சதவிகிதம் நெல், கோதுமை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு ஆகிய நான்கு விளைபொருள்கள்தான் இடம்பெற்றுள்ளன. இவை கார்போஹைட்ரேட்டை மட்டுமே அதிகளவில் கொண்ட உணவுகள். ஆனால், கிட்டத்தட்ட 150 வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள உணவுகளை நாம் கண்டு கொள்வதேயில்லை. நெல் போலவே மற்ற தானியங்களிலும் ஏராளமான ரகங்கள் உள்ளன. அவற்றையும் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ள, ஒரே வகையான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உண்டாகின்றன. அவற்றையே தொடர்ந்து விளைவிப்பதால்தான் மண்ணிலும் சத்துகள் குறைகின்றன. பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாப்பதுபோல், மற்ற பயிர்கள், மூலிகைகள், காய்கறி ரகங்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும். கிராமங்கள் தோறும் சமூக விதை வங்கிகளை உருவாக்க வேண்டும். பயிர்களின் மகரந்தங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். முன்பு தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் அதிகளவில் இருந்தன. அதனால், ஒரேவகையான பயிரில் இயற்கையாகவே பல ரகங்கள் உருவாயின. தற்போது இப்பூச்சி ரகங்கள் குறைந்து போய்விட்டதால், புதிய ரகங்கள் உருவாவது குறைந்துவிட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயிர் ரகங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தவுள்ளோம். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். 

‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”

தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைக்கான ஆணையத்தின் பதிவாளர் ராகேஷ் சந்திரா அகர்வால்  பேசும்போது, “விவசாயிகள் உருவாக்கக்கூடிய ரகங்களை எங்களது ஆணையத்தில் பதிவு செய்து, ‘இது தங்களது கண்டுபிடிப்பு’ என்ற ‘அறிவுசார் சொத்துரிமை’யோடு, விதைகளை விற்பனை செய்யலாம். விவசாயிகள், தாங்கள் உருவாக்கக்கூடிய ரகங்களை எங்களது ஆணையத்தில் பதிவுசெய்தால், அதனை ஆய்வு செய்து அறிவுசார் சொத்துரிமையை வழங்கி வருகிறோம்.  கடந்த 2005-ம் ஆண்டு டில்லியில் எங்களது ஆணையம் உருவாக்கப்பட்டது. இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்தான். தமிழ்நாட்டு விவசாயிகளும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும். விவசாயிகள் உருவாக்கிய புதிய ரகத்துக்கு அறிவுசார் சொத்துரிமை கேட்டு விண்ணப்பிக்கக் கட்டணம் கூடக் கிடையாது” என்றார்.  விழாவில் பாரம்பர்ய விதைகளுக்காகச் செயலாற்றி வரும் சர்வதேச உயிரின பன்மய அமைப்பின் தெற்காசிய பிரதிநிதி முனைவர் கிருஷ்ணகுமாருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.