விலங்குகளை கொல்ல கொய்யாவில் வெடிகுண்டு சிக்கி கொண்ட விவசாயி (படம்)

விருதுநகர்: கொய்யா பழத்தில் நாட்டு வெடி குண்டுகளை வைத்து விலங்குகளை கொல்ல முயன்ற விவசாயியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 4 நாட்டு வெடி குண்டுகளையும், கொய்யா பழங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள காட்டு பன்றி உள்பட வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (30). விவசாயியான இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் விவசாய நிலங்கள் உள்ளது. இன்று காலை மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் ஒரு பையில் கொய்யாப் பழங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்து வந்த வனத்துறை ரேஞ்சர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறையினர் சந்தேகப்படும் படியாக இருந்த ராஜனை அழைத்து விசாரித்து அவரிடம் இருந்த பையை சோதனை போட்டனர். அப்போது, கொய்யா பழங்களை இரண்டாக வெட்டி அதற்குள் சிறிய நாட்டு வெடி குண்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது.
##~~## |
படம்: