Published:Updated:

மூன்று மாவட்டப் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மூன்று மாவட்டப் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!
மூன்று மாவட்டப் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மூன்று மாவட்டப் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீகப் பாசன பகுதிகளின் விவசாயப் பயன்பாட்டுக்காக இன்று வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்துவைத்தார்.

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீகப் பாசனப்பகுதி 3 மற்றும் வைகை பூர்வீகப் பாசனப்பகுதி 2-ல் உள்ள 5 கண்மாய்களுக்கு 14.11.2018 முதல் 21.11.2018 வரை 7 நாள்களுக்கு 1,525 மில்லியன் கன அடியும், இதர வைகை பூர்வீகப் பாசனப்பகுதி 2-க்கு 23.11.2018 முதல் 27.11.2018 வரை 4 நாள்களுக்கு 631 மில்லியன் கன அடியும், பகுதி 1-ஐச் சார்ந்த 4 கண்மாய்களுக்கு 28.11.2018 முதல் 30.11.2018 வரை இரண்டு நாள்களுக்கு 69 மில்லியன் கனஅடி தண்ணீரை விரகனூர் மதகணையில் வழங்கிடவும், இதர வைகை பூர்வீகப் பாசனப்பகுதி 1-க்கு 348 மில்லியன் கனஅடி தண்ணீரைப் பகுதி 1-ல் உள்ள நிலையூர் கால்வாயில், தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும்.

இதற்கு முன் 28.11.2015 முதல் 12.12.2015 வரை 2,589 மில்லியன் கன அடி தண்ணீர் ராமநாதபுரத்துக்கும் (Reach 3) 13.12.2015 முதல் 21.12.2015 முடிய 1063 மில்லியன் கனஅடி தண்ணீர் சிவகங்கை மாவட்டத்துக்கும் (Reach 2) 24.12.2015 முதல் 07.01.2016 முடிய 938.50 மில்லியன் கன அடி தண்ணீர் மதுரை மாவட்டத்துக்கும் (Reach 1) திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு