Published:Updated:

தமிழக அணைகள் தொடர்பான வழக்கு - தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி உட்பட அனைத்து ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் தொடர்பான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரங்கசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ``முக்கொம்புத் தடுப்பு அணையால் ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வந்தனர். இந்த அணையின் அருகே மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. மணல் அள்ள உரிமம் பெற்றவர்கள் முறைகேடாக அதிக அளவு மணல் அள்ளிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். இதனாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் பராமரிப்புப் பணி நடைபெறாததாலும் 182 ஆண்டு பழைமையான முக்கொம்பு அணை உடைந்தது.

எனவே முக்கொம்பு அணை பராமரிப்புப் பணி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி பாலாறு, தென்பெண்ணை உட்பட அனைத்து ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், தடுப்பு அணைகள் மற்றும் கதவு அணைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் " எனத் தனது மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இது தொடர்பாக தலைமைச் செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு