Published:Updated:

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”
பிரீமியம் ஸ்டோரி
“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

Published:Updated:
“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”
பிரீமியம் ஸ்டோரி
“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

விவசாயிகள் போராட்டம்... கடந்த 20 ஆண்டுகளில் இந்த இரு சொற்கள் இல்லாமல் நாளிதழ்கள் அச்சான நாள்களே இந்தியாவில் இருக்காது. இத்தனை ஆண்டுகளாக இவர்களின் சோகக்குரல் எதிரொலித்தாலும், என்றைக்குமே தேசம் முழுமையாக அதற்குச் செவிமடுத்ததில்லை. விவசாயிகளின் பிரச்னையைத் தங்கள் பிரச்னையாகப் பெரும்பான்மை மக்கள் நினைத்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றி எழுதியவர்கள், மகாராஷ்ட்ர விவசாயிகள். தேசத்தின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில், கடந்த மார்ச் மாதம் விவசாயிகள் நடத்திய பிரமாண்ட பேரணி, முதல்முறையாக மொத்த தேசத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. சமீப காலத்தில் இவ்வளவு பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய விவசாயிகளின் போராட்டம் வேறெதுவும் இல்லை. இதை வெற்றிகரமாக நடத்தியது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவான அகில இந்திய கிசான் சபா. இதன் தலைவரான அசோக் தவாலே, சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது அந்த அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

‘‘மகாராஷ்ட்ராவில் விவசாயிகளுக்கு என்ன பிரச்னை?’’

‘‘நாடெங்கும் உள்ள விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளின் ஒருமித்த முகம்தான் மகாராஷ்ட்ர விவசாயிகளின் போராட்டம். நாங்கள் ஐந்து முக்கியமான கோரிக்கைகளை அரசிடம் வைத்தோம். முதலாவது, விவசாயக் கடன் தள்ளுபடி. இரண்டாவது, எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம். மூன்றாவது, விவசாயிகளுக்கான நில உரிமையை உறுதிசெய்வது. நான்காவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம். ஐந்தாவது, பொதுவிநியோக முறையைச் சீர்படுத்துவது. இவைதவிர, வேறு சில கோரிக்கைகள்.

25 ஆயிரம் விவசாயிகளுடன்தான் போராட்டம் தொடங்கியது. மார்ச் 6-ம் தேதி, நாசிக்கில் பயணத்தைத் தொடங்கினோம். 12-ம் தேதி மும்பையை அடைந்தபோது எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தொட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சுமார் 8,000 விவசாயிகள், பெண்கள்.

எவ்வித வசதிகளுமின்றி ஏழு நாள்களும் எங்களுடன் பெண்கள் நடந்தே வந்தனர். பெரும்பாலானோர் வெறும் கால்களுடன் நடந்துவந்தனர். சிலரின் காலணிகள் ஆங்காங்கே பிய்ந்துபோயின. அந்தச் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் எங்களுடன் வந்தனர். ஒரு பெண் விவசாயியின் காலில் ஒரு பெரிய முள் தைத்துவிட்டது. தொடர்ந்து நடப்பது சிரமம் என்பதால், ஜீப்பில் ஏறி அமர்ந்துகொள்ளுமாறு கூறினோம். அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்தான், எங்கள் போராட்டம் முழுவதும் ஊக்கமாக இருந்தது. ‘நான் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நடந்து செல்வதற்காகவே இங்கு வந்தேன். நடந்தே தீருவேன். வருங்காலத்தில் என் மகனும் பேரனும் என்னைப்போல நடக்கக்கூடாது என்பதற்காகவே நான் நடக்கிறேன்’ என்றார் அவர்.

முதல் இரண்டு நாள்களில் அனைத்து ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்டோம். அந்தச் சமயத்தில், எங்களுக்குக் கைகொடுத்தது சமூக வலைதளங்கள்தான். பயணத்தின் மூன்றாவது நாள், ஒரு மலைப்பகுதி வழியாக நடந்து வந்தபோது, மலையின் உச்சி மீதிருந்து எங்கள் இயக்கத்தின் செயலாளர் அஜித் நவாலே ஒரு வீடியோவை எடுத்தார். அதை, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கொடிகளுடனும், சிவப்புத் தொப்பிகளுடனும் நடந்துவரும் அந்த வீடியோ வைரலானது. அதன்பின்னர் முன்னணி ஊடகங்களும் எங்களை நோக்கி வந்தன.  

“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது!”

நாங்கள் வியந்த இன்னொரு விஷயம், பொதுமக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு. ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெறுங்கால்களுடன் மும்பையை நோக்கி அலையலையாக வந்ததை அவர்கள் கண்டனர். இதற்கு முன்பு அவர்கள் இப்படி அமைதியான ஒரு பெருங்கூட்டத்தைப் பார்த்திருக்கவில்லை. இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் எங்களுக்கு உதவுவதற்காக ஓடிவந்தனர். ஜோடி ஜோடியாகக் காலணிகளைக் கொண்டுவந்து விவசாயிகளுக்குத் தந்தனர். உணவு தந்தனர். குடிக்க நீர் கொடுத்து உபசரித்தனர். மும்பைக்குள் நுழைந்தபோது, எங்களை அன்புடன் வரவேற்றனர்.

இந்தப் பயணத்தின் இடையில்தான், எங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியவந்தது. அதாவது, நாங்கள் மும்பையை அடையவிருந்த அதே 12-ம் தேதிதான், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவிருந்தது. ஒருவேளை நாங்கள் அன்று காலை நகருக்குள் நுழைந்தால், நிச்சயம் போக்குவரத்து பாதிக்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளிடம் உரையாடினோம். ‘நாளை காலை கிளம்பி மும்பையை அடைந்தால், எப்படியும் போக்குவரத்து பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவே கிளம்பி அதிகாலையே மும்பையை அடைவதுதான் அந்த வழி’ எனக் கூறினோம். இதற்கு ஆதரவளிப்பவர்கள் மட்டுமே கையை உயர்த்துங்கள் என்றோம். அந்தத் தருணம் எங்களின் வாழ்க்கையிலேயே மறக்க முடியாதது. காரணம், அத்தனை விவசாயிகளும் ஒரே நேரத்தில் கையை உயர்த்தி நள்ளிரவுப் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த முடிவு, நாடு முழுவதுமிருந்து விவசாயிகளுக்கு ஆதரவும் பேரன்பும் கிடைக்க உதவியாக இருந்தது.  மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது.’’

‘‘இந்தப் போராட்டத்தால் நீங்கள் சாதித்தது என்ன?’’

‘‘எங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற பி.ஜே.பி அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது. அதில் சிலவற்றைத் தற்போது அமல்படுத்தியுள்ளது. போராட்டம் என்பது ஏதோ ஒரு தருணத்தில் நடந்து முடிந்துவிடுவது அல்ல; அது ஒரு தொடர் நிகழ்வு. அதனை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதனால்தான், இந்திய விவசாயிகளின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத மத்திய அரசைப் பதவி விலகச் சொல்லி ஆகஸ்ட் 9-ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நாடுமுழுவதும் நடத்தவிருக்கிறோம்.’’

‘‘டெல்லியின் சாலைகளில் உருள்வது முதல் சிறுநீர் குடிப்பது வரை எத்தனையோ முயற்சிகளை எடுத்தும்கூட, கடந்த ஆண்டு நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தேசிய அளவில் சென்றுசேரவில்லை. இது ஏன்?’’

‘‘தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பு கிடைக்காமல் போகக் காரணம், மத்திய அரசின் மெத்தனம்தான். பெரிய போர்களில் வெல்வதற்கு அதிகமான படைபலம் தேவை. எனவே, இன்னும் அதிகளவிலான விவசாயிகள் ஒன்றிணைந்து போராடினால், ஒருநாள் நிச்சயம் வெல்லலாம்.”

- ஞா.சுதாகர்