Published:Updated:

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

மானியம்த.ஜெயகுமார்

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

மானியம்த.ஜெயகுமார்

Published:Updated:
ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

மிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை’

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

(TANSEDA) மூலமாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வேளாண் வட்டாரங்களிலும்... நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகிய பயிர்களின் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். “தமிழ்நாடு முழுவதுமுள்ள 385 வேளாண் வட்டாரங்களில் (பிளாக்), 850 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளுக்காக 50% முதல் 60% வரை மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் விதைகள் இந்த மையங்களில் மானிய விலையில் கிடைக்கும். அந்தந்தப் பகுதியில் என்னென்ன பயிர்கள் அதிகம் விளையுமோ அந்தப் பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப் பயிர்களோடு மற்ற விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் (5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள்) மட்டுமே மானிய விலையில் விதைகளை வாங்க முடியும். மற்ற விவசாயிகள் முழுவிலையில் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

பல தனியார் கடைகளில் விதைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கத்துக்காகவே, இந்த விதை விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று நீடித்த நிலைத்த மானாவாரி திட்டம், விதைக்கிராமத் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் பயனடைபவர்களும் விதைகளை, மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும்.

ஆடிப்பட்டம் விதைப்புக்கேற்ற பருவம். அதிக மழை பெய்து நீர்வளம் நிறைந்திருக்கும் பகுதிகளில் நெல் போன்ற பயிர்களை விதைக்கலாம். மழை குறைவாகக் கிடைத்திருக்கும் பகுதிகள், மானாவாரி நிலங்கள் ஆகியவற்றில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களைப் பயிரிடலாம். அதற்கேற்றவாறு விதைகளை இருப்பு வைக்க வேளாண் வட்டார அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். விதை வாங்க விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வேளாண் வட்டார அலுவலகத்தை அணுகி விதைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் (டான்சிடா) மீனாக்குமரியிடம் பேசினோம். “வேளாண் வட்டார விதை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதைகளும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி ரகங்கள்தான். அவற்றிலும் நல்ல மகசூல் கொடுக்கக்கூடிய விதைகளைத்தான் விற்பனை செய்கிறோம். இந்த மையங்களில் விற்கப்படும் விதைகள், விவசாயிகளால் உற்பத்தி செய்து, விதைச் சான்றளிப்புத் துறையின் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட சான்றுவிதைகள்தான். அதனால், தரத்தைப் பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டியதில்லை. விவசாயிகள் தங்களின் தேவையைப் பொறுத்து விதைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

பொதுவாக, நெல் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும். திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் வித்துகள் நன்றாக விளையக்கூடிய சீதோஷ்ண நிலை இருப்பதால், அம்மாவட்டங்களில் எண்ணெய் வித்து விதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களில் பருத்திக்கும்; தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்டங்களில் துவரை உள்ளிட்ட பயறு வகைகளுக்கும்; நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றுக்கும்; டெல்டா மாவட்டங்களில் நெல் மற்றும் உளுந்து ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர மற்ற விதைகளையும் விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம். ஒட்டு ரக விதைகளை அரசு உருவாக்குவதில்லை. அதைத் தனியார் விதை நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. அதனால் அவ்வகை விதைகளுக்குப் ‘பின்னேற்பு மானியம்’தான் வழங்க முடியும்” என்றார்.

தொடர்புக்கு:

வேளாண் இயக்குநரகம்,
எழிலகம்,
சேப்பாக்கம், சென்னை-600 005.
தொலைபேசி: 044 28583323.

குறைந்த விலையில் மரக்கன்றுகள்

ஒவ்வொரு வேளாண் வட்டார அலுவலகத்திலும், தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள தோட்டக்கலைப் பண்ணைகளில் மா, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, புளி, பப்பாளி போன்ற பழமரக்கன்றுகள் மற்றும் தேக்கு, மலைவேம்பு, குமிழ், வேம்பு, பூவரசு, புங்கன், அசோகா, நாகலிங்கம் போன்ற மரக்கன்றுகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

விதை வாங்க வழிகாட்டும் உழவன் செயலி

உழவன் செயலி குறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் தட்சிணா மூர்த்தி, “வேளாண்துறை சம்பந்தப்பட்ட திட்டங்கள், விதை மற்றும் உர இருப்பு நிலை, வேளாண் கருவிகள் வாடகை மையம், பயிர்க்காப்பீடு விவரம், உதவி வேளாண் அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் எளிதாகத் தெரிந்துகொள்ள... தமிழக அரசால் இச்செயலி வெளியிடப்பட்டுள்ளது. இச்செயலியின் பயன்பாடு குறித்த தகவல், இன்னும் பல விவசாயிகளைப் போய்ச் சேர வேண்டி உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

இச்செயலியில் விதை இருப்புநிலை என்பதைக் கிளிக் செய்து சென்றால் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, தனியார் என்று மூன்று பிரிவுகள் இருக்கும். அதில் வேளாண் துறையைத் தேர்ந்தெடுத்துச் சென்றால் மாவட்டம், வட்டாரம், பயிர் என்று இருக்கும். அதில் தேவையான விவரங்களை இட்டு விதையின் இருப்பு, ரகம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும் www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்திலும் விதை, உர இருப்பு நிலையை அறிந்து கொள்வதோடு, வேளாண் அலுவலரையும் தொடர்புகொள்ள முடியும்” என்றார்.

வேளாண் விரிவாக்க மையங்களில் விற்கப்படும் விதைகளின் விவரம்

சிறுதானியங்கள்: கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், மக்காச்சோளம்.

எண்ணெய் வித்துகள்: நிலக்கடலை, எள்.

பயறு வகைகள்: துவரை, உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு, காராமணி, கொண்டைக்கடலை.

நெல்: 120 நாள்களுக்குள் வளரும் கார், குறுவை, சொர்ணவாரி பருவத்துக்கேற்ற ரகங்கள்; 120-135 நாள்களில் வளரும் சம்பா பட்டத்துகேற்ற ரகங்கள்; 120 நாள்களுக்குள் வளரும் நவரை, கோடைக்காலத்துக்கேற்ற ரகங்கள்.