Published:Updated:

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்.மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், தொகுப்பு: க.சரவணன்

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்.மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், தொகுப்பு: க.சரவணன்

Published:Updated:
மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

லேசியா நாட்டில் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ (Consumers Association of Penang-CAP), எனும் தன்னார்வ அமைப்பு, நுகர்வோர் உரிமைகளுக்காகச் செயல்பட்டு வருகிறது. உணவு, வீட்டுவசதி, உடல் நலன், சுகாதார வசதிகள், பொதுப் போக்குவரத்து, மனித உரிமைகள், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் இந்த அமைப்பு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஜனாப் முகமது இத்திரீஸ், அமைப்பின் தமிழ்த்துறையைச் சேர்ந்த சுப்பாராவ், அமைப்பில் உள்ள சரஸ்வதி, சுசீலா மற்றும் தீபன் ஆகியோர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை விவசாயம் குறித்த பல பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்தி வருகிறது. மேலும், வீட்டுத்தோட்டம், பள்ளிக்குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் கல்வி, பல்கலைக்கழகங்களில் இயற்கை விவசாயப் பயிலரங்கு, இயற்கை விவசாய நூல்கள், பிரசுரங்களை (தமிழ், ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில்) வெளியிடுதல்... என இவர்களின் அறப்பணியின் பட்டியல் நீளமானது.

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!
மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

இயற்கை விவசாயம் தொடர்பாகத் தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த நல்ல முயற்சிகள் நடந்தாலும்... அதற்குக் காரணமான செயல்பாட்டாளர்களை, வல்லுநர்களைப் பினாங்குக்கு அழைத்து, மலேசிய மக்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது, இந்த அமைப்பு. கால்நடை, விதைகள், இயற்கை வேளாண் நுட்பங்கள் குறித்துப் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், விழிப்பு உணர்வுப் பிரசார கூட்டங்கள்ஆகியவற்றை நடத்திவரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்... ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் அண்ணாச்சி, இயற்கை விவசாயச் செயற்பாட்டாளர் கிளாடு ஆல்வாரிஸ், ‘பணிக்கம்பட்டி’ கோபாலகிருஷ்ணன், தெலங்கானாவைச் சேர்ந்த முனைவர் ராமஞ்சிநேயலு, ‘பூச்சி’ செல்வம்... போன்றவர்களை அழைத்து பயிற்சிக் கொடுத்திருக்கிறது.  இதோடு ‘பசுமை விகடன்’ இதழில் வெளியாகும் பயனுள்ள இயற்கை விவசாய நுட்பங்களையும், மலேசிய மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.. பூவோடு சேர்ந்த நார் போல நானும் பலமுறை இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பயிற்சியளித்துள்ளேன். மலேசியத் தமிழ் விவசாயிகள் மட்டுமல்லாமல் சீன, மலாய் விவசாயிகளும் ஆர்வத்துடன் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் விவசாயிகளில் குறிப்பாகச் சோமசுந்தரம், கன்னியப்பன், சன்மார்க்கம் ஆகியோர் பயிற்சிகளில் கலந்து கொண்டதைத் தாண்டி, முன்னோடி இயற்கை விவசாயிகளாகவும் மாறிப் பிறருக்கு வழிகாட்டி வருகின்றனர்.

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

மற்றவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்... தன்னுடைய வளாகத்திலேயே மண்புழு உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் பழச்சாகுபடி ஆகியவற்றில் சாதனை படைத்து, இயற்கை வேளாண் ஆய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது, பினாங்கு பயனீட்டாளர் சங்கம். எதையும் அறிவியல் ரீதியாகச் செய்து பார்க்கப் பழகிய இத்திரீஸ் அய்யா, சுப்பாராவ் மற்றும் அவர்களின் குழு ஒத்துழைப்புடன், பினாங்கு மாநிலத்தில் ரசாயன முறை விவசாயம் செய்பவர்களின் பண்ணை மண் மாதிரிகளையும், இயற்கை விவசாயிகளின் பண்ணை மண் மாதிரிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இந்த ஆய்வில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்தன.

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

பினாங்கு ஒரு தீவு என்பதால், அந்த மண்ணில் நைட்ரஜன் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ரசாயன உரங்கள் போட்ட மண்ணைக் காட்டிலும், இயற்கை எரு மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்திய மண்ணில் நைட்ரஜன் அதிகமாக இருந்தது. நைட்ரஜன் மட்டுமல்லாமல், பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவையும் அதிகமாக இருந்தன. முக்கியமாக உயிர்மக் கரிம (Organic Carbon) அளவும் அதிகம் இருந்தது. ரசாயன உரங்களைப் போட்ட மண்ணில் 6.1% என்ற அளவில் இருந்த கரிம அளவு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திய மண்ணில் 8% என்ற அளவில் இருந்தது. இது மண் நலமாக இருப்பதற்கான அடையாளம்.

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

பினாங்கு மண்ணில் பொதுவாக அமிலத்தன்மை அதிகம் இருக்கும். கார-அமிலக் குறியீடான பி.எச் (PH) அளவு 7 ஆக இருந்தால், கார-அமிலத் தன்மையில் மண் சமநிலையில் உள்ளதாக அர்த்தம். இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திய மண்ணில் பி.எச் அளவு 6.6 ஆக இருந்தது. ரசாயன உரங்கள் பயன்படுத்திய மண்ணிலோ அமிலத்தன்மை அதிகரித்தது.

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

அதேபோல் நுண்ணூட்டச் சத்துகளான போரான், தாமிரம், இரும்பு, துத்தநாகம் ஆகியவற்றின் சராசரி அளவு... இயற்கை எருவையும், இடுபொருள்களையும் பயன்படுத்திய மண்ணில் குறைவாக இருந்தாலும், மண் மாதிரிகள் முழுக்க அவற்றின் அளவு ஒரே சீராக இருந்தது. ஆனால், ரசாயன இடுபொருள்களைப் பயன்படுத்திய மண்ணில் சீராகக் காணப்படவில்லை. உதாரணமாக... துத்தநாகத்தின் சராசரி அளவு, இயற்கை இடுபொருள்கள் போட்ட மண்ணில் 14.8 பி.பி.எம் (Parts Per Million-பத்து லட்சத்தில் ஒரு பங்கு) என்ற அளவில் இருந்தது. ரசாயன உரம் போட்ட மண்ணில், 20.7 பி.பி.எம் என்ற அளவில் இருந்தது. ஆனால், மண்மாதிரிகளில் அவற்றின் வேறுபாடு ரசாயன உரம்போட்ட மண்ணில், 18.29 பி.பி.எம் என்ற அளவிலும்; இயற்கை இடுபொருள்கள் போட்ட மண்ணில் மிகக் குறைவாக 2.91 பி.பி.எம் என்ற அளவிலும் இருந்தது. அதாவது, இயற்கை இடுபொருள்களுக்கு, மண் ஒரே சீராக எதிர்வினையாற்றுகிறது என்றும், ரசாயன இடுபொருள்களுக்கு அப்படி எதிர்வினையாற்றவில்லை என்றும் இதன் மூலம் அறிந்து கொண்டோம். நிலைத்த, நீடித்த விவசாயத்துக்கு இயற்கை வேளாண் முறைகளே உகந்தவை என்பதும் இதன் மூலம் நிரூபணமானது.

மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்!

இப்படி இயற்கை இடு பொருள்களைப் பயன்படுத்திய மண்ணின் நலம், மலேசியாவாக இருந்தாலும் சரி... தமிழகமாக இருந்தாலும் சரி... சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மண் நலன் காக்க இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்திப் பலன் பெறுவோம் வாருங்கள்.

- முயற்சி தொடரும் 

மண் நலன் தரும் கலப்புக் கரைசல்!

நம் வீட்டம்மணி ஒருநாள் சாம்பார் செய்திருப்பார். இன்னொரு நாள் ஏதாவதொரு காய் செய்திருப்பார். மூன்றாவது நாள் மீதமிருக்கும் அவை இரண்டையும் கலந்து, கொதிக்க வைத்துப் பரிமாறுவார் பாருங்கள், அந்தச் சுண்டக்குழம்பு, அவ்வளவு ருசியாக இருக்கும். அப்படித்தான், கலப்புக் கரைசல்கள் மண் நலன் காப்பதில் நல்ல பலனைத் தருகின்றன. பஞ்சகவ்யாவும், மண்புழு நீரும் (Vermiwash) தனித்தனியே செடிகளுக்கும், மண்ணுக்கும் நல்ல பலன்களைத் தருமென்பதை ஆய்வு பூர்வமாக, ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜனும், நானும் நிரூபித்து வந்த சூழலில், ஒருநாள் ‘இவற்றைக் கலந்து பயன்படுத்திப் பார்த்தாலென்ன’ என்று தோன்றியது.

முதலில் என் மாணவர் தங்கராஜ் உதவியுடனும், பிறகு, வின்சென்ட், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உதவியுடனும் ஆய்வுகளை மேற்கொண்டோம். பஞ்சகவ்யாவையும் மண்புழு நீரையும் கலந்து உருவாக்கிய கரைசல் மண்ணையும், பயிர்களையும் செழுமையாக்கியதைக் கண்கூடாகக் கண்டோம். ஏற்கெனவே பலருக்கும் பயனளித்துள்ள இந்தக் கலப்புக் கரைசலை எளிதில் தயாரிக்கலாம்.

5 லிட்டர் பஞ்சகவ்யா, 10 லிட்டர் மண்புழு நீர் ஆகியவற்றைக் கலந்து அந்தக் கரைசலுடன் 85 லிட்டர் தண்ணீர் ஊற்றித் தெளிப்புக்கான கரைசலாகப் பயன்படுத்தலாம். இந்தக் கலப்புக் கரைசலைத் தெளித்தால்... பயிர்கள் வாளிப்புடன் வளர்வதையும், மண் நலன் கூடுவதையும் அனுபவப்பூர்வமாக உணரலாம். பஞ்சகவ்யா தயாரிக்கத் தெரியும். ஆனால், மண்புழு நீர் தயாரிப்பது எப்படி என்று யோசிப்பவர்கள் அடுத்த இதழ் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள்.

மண்புழு நீரில், மண்புழுவின் சிறுநீர், மண்புழுவின் எச்சமான மண்புழுக்கட்டிகள், மியூக்கஸ் மற்றும் உடற்குழித் திரவம் (Coelomic Fluid) ஆகியவை கலந்து வருவதால், அது மண்ணுக்குச் சிறந்த எருவாகவும், நுண்ணுயிர்ப் பெருக்கியாகவும், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

பஞ்சகவ்யாவின் மூலப்பொருள்களான பசுஞ்சாணம், மாட்டுச்சிறுநீர் ஆகியவற்றில் ஏராளமான நுண்ணுயிர்களும்; மாட்டுச் சிறுநீரில் நைட்ரஜனும், பாலில் லேக்டோபேசில்லஸ் பாக்டீரியாக்களும், கரும்புச்சாற்றில் நுண்ணுயிர்களுக்குத் தேவையான சர்க்கரைச் சத்தும், இளநீரில் தாதுக்களும், நெய் அல்லது எண்ணெயில் கொழுப்பு அமிலங்களும் உள்ளன என்பதால்... அது சிறந்த இயற்கை இடுபொருளாக உள்ளது. மண்புழு நீரையும், பஞ்சகவ்யாவையும் தண்ணீரில் கலக்கும்போது, நுண்ணுயிர்கள் ஏகத்துக்கும் குஷியாகி, பல்கிப் பெருகுகின்றன. இந்தக் கரைசலைத் தெளிப்பானாகப் பயிர்களுக்குப் பயன்படுத்திப் பாருங்கள். பயிரும் மண்ணும் மட்டுமல்ல... நீங்களும் ஆனந்தக் கூத்தாடுவீர்கள்.