Published:Updated:

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

புறாபாண்டி

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

புறாபாண்டி

Published:Updated:
நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

‘‘நேரடி நெல் விதைப்பு செய்ய விரும்புகிறோம். அதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

கே.உமாதேவி, திருநின்றவூர்.

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநராகப் பணிபுரிந்தவரும், இப்போது விவசாயத்தில் முன்னோடியாக இருப்பவருமான, பேராசிரியர் ஜி.பெருமாள் பதில் சொல்கிறார்.

‘‘இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான், வேளாண்மை கல்வி கற்கச் சென்றேன். நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே, உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றேன். ஆனாலும், விவசாயத்திலிருந்து ஓய்வு பெறவில்லை. விவசாயத்தில் ஏராளமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன். பண்ணையில் பழப்பயிர்கள், மரப்பயிர்கள்... என பல விதமானப் பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறோம். அதில் நெல் சாகுபடியில் பயன்படுத்தி வரும் தொழில்நுட்பம்தான் இந்த நேரடி நெல் விதைப்பு முறை.

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

சித்திரவாடி என்கிற ஊர், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம். இங்குள்ள நயாதிருப்பதி கோயில் வளாகத்தில்தான், என்னுடைய விவசாயப் பணியும் ஆன்மிக சேவையும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நேரடி நெல் விதைப்பு செய்தோம். 25 ஆண்டுகளாக மரம், செடி கொடிகளின் இலை, தழைகள் பயன் படுத்தப்பட்டுச் செழிப்பாக்கப்பட்ட நிலம். இதுவரை களைக்கொல்லியோ மண் நுண்ணுயிர்களை அழிக்கக்கூடிய நச்சுத் தன்மை வாய்ந்த செயற்கை உரங்களையோ அபரிமிதமான அளவில் பயன்படுத்தியதில்லை.

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

எங்கள் பண்ணையின் சீதோஷ்ண நிலை மற்றும் பருவநிலைக்குத் தக்கபடி, கோ-51 நெல் சாகுபடி செய்தோம். இதற்கு முன்பு, இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிகமான களைகள் மண்டிக்கிடந்தன. அதைக் கட்டுப்படுத்தவே நெல் சாகுபடி செய்ய முடிவு செய்தோம். நாற்றுவிட்டு, நடவு செய்வதைக் காட்டிலும் நேரடி நெல் விதைப்பில் பல நன்மைகள் உண்டு. இதை என் பணிகாலத்திலேயே பார்த்துள்ளேன். அதை எனது நிலத்தில் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. பண்ணையில் இருந்த 5 டன் தொழுஉரத்தைக் கொட்டி உழுவு செய்தோம். இதைத்தவிர வேறு உரம் போடவில்லை. டிரம் சீடர் என்று சொல்லப்படும், நேரடி நெல் விதைக்கும் கருவியைக் கொண்டு விதைத்தோம். 1 ஏக்கர் 80 சென்ட் நிலத்தில் விதைக்க, 40 கிலோ விதைநெல் தேவைப்பட்டது. இரண்டரை மணி நேரத்தில் விதைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. இதனால், விதைப்புக்கான செலவு வெகுவாகக் குறைந்தது. நாற்று நடவு செய்யும்போது ஏற்படும் மிதியடி பள்ளங்கள் தவிர்க்கப்பட்டன. நிலத்தின் அனைத்துப்பகுதிக்கும், நீர் சீராகச் சென்று சேர்ந்தது. சத்துப்பொருள்கள் நிரம்பிய மேல் மண் பகுதியில் விதைகள் விதைக்கப்பட்டன. இதனால், விதைகள் முளைக்கும்போதே, ஆரோக்கியமாக வளர்ந்தன. விதைத்த 3-ம் நாள் வயலில் பசுமை படர்ந்தது.  நாற்றுவிட்டு நடவு செய்யும்போது, மண்ணின் ஆழத்தில் வேர்கள் சென்றுவிடும். எனவே, மேல் மண்ணில் உள்ள சத்துகள் நெற்பயிர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. நேரடி நெல் விதைப்பு மூலம் தகுந்த இடைவெளியில் விதைப்புச் செய்யப்பட்டதால், களையெடுக்கும் வேலையும் குறைந்தது. அடிப்படையில் நெற்பயிர் புல் வகையைச் சேர்ந்தது என்பதால், காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்தோம். நெல் வயலுக்குத் தழும்ப தழும்ப தண்ணீர் பாய்ச்சுவதைக் காட்டிலும், காயவிட்டுக் காயவிட்டுத் தண்ணீர் பாய்ச்சினால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நெற்பயிர் திடக்காத்திரமாக வளர்ந்து நின்றதால், பூச்சி, நோய்கள் தாக்குதல் அறவே இல்லை. ஆகையால், பூச்சிக்கொல்லி தெளிக்கும் வேலையும் செலவும் மிச்சமானது. சரியான நேரத்துக்கு மணியடித்ததுபோல, விதைத்த 107-ம் நாள், நெல் அறுவடைக்குத் தயாராகிவிட்டது. அறுவடை செய்த பிறகு, 40 மூட்டை (80 கிலோ) மகசூலாகக் கிடைத்தது. சூழ்நிலை சிறப்பாக அமைந்தால், இன்னும் கூடுதல் மகசூல்கூட எடுக்க முடியும். இந்த ரகத்தைச் சம்பா, தளடிப் பட்டங்களில் சாகுபடி செய்யக்கூடாது. குறுவை, சொர்ணவாரி, கார், நவரை என நான்கு பட்டங்களில் சாகுபடி செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கின்றனர். இயற்கை முறையில் விளைந்த நெல்லைப் பணம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்யவில்லை. இது உண்மைநிலை விதை என்பதால், ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு விதையாகக் கொடுத்துவிட்டேன். இந்த நெல் விதையைப் பயிரிட்டு, அதிலிருந்து விதை எடுத்து, மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுதான் உண்மை நிலை விதையின் இயல்பு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நேரடி நெல் விதைப்பு முறையில், தயக்கமில்லாமல் சாகுபடி செய்யலாம்.’’

தொடர்புக்கு, பேராசிரியர் ஜி.பெருமாள்,

செல்போன்: 94432 40074.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன?”

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.