மண், பருவம், சூழல் இவற்றை முன்னிறுத்தி செய்யப்பட்டதுதான் பாரம்பர்ய வேளாண்மை. நவீன அறிவியல் சொல்லும் அத்தனை நுட்பங்களையும் உள்ளடக்கியது, நம் மூதாதையரின் வேளாண்மை முறை. விவசாயிகள் நிலத்தை அடுத்து உயிராக நினைத்துப் போற்றிப் பாதுகாத்தது விதைகளைத்தான்.

அப்படிப்பட்ட நாட்டுரக விதைகளை அழித்து வீரிய ரக விதைகளைப் புகுத்தி, கோடிக்கணக்கில் பணம் பார்த்து வருகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்கள். இப்படி ஆயிரக்கணக்கான விதை இனங்கள் அழிக்கப்பட்டாலும்... இன்னும் பாரம்பர்ய விதைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் கட்டிக்காத்து வருகிறார்கள். குறிப்பாக, மானாவாரி விவசாயிகள் பலர் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்.

மானாவாரி நிலங்களில் ஆட்டுக்கிடை...

மதுரை மாவட்டம், சிவரக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கிறது, கரிசல் பூமி. முழுக்க வானம் பார்த்த நிலங்கள்தான். வான்மழை வாய்ப்பு தந்தால்தான் இவற்றில் விதைப்பு. இந்த நிலங்கள் பருத்திச் சாகுபடிக்கு ஏற்றவை என்பதால், பெரும்பாலும் பருத்திதான் பிரதான விவசாயமாக உள்ளது. ஆனால், எந்தப்பயிராக இருந்தாலும் இப்பகுதி விவசாயிகள் தனிப்பயிராகச் சாகுபடி செய்வதில்லை. பலவிதப் பயிர்களைக் கலந்து விதைத்துக் கலப்புப் பயிர்ச் சாகுபடிதான் மேற்கொள்கிறார்கள். இன்று ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என நவீன அறிவியல் சொல்லும் விஷயத்தைப் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறார்கள், இப்பகுதி மக்கள்.

நாம், சிவரக்கோட்டை கிராமத்தில் நுழைந்த சமயத்தில், வீதிகளில் ஆங்காங்கே பருத்தி விதைகளைக் கொட்டித் தேய்த்துக் கொண்டிருந்தனர் சிலர். நாம் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நம்மை வரவேற்றார், ராமலிங்கம். இவர் சமூகப் போராளி. இப்பகுதியில் அமையவிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர். சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்காகத் தற்போதும் அதிகார வர்க்கத்திடம் அறச்சீற்றத்துடன் போராடிக் கொண்டிருப்பவர். மானாவாரி விவசாயி. தற்போது பருத்தி விதைத்திருக்கும் ராமலிங்கம், தங்களது கிராமத்தில் பாரம்பர்ய முறையில் சாகுபடி செய்யப்படும் பருத்தி குறித்துப் பேசத் தொடங்கினார்.

“எங்க பகுதி மக்களுக்கு ஆடிப்பட்டம்தான் எல்லாம். ஒவ்வொரு வருஷமும் இந்தப் பட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். பல நேரங்கள்ல மழை பெய்யாது. அதனால, வெள்ளாமை செய்ய முடியாது. கிடைக்கிற ஒண்ணு ரெண்டு தூத்தல (தூறல்) வெச்சுக்கிட்டு என்ன செய்ய? இந்தத் தடவை நேரத்துல ரெண்டு மழை கிடைச்சது. எல்லாரும் உழவு போட்டுட்டோம். முக்கால்வாசி பேரு விதைச்சாச்சு. ஆடி மாசம் ஆரம்பிச்சதுல இருந்தே, விதையை மூடாக்குப் போடுறது, உழவு, விதைப்புனு ஊரே பரபரப்பா இருக்கு. யாருக்கும் நின்னு பேசக்கூட நேரமில்லை.

ஆடிப்பெருக்குக்குப் பிறகுதான் ஜனங்க ‘அப்பாடா’னு உட்கார முடியும். மழைமாரி சரியாகக் கிடைச்சா, ஓரளவுக்கு மகசூல் கிடைக்கும்” என்ற ராமலிங்கத்திடம், ‘விதையை மூடாக்கு போடுறதுனு சொன்னீங்களே... அதென்ன மூடாக்கு’ என்று கேட்டோம்.

“வழியில பார்த்துக்கிட்டே வந்தீங்கள்ல, பருத்தி விதையை வீதியில போட்டு தேய்ச்சுட்டு இருந்தாங்களே... அதான் மூடாக்கு. அந்தக்காலத்துல பருத்தியில இருந்து அப்படியே விதைகளை எடுத்துத்தான விதைச்சாங்க. அந்த முறையைத்தான் நாங்க இன்னமும் கடைப்பிடிக்குறோம். கடைகள்ல விக்குற கம்பெனி விதைகளை அப்படியே விதைக்கலாம். நாங்க அந்த விதைகளை வாங்குறது இல்ல. பக்குவம் செய்யாத பருத்தியில இருந்து விதைகளை வாங்குவோம். அந்த விதையில பருத்தி ஒட்டியிருக்கும். அதனால, இந்த விதைகளை வீசி விதைக்க முடியாது. வீசுனா ஒண்ணுக்கொண்ணு ஒட்டிக்கும். அதுக்காகத்தான் இந்த மூடாக்கு. மாட்டுச்சாணியைப் பால் மாதிரி கரைச்சுக்குவோம். அதுல பருத்தி விதையை முக்கி ஊற வெப்போம். மேலே மிதக்குற விதைகள் முளைக்காதுங்கிறதால, அந்த விதைகளைத் தனியே எடுத்துடுவோம். அடியில் தங்கியிருக்கும் விதைகளை எடுத்து, சொரசொரனு தேய்ச்சா ஒட்டியிருக்கப் பருத்தியெல்லாம் போயிடும். அப்புறமா விதைகளை உலர வெச்சா... தனித்தனியா முத்து முத்தா நிக்கும். இந்த விதைகளைச் சுலபமா வீசி விதைக்க முடியும். இதை எங்க பக்கத்துல ‘விதைக்கு மூடாக்கு போடுறது’னு சொல்வாங்க. இதுவும் கிட்டத்தட்ட ‘விதைநேர்த்தி’தான்” என்ற ராமலிங்கம் ஊருக்கு வெளியே நம்மை அழைத்துச் சென்றார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை உழவு ஓட்டப்பட்ட நிலங்கள். ஆங்காங்கே விதைப்பும் உழவும் நடந்து கொண்டிருந்தன. அந்த மானாவாரி நிலத்தில் மேனியெங்கும் வியர்வை மின்ன, வேலையில் கவனமாக இருந்தார்கள், விவசாயிகள்.

தொடர்ந்து பேசிய ராமலிங்கம், “இன்னிக்குப் பருத்தியில காய்ப்புழு பிரச்னைதான் பெருசு. ‘காய்ப்புழுத் தாக்குதல் இல்லாத பி.டி பருத்தி விதையைக் கண்டுபிடிச்சிருக்கோம். அதை வாங்கி விதைச்சா, காய்ப்புழுத் தாக்குதல்ல இருந்து தப்பிச்சுக்கலாம்’னு கம்பெனிக்காரங்க சொல்றாங்க. ஆனா, அதுவும் பல்லிளிச்சுப் போச்சுங்கிறது வேற கதை. ஆனா, எங்களுக்குக் காய்ப்புழு பத்தின கவலையே இல்லை. ஏன்னா, எங்க பாரம்பர்ய பயிர் முறைக்கு முன்னாடி காய்ப்புழுவால ஒண்ணும் பண்ண முடியலை. நாங்க பருத்தியைத் தனிப்பயிரா விதைக்கமாட்டோம். இந்த ஒரு பட்டத்துல மட்டும்தான் விதைப்பு. அதுக்குப் பின்னாடி அறுப்பு மட்டும்தான். அதனால, பல பயிர்களைக் கலந்து விதைப்போம். அந்த வருஷத்துக்கு வீட்டுக்குத் தேவையான பருப்பு, உளுந்து, சோளம், குதிரைவாலி, வரகுனு பலதையும் கலந்து விதைப்போம்.

ஆனா, பருத்திதான் முக்கியப்பயிர். பொதுவா கருங்கண்ணி, திருவில்லிபுத்தூர்-2 மாதிரியான பருத்தி ரகங்களைத்தான் விதைப்போம். அதுல சால் போட்டு ஒவ்வொரு சாலுக்கும் ஒவ்வொரு விதமான பயிரை விதைப்போம். அப்படி விதைக்குறதுல பாசிப்பயறு 60 நாள்ல அறுப்புக்கு வந்திடும். குதிரைவாலியை 90 நாள்ல அறுப்போம். சோளம் 120 நாள்ல வந்துடும். துவரை 160 நாள்ல வந்துடும். இப்படித் தொடர்ந்து மகசூல் கிடைக்குற மாதிரிதான் விதைப்போம். இதுக்கு இடையில பருத்தியையும் எடுத்துக்குவோம். இந்த விவசாய முறையில பருத்தியில அதிக மகசூல் கிடைக்காது. ஆனா, வீட்டுக்குத் தேவையானது கிடைச்சிடும். இது வருமானத்துக்காகச் செய்ற வெள்ளாமையில்ல. தேவைக்காகச் செய்றது. அதிக மகசூல் பருத்தியில எடுக்கணும்னா, உரம், பூச்சிக்கொல்லினு ரொம்பக் காசு செலவு செய்யணும். ஆனாலும், வரவுக்கும் செலவுக்கும் சரியாத்தான் இருக்கும். ஆனா, எங்க முறையில செலவு ரொம்ப ரொம்பக் குறைச்சல். நில மகள் மனசுக்கு ஏத்தமாதிரி கொடுப்பா... அதை மனங்கோணாம ஏத்துக்குவோம். இது ஒருவகையான வாழ்க்கை முறை. இது எங்களுக்கு மனநிறைவா இருக்கு. அப்பப்ப மழை மட்டும் எட்டிப்பார்த்துட்டுப் போனாப் போதும், இன்னமும் பல நூற்றாண்டுக்கு எங்க பாரம்பர்யத்தை விடாமப் பாதுகாப்போம்” என்றவர் நிறைவாக,

“இந்தப் பகுதியில இன்னிக்கு விவசாய வேலைகள் ஜரூரா நடக்குறதைப் பார்த்தா, அம்புட்டு சந்தோஷமா இருக்கு. இது நம்ம கைவிட்டுட்டுப் போயிடுமோனு கலங்கிப்போய் இருந்தோம். எங்க போராட்டத்துல பலரும் உதவியா இருந்து எங்க நிலங்களைப் பாதுகாத்துக் கொடுத்திருக்காங்க. அதுல, பசுமை விகடனுக்கு முக்கியமான பங்கிருக்கு. இந்த நேரத்துல அதுக்கு நன்றி சொல்லிக்குறோம்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிக் கைகூப்பி விடைகொடுத்தார், ராமலிங்கம்.

தொடர்புக்கு,
செல்போன்:
ராமலிங்கம் : 70106 72908
நீ.செல்வம் : 94435 38356

- ஆர்.குமரேசன்

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

இதுதான் உண்மையான ஐ.பி.எம்!

கலப்புப்பயிர் சாகுபடி குறித்து ‘ஐ.பி.எம்’ எனப்படும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்றுநரும், பூச்சியியல் வல்லுநருமான செல்வத்திடம் பேசினோம். “விதைகளை நேர்த்தி செய்யும் முறை சிறப்பான ஒன்று. பருத்தி விதைகளில், விதையோடு ஒட்டியிருக்கும் பஞ்சுகளில்தான் நோய்களை உருவாக்கும் கிருமிகள் இருக்கும். இளஞ்சிவப்புக் காய்ப்புழு கூட்டுப்புழுப் பருவத்தில்... பருத்தியின் பஞ்சுப்பகுதியில்தான் ஒட்டிக்கொண்டு இருக்கும். அறிவியல் முறைப்படி, இதை அமில விதைநேர்த்தி முறையில் நேர்த்தி செய்வார்கள். இந்தப்பகுதி விவசாயிகள் சாணிப்பாலில் விதைநேர்த்தி செய்து, பஞ்சுப்பகுதியை அப்புறப்படுத்துகிறார்கள். விதைகளை, தண்ணீரில் போட்டு, மூழ்கும் விதைகளை மட்டுமே விதைக்க வேண்டும். அதையும் இவர்கள் சரியாகவே செய்கிறார்கள். உண்மையில் இது பாராட்டத்தக்கது.

கலப்புப்பயிர்கள் விதைப்பு என்பதுதான் உண்மையான ஐ.பி.எம். இதுதான் சரியான சாகுபடி முறை. இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கும் தொழில்நுட்பத்தோடு இணைந்து வேளாண்மை செய்யும் முறை. பொதுவாகப் பருத்தியைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்யக்கூடாது. பாரம்பர்ய விவசாயத்தில் பருத்தி வயலில், வெவ்வேறு வயதில் வெவ்வேறு விதமான பயிர்கள் இருக்கும். காலப்போக்கில் அதைப் பெரும்பாலான விவசாயிகள் மறந்துவிட்டார்கள். ஆனால், கரிசல்காட்டு மானாவாரி விவசாயிகள், அதை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆறுதலான செய்தி. பருத்தி வயலில், உளுந்து, பாசிப்பயறு போன்ற 60 நாள் வயதுடைய பயிர்களை விதைப்பார்கள். இந்தப் பயிர்கள் அறுபது நாள்களுக்குள் முடிந்துவிடும். எனவே சாகுபடி தொடங்கிய 30 நாள்களுக்குள் அசுவினித் தாக்குதல்தான் அதிகமாக இருக்கும். அசுவினிக்குப் பருத்திச் செடியைவிட, பயறு வகைச் செடிகள்தான் விருப்பமானவை. எனவே பயறு வகைப் பயிர்களில் அது தனது தாக்குதலைத் தொடங்கும். இங்குதான் இயற்கை ஒரு ‘டிவிஸ்ட்’ வைத்துள்ளது.

நன்மை செய்யும் பூச்சிகள் வயலில் அதிகளவில் இருந்தால், தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தைப் பூச்சிக்கொல்லி இல்லாமல் ஒழித்துவிடலாம் என்பது அனைவருக்கும் தெரியும். அசுவினி அதிகளவில் இருக்கும் வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் படையெடுத்து வரும். அசுவினிக்குப் பயறுவகைப் பயிர்கள் பிடித்தமானவை என்றால்... நன்மை செய்யும் பூச்சிகளுக்கு அசுவினிதான் பிடித்த உணவு. எனவே அசுவினியை வேட்டையாட வயலுக்கு வரும் நன்மை செய்யும் பூச்சிகள் பல்கிப் பெருகிவிடும்.

பருத்தியைத் தாக்க மற்ற பூச்சிகள் வயலுக்கு வரும்போது, ஏற்கெனவே வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அவற்றைக் காலி செய்துவிடும். எனவே தீமை செய்யும் பூச்சிகள் நடமாட்டம் பெருமளவில் குறைந்துவிடும். அதற்காகத்தான் நம் முன்னோர், பல பயிர்களைக் கலந்து பயிரிட்டனர். தற்போது அந்த முறை வழக்கொழிந்து, ‘மோனோகிராப்’ என்ற ஒற்றைப்பயிர் சாகுபடி அதிகமாவதுதான் பெரும்பாலான பூச்சிகள் தாக்குதலுக்குக் காரணம். பருத்திச் சாகுபடி செய்யும் மானாவாரி விவசாயிகள், பயிர் முடிந்தவுடன் காய்ந்த பருத்திமார்களை வயலில் இருந்து பிடுங்கி அப்புறப்படுத்திவிட வேண்டும். காய்ப்புழுக்கள், கூட்டுப்புழு பருவத்தில் இந்த மார்களில்தான் இருக்கும். வயலில் அப்படியே விட்டுவிட்டால் அடுத்த பயிரின்போது, காய்ப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கும்” என்று ஆலோசனை வழங்கினார்.

மீட்கப்பட்ட நிலம்

மதுரை மாவட்டம், சிவரக்கோட்டை கிராமத்தை ‘பசுமை விகடன்’ வாசகர்கள், மறந்திருக்க மாட்டார்கள். 2009-ம் ஆண்டுச் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க, இந்தப் பகுதியில் உள்ள வளமான நிலங்களை அரசு கையகப்படுத்த முன்வந்தது. விவசாயிகள், பொதுமக்களுடன் பசுமை விகடனும் கைகோத்துப் போராடியது. இந்தப்பகுதியின் சிறப்புகளையும் பொருளாதார மண்டலம் அமைவதால் ஏற்படவுள்ள சிக்கல்களையும் அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றது, பசுமை விகடன்.

விவசாயிகள் சார்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதை உயர் நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆளும்கட்சியும் இதில் கவனம் கொள்ளவில்லை. அமைச்சர் உதயகுமார், இந்தப் பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தமாட்டோம் என வாக்கு கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சுதந்திரமாக விவசாயம் செய்து வருகிறார்கள், இந்தப் பகுதி விவசாயிகள். தற்போது இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் ஆடிப்பட்ட சாகுபடி தொடங்கியிருக்கிறது.

தங்கத்தைவிட மதிப்புள்ளது விதை!

நம் முன்னோர்கள் விதைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இங்கு நடக்கும் சடங்கு ஒரு சோறு பதம். இதைப்பற்றிப் பேசிய ராமலிங்கம், “பருத்தி விதைகளை விதைக்கிறதுக்கு முன்னாடி, தங்க நகைகள், தங்கக்காசு, வெள்ளி நகைகள்னு வீட்டுல இருக்கிற மதிப்புமிக்கப் பொருள்களை விதைகளோட சேர்த்து வெச்சிடுவாங்க.

மூடாக்குப் போடும்போது, அதை எடுத்துட்டு மூடாக்கு போட்டு, மறுபடியும் நகைகளை வெச்சு கும்பிடுவாங்க. இந்த வருஷம் மாரி மழை நல்லா பெய்ஞ்சு, ஒண்ணு நூறாகி, நூறு ஆயிரமாகணும்னு வேண்டிக்கிட்டு, விதைப்பாங்க. இது எங்க பகுதியில இன்னிக்கு வரைக்கும் நடந்துகிட்டு இருக்கற வழக்கம்” என்றார்.