ஏற்கெனவே இருக்கும் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத நிலையில், தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒரு சின்னஞ்சிறிய புழு, உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் புழு, மக்காச்சோளப் பயிரை அதிகளவில் தாக்குகிறது. படைப்புழு எனப் பெயரிடப் பட்டுள்ள இந்தப் புழு, அமெரிக்காவில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. வெகு குறுகிய காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரவியது. தற்போதைய நிலை நீடித்தால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் விரைவில் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்தப் புழுவை அழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விஞ்ஞானிகளை அழைத்து அடிக்கடி விவாதிக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவை ஆட்டிப் படைத்துவிட்டு, ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறது இந்தப் புழு. இதன் தாக்குதல் விரைவில் இந்தியாவிலும் இருக்கும் எனச் சில மாதங்களுக்கு முன்பு, உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருந்தார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்தப் புழு கண்டுபிடிக்கப்பட்டிப்பது, இந்திய விஞ்ஞானிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாகத் தைவானில் செயல்பட்டு வரும் உலகக் காய்கறி ஆராய்ச்சி மையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் சீனிவாசன் ராமசாமியிடம் பேசினோம், ‘‘உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தற்போது அதிகம் விவாதிக்கப் படக்கூடிய ஒரு விஷயமாகப் படைப்புழு இருக்கிறது. ‘ஃபால் ஆர்மி வார்ம் ஸ்போடொப் டெரா ஃப்ரூஜ்பெர்டா’ (Fall Armyworm Spodoptera Frugiperda) என்ற இந்தப் புழுவைப் படைப்புழு என அழைக்கிறோம். அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தப் புழு, மக்காச்சோளத்தை அதிகளவில் தாக்குகிறது. இதன் தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோளம் நூறு சதவிகிதம் மகசூல் இழப்பைச் சந்திக்கும்.

ஆப்பிரிக்காவில் இது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சில நாள்கள் இதன் தாக்குதல் தொடர்ந்தால் ஆப்பிரிக்க நாடுகள் மிகப்பெரிய பஞ்சத்தைச் சந்திக்கும் என அஞ்சுகிறார்கள். இதன் தாக்குதலைத் தடுத்து நிறுத்த கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபை, ‘ஆல் ஆப்பிரிக்கன் காங்கிரஸ்’ என்ற ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. நானும், அதில் கலந்துகொண்டேன். இதைத் தடுப்பதற்கான பல்வேறு உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டன. விரைவில் இதன் தாக்குதலை முறியடிப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். பூச்சிக்கொல்லிகளால் இதனை அழிக்கமுடியாது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மூலமாக இதனைக் கட்டுப்படுத்தும் முறை நைஜீரியாவில் ஓரளவு பயன்கொடுத்து வருகிறது.

இந்தியாவில் இதன் தாக்குதல் ஏற்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் எனக் கணித்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதன் தாக்குதல் இருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது அபாயகரமான எச்சரிக்கை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சர்வ சாதாரணமாகப் பறக்கும் ஆற்றல் வாய்ந்தவை படைப்புழுக்கள்.
இது மக்காச்சோளத்தை மட்டும் தாக்காது. சோளம், கம்பு போன்ற சிறுதானியங்களையும் இது தாக்கும். எனவே தமிழகத்தில் இதன் தாக்குதல் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே இதன் தாக்குதலுக்கு முன்பாகவே சில பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது’’ என்று எச்சரிக்கை செய்தார்.

இதுதொடர்பாகத் தமிழக வேளாண்மை துறை உதவி இயக்குநரும், பூச்சியியல் வல்லுநருமான செல்வம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “இதைப் பூச்சிக்கொல்லிகளால் அழிக்கமுடியாது என்பதுதான் உண்மை. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையில் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளம், சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலங்களின் வரப்புகளில் கோ.எஃப்.எஸ்-29 தீவனச் சோளத்தையும், கம்பு நேப்பியர் புல்லையும் பயிரிட வேண்டும். வரப்புகளில் நேப்பியர் புல் இருந்தால், தாய் அந்துப்பூச்சி அங்கு முட்டையை வைக்கும். முட்டையிலிருந்து வெளியே வரும் புழுக்களுக்குப் போதுமான உணவு கிடைக்காமல் அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இறந்துவிடும். களைச்செடிகளிலும் இவை முட்டை வைக்கும் என்பதால், வயலைச் சுற்றிக் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா மற்றும் புழு ஒட்டுண்ணி செலோனிஸ் போன்றவற்றை வயலில் கட்டி விடுவதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். இத்துடன், மஞ்சள் நிறப் பூக்கள் கொண்ட செடிகள், தட்டைப்பயறு, ஆமணக்கு, வேலிமசால் போன்றவை வரப்புகளில் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்’’ எனப் பரிந்துரை செய்தார்.

தமிழகத்திலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்பு உணர்வை விவசாயிகளுக்கு அளிக்கும் நடவடிக்கையில் வேளாண்மைத் துறை இறங்கியுள்ளது.

- ஆர்.குமரேசன்