“சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்குறதால காலையில கிளம்பி ஆபீஸுக்குப் போனா, ராத்திரி பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். ஆபீஸ் டென்ஷன், வீட்டு டென்ஷன்னு இருந்தாலும், நான் மன அமைதியோடு இருக்குறதுக்குக் காரணம் எங்க வீட்டுல இருக்குற மாடித்தோட்டம்தான்.

குறிப்பா மன அழுத்தத்தைக் குறைக்கிறதுக்காகத்தான் இந்தத் தோட்டத்தையே அமைச்சேன். இப்போ தோட்டத்தால எங்களுக்கு மருத்துவச்செலவும் குறைஞ்சுடுச்சு” என்று சிலாகித்துச் சொல்கிறார், சென்னை, பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த கற்பகம். தொடர்ந்து பேசிய கற்பகம், “இப்போலாம் வியாதியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியலை. முன்னாடியெல்லாம், வயசான காலத்துலதான் வியாதி வரும். இப்போ கல்யாண வயசுல இருக்குற இளைஞர்கள்கூடக் கையில மாத்திரை டப்பாவோடு அலையுறாங்க.

இதுக்கெல்லாம் காரணம், நம்மோட உணவுப்பழக்கம்தான். பாரம்பர்ய உணவை மறந்து ‘ஜங்க் ஃபுட்’ பின்னாடி போக ஆரம்பிச்சுட்டோம். அதோட, சுற்றுச்சூழலையும் கணக்கு வழக்கு இல்லாம மாசுபடுத்திட்டோம். அதனாலதான் இவ்ளோ பாதிப்புகள். இப்போ பாதிப்புகளை உணர்ந்து திருந்த ஆரம்பிச்சுருக்கோம். நம்ம பிள்ளைங்களுக்குப் பணம், வீடுனு மட்டும் சேர்த்து வெச்சாப் போதாது. அவங்களுக்குச் சுத்தமான காத்தும் தண்ணீரும் கிடைக்கிறதுக்கு வழி செய்றதுதான் இப்போ முக்கியம். அது இயற்கை முறை வாழ்க்கையிலதான் சாத்தியம்.

முடிஞ்ச அளவுக்கு இயற்கையோடு இணைஞ்சு வாழணும்னுதான் மாடித்தோட்டத்தை அமைச்சுப் பராமரிச்சுட்டுருக்கோம். 2014-ம் வருஷம், 5 தொட்டிகளோட ஆரம்பிச்சோம். இப்போ 200 தொட்டிகள் இருக்கு. எங்க வீட்டுச் சமையலுக்கு இங்க விளையுற காய்கறிகள், கீரைகளைத்தான் பயன்படுத்துறோம்” என்று சொல்லிக்கொண்டே நம்மை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

“நான் வேலைக்குப் போயிட்டிருக்கிறதால, தினமும் காலையில நாற்பது நிமிஷம் மட்டும்தான் மாடித்தோட்டத்துல செலவழிக்கிறேன். லீவு நாள்கள்ல மணிக்கணக்கா தோட்டத்துலதான் இருப்பேன். கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், பசலைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, ரோஜா, சாமந்தி, பாலை ரோஜானு நிறைய பயிர்களை வெச்சுருக்கேன். செடிகளோட கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தா மனசு லேசாகிடும். இயற்கைக் காய்கறிகளால உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்குது. இதமான சுற்றுச்சூழலால மனசுக்கும் ஆறுதலா இருக்குது. என்னோட கணவர், மகன் ரெண்டு பேருமே மாடித் தோட்டத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வாங்க.

மாடியோட தரைப் பகுதியில தொட்டிகளை வைக்கப் பிடிக்கலைன்னா தொங்கு தோட்டம் அமைக்கலாம். அந்தமாதிரி தொங்கு தோட்டங்களையும்... பி.வி.சி குழாய்கள் (பைப்புகள்), வாளிகளைப் பயன்படுத்தி அமைச்சுருக்கேன். நான் மாடித்தோட்டத்துல இன்னொரு முறையையும் கடைப்பிடிக்கிறேன். அதிகப்பராமரிப்பு தேவைப்படாத செடிகளைத் தனியாகவும், அதிகப் பராமரிப்பு தேவைப்படுற செடிகளைத் தனியாகவும் வெச்சுருக்கேன்.

எனக்கு அதிக வேலைகள் இருக்குற சமயங்கள்ல அதிகப்பராமரிப்பு தேவைப்படுற செடிகளுக்கான வேலைகளை மட்டும் செஞ்சுடுவேன். அதனால, மாடித்தோட்டத்தை என்னால சுலபமாகப் பராமரிக்க முடியுது” என்ற கற்பகம் நிறைவாக,

“நம்ம கண் முன்னாலயே செடி வளர்ந்து, அதுல பூ பூத்து, காய்ச்சு அதைப் பறிச்சுச் சாப்பிடுறப்போ கிடைக்கிற சந்தோஷமே தனிதான். கடைகள்ல வாங்கின காய்கறிகளைச் சாப்பிடுறப்போ... அதுவும் ரசாயனம் போட்டு விளைவிச்ச காய்களைச் சாப்பிடுறப்போ வியாதிதான் வரும். இயற்கை காய்கறிகளைச் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, எங்களுக்கு நோய்களே வர்றதில்லை. அதனால, மருத்துவச் செலவு குறைஞ்சுடுச்சு” என்று சொல்லி உற்சாகமாக விடைகொடுத்தார்.

- துரை.நாகராஜன், படங்கள்: பெ.ராக்கேஷ்

ஒரு தொட்டிக்கு மூன்று விதைகள்!

மாடித்தோட்டம் அமைக்கும் முறை குறித்துச் சொல்லிய கற்பகம், “செடி வளர்ப்பதற்கான பைகள் அல்லது தொட்டிகளைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். எரு, மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, செம்மண் ஆகியவற்றைக் கலந்து தொட்டிகளில் நிரப்ப வேண்டும்.

பிறகு காய்கறி விதைகளை, ஒரு தொட்டிக்கு மூன்று விதைகள் வீதம் விதைக்க வேண்டும். தொட்டிகளை, ஓர் அடி இடைவெளியில் வரிசையாக வைக்க வேண்டும். மண் காயாத அளவுக்குத் தண்ணீர்விட்டு வர வேண்டும். அதே நேரத்தில் அதிகத்தண்ணீர் விடக்கூடாது. 15 நாள்களுக்கு ஒருமுறை இஞ்சி பூண்டுக்கரைசல் தெளித்து வர வேண்டும். அவ்வப்போது வேப்பெண்ணெய் கரைசலைத் தெளித்துவந்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது” என்றார்.