இயற்கை விவசாயத்துக்கு 100 கோடி!

மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய் செலவில், ஒரு திட்டத்தைச் செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு, ‘டாக்டர் பஞ்சராவ் தேஷ்முக் ஆர்கானிக் அக்ரிகல்ச்சுரல் மிஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை விநியோகிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக, விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் புல்டஹானா, அகோலா, வாஷிம், அமராவதி, யவத்மால் மற்றும் வார்தா ஆகிய மாவட்டங்களில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

பன்றி மூலம் 1 டிரில்லியன் டாலர் வருமானம்!

சீனாவில் உள்ள பன்றி விவசாயிகள் ஒன்றிணைந்து, உலகின் மிகப்பெரிய பன்றிச் சந்தையை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். உலக அளவில் பன்றி இறைச்சிக்கு அதிகத்தேவை இருப்பதால், பன்றி விற்பனை மிகப்பெரிய வணிகமாக உருவெடுத்திருக்கிறது. அதனால், ஆண்டுக்கு 17 மில்லியன் பன்றிகளை (1,70,00,000 பன்றிகள்) விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்மூலம் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர் (1 லட்சம் கோடி டாலர்- தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 71 லட்சம் கோடி ரூபாய்) வருமானம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள், சீன விவசாயிகள்.

நெல் உற்பத்தியில் சீனா உலகச் சாதனை!

சீனாவின் விவசாயப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உயர் விளைச்சல் ரக நெல்லைப் பயிரிட்டு அதிக மகசூலைப் பெறும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காகக் கடந்த 2009-ம் ஆண்டில் யுனான் மாகாணத்தில் உள்ள கேஜியு பகுதியில் மூன்று நிலங்களைத் தேர்வு செய்து, ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் இருக்கும் மிதமான மழை, பனிப்பொழிவு மற்றும் சரிசமமான சதுப்பு நிலப்பகுதியாக உள்ள இந்தஆராய்ச்சிப் பகுதி, கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியில் சோதனைக்காகச் சுமார் 7,534 சதுர அடி கொண்ட வயலில் விதைத்த வீரிய ரக நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தமாக 1,152.3 கிலோ மகசூல் கிடைத்திருக்கிறது. நெல் விளைச்சலில் இது உலகச் சாதனை எனச் சீன ஊடகங்கள் சொல்கின்றன.

- துரை.நாகராஜன்