Published:Updated:

விவசாயிகளுக்கு தடையில்லா முன்முனை மின்சாரம்: சீமான் கோரிக்கை

விவசாயிகளுக்கு தடையில்லா முன்முனை மின்சாரம்: சீமான் கோரிக்கை
விவசாயிகளுக்கு தடையில்லா முன்முனை மின்சாரம்: சீமான் கோரிக்கை
விவசாயிகளுக்கு தடையில்லா முன்முனை மின்சாரம்: சீமான் கோரிக்கை

சென்னை: "விவசாயிகளுக்கு தினமும் ஆறு மணிநேரத்துக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்கு வேண்டும்" தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு சம்பா நெல் விதைப்பு சமயத்தில் 12 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் அளிக்கப்பட்டு வந்தது. இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கர் சாகுபடி காப்பாற்ற‌ப்பட்டது.

ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களக  மூன்று மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 12 மணிநேரம் மின்சாரம் கிடைக்கும் என நம்பி விவசாயம் செய்தவர்கள் இப்போது இக்கட்டில் உள்ளனர். நீர் பாய்ச்சல் இல்லாததால் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

##~~##
இதைத் தவிர்க்க விவசாயிகள் இருமுனை மின்சாரத்தில் நீர் இறைக்கின்றனர். இதனால் மோட்டார் காயில் எரிந்து விடுவது போன்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் மின்சார வாரியம் இரு முனை மின்சாரத்தைப்  பயன்படுத்தும் விவசாயிகளை கண்டித்து வருகிறது.
எனவே, தமிழக அரசு, விவசாயிகளின் இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு அடுத்த 50 நாட்களுக்கு தடை இல்லாமல் தொடர்ந்து ஆறு மணிநேரம் மும்முனை மின்சாரத்தினை வழங்க வேன்டும்" என்று சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.