Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 9-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

தண்டோரா

மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 27, 28-ம் தேதிகளில் ‘நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, அக்டோபர் 3-4 தேதிகளில் ‘வீரிய ரகக் காய்கறிகள் சாகுபடி’, 10-11 தேதிகளில் ‘உணவு பதப்படுத்தும் கருவிகள் மற்றும் புறக்கடை கோழி வளர்ப்பு’, 16-17 தேதிகளில் ‘தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மேலாண்மை’, 23-24 தேதிகளில் ‘ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு’, 25-26 தேதிகளில் ‘மசாலா பொடிகள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

கட்டணப் பயிற்சிகள்

தீவன உற்பத்தி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் 28-ம் தேதி ‘தீவன உற்பத்தித் தொழில்நுட்பம்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் செப்டம்பர் 28, 29, 30-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.

தண்டோரா

அசோலா தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் அக்டோபர் 6-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 27-ம் தேதி ‘அசோலா தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.