உலகெங்கும் கோலோச்சும் வெற்றிகரமான இயற்கை வேளாண் முயற்சிகள், வழிமுறைகள், இயற்கை வாழ்வியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் இயக்கங்கள் பற்றிய விழிப்பு உணர்வு தொடர் இது...

காலைச் சுற்றிய பாம்பாக, பூச்சிக்கொல்லிகள் நம் வேளாண் நிலங்களைச் சுற்றி வளைத்து நஞ்சைக் கக்குகின்றன என்றும், அதனால் சுற்றுச்சூழல் கெடுவதுடன், விலங்குகளும் மனிதர்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என்றும் சென்ற இதழில் பார்த்தோம். இன்றும் நம் வாழ்வைவிட்டு நீங்காத, ஒழிக்கமுடியாத பூச்சிக்கொல்லிகளின் தீமைகள் குறித்து அரை நூற்றாண்டுக்கு முன்னரே உரக்கப் பேசினார், ஓர் அமெரிக்கப் பெண்மணி.

1962-ம் ஆண்டில் கடல் உயிரியல் விஞ்ஞானியான ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson), தன்னுடைய ஆய்வின் அடிப்படையில் எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring) புத்தகத்தில், டி.டி.டி (DDT-Dichloro Diphenyl Trichloroethane) உள்படப் பல பூச்சிக்கொல்லிகள், சுற்றுச்சூழலை எப்படிக் கபளீகரம் செய்கின்றன என்று தோலுரித்துக் காட்டினார்.

‘மௌன வசந்தம்’ வெளியான பிறகு, சுற்றுச்சூழல் குறித்த விவாதங்கள் அமெரிக்காவிலும் பிற மேலைநாடுகளிலும் சூடுபிடித்தன. 1972-ம் ஆண்டில் அமெரிக்க அரசு, டி.டி.டி பூச்சிக்கொல்லியை நாடு முழுக்கத் தடை செய்ய, மௌன வசந்தம் முக்கியக் காரணமானது. இந்தப் புத்தகமே, ‘உலகச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் தோற்றுவாய்’ என்று கருதப்படுகிறது. அதேபோல், இந்தப்புத்தகம் இயற்கை வேளாண்மை குறித்த உரையாடலைப் பரவலாக்கி, உலக இயற்கை வேளாண் இயக்கத்துக்கு உரமூட்டியது. ஆனால், இயற்கை வேளாண்மை இயக்கம், ரேச்சல் கார்சனுக்கு முன்பே, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விதைக்கப்பட்டுத் துளிர்த்துக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகம் முழுக்க வேட்டையாடியும், உணவு சேகரித்தும் உண்ட மனிதகுலம், காட்டைத் திருத்தி, பழக்கிய விலங்குகளைக் கொண்டு உழுது, பயிரிட்டு உண்ணத் தொடங்கிப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. பிரிட்டனில் தொழிற்புரட்சி ஏற்பட்டு, 1840-களில் முதன்முதலாக ரசாயன உரங்கள் தயாரிக்கப்படும் வரை, உலகம் முழுக்க இயற்கை விவசாயம்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இயற்கையின் எல்லைகளுக்கு உட்பட்டே வேளாண்மை நடந்தது. இயந்திரங்களின் பயன்பாடும் அந்தக் காலத்தில் மிகக்குறைவே. உதாரணத்துக்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் ஒரு டிராக்டர்கூட அமெரிக்காவில் இல்லை. ஆனால், 1950-ம் ஆண்டில் அங்கே கிட்டத்தட்ட 3 லட்சம் டிராக்டர்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜெர்மனியில் ‘இயற்கைவழி வேளாண்மையும் (Natural Agriculture), பயோடைனமிக் வேளாண்மையும் (Biodynamic Agriculture) இயற்கை விவசாயத்தின் இருபெரும் பிரிவுகளாக உருவெடுத்தன. ஜெர்மனியில் அப்போது வலுப்பெற்று வந்த, ‘வாழ்க்கை மறுமலர்ச்சி இயக்கம்’ (Life Reform Movement), இயற்கை வாழ்வியலை முன்னிறுத்தியது. இதன் பகுதியாக வளர்ந்த இயற்கை வழி வேளாண்மை, ஊட்டச்சத்துமிக்கச் சைவ உணவு, தோட்டவேலைகள், பழ மரங்கள் வளர்ப்பு, விலங்குகளில்லா உழவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பிரீட்ரிச் கிளான்ஸ் (Friedrich Glanz), ஹைன்ரிஷ் ஹாப் (Heinrich Hopf) தொடங்கி, இவால்ட் குனிமேன் (Ewald Kunnemann) வரை பலர் தங்கள் எழுத்துக்களாலும், களச் செயல்பாடுகளாலும், பயிற்சிகளாலும், இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்வதாலும் இயற்கை வழி வேளாண்மையை வளர்த்தனர். இந்த இயக்கத்தின் முக்கிய நபரான குனிமேன், தன்னுடைய வேளாண் அனுபவங்களைக் கொண்டு, ‘பயோலாஜிக்கல் சாயல் கல்ச்சர் அண்டு மென்யூர் எக்னாமி’ (Biological Soil Culture and Manure Economy) என்ற புத்தகத்தை 1931, 1932, 1937 ஆகிய ஆண்டுகளில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படைகளை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசியது.

குனிமேன் வழியில், ஸ்விட்சர்லாந்தில் மீனா ஹூப்ஸ்டெட்டர் (Mina Hofstetter) இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுத்தார். சூரிச் மாநகருக்கு அருகிலிருந்த இவரது பண்ணை, ஆய்வு நிலையமாகவும் இயற்கை வேளாண் பயிற்சி நிலையமாகவும் விளங்கியது. இயற்கை வேளாண்மை குறித்து இவர் பல புத்தகங்களையும் எழுதினார். இந்தத் தொடர்ச்சியில், பிரான்சில், கிளாடு ஆபெர்ட் (Claude Aubert) பிற்காலத்தில் எழுதிய ‘எல்’ அக்ரிகல்ச்சர் பயோலாஜிகியூ (‘L’ agriculture biologique) என்ற புத்தகம், இயற்கை வேளாண்மைக்கான அடிப்படைப் புத்தகங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

இயற்கை வழி வேளாண்மையைப் போலவே, பயோடைனமிக் விவசாயமும் இயற்கை வேளாண்மையைக் கட்டமைத்த முக்கிய வழிமுறையாகும். ஜெர்மனியில், முதல் உலகப் போருக்குப் பிறகு புதிதாக வந்த வேதியுரங்களைப் பயன்படுத்திய பிறகும்கூட, வேளாண் உற்பத்தி 40% சதவிகிதம் குறைந்தது. 1930-களின் இறுதி வரை இந்தச் சூழல் நீடித்தது. குறைந்து வந்த மண்வளம், பயிர்கள் மற்றும் விலங்குகளுக்கு உண்டான நோய்கள் குறித்து விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பயோடைனமிக் விவசாயத்தின் தந்தையான ரூடால்ஃப் ஸ்டைனர் (Rudolf Steiner), 1924-ம் ஆண்டில் அப்போது ஜெர்மானியப் பகுதியாக இருந்த (தற்போது போலந்தில் உள்ள) கோபர்விட்ஸ் (Koberwitz) கிராமத்தில், வேளாண்மை குறித்து 8 உரைகளை நிகழ்த்தினார். இதில் ஜெர்மனி, போலந்து உள்பட ஆறு நாடுகளிலிருந்து மொத்தம் 111 பேர் கலந்துகொண்டனர். இந்த உரைகள்தான், பயோடைனமிக் விவசாயம் ஒரு வடிவம் பெற உதவின. அதே ஆண்டு இறுதியில் இந்த உரைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாக வெளிவந்தன. 1928-ம் ஆண்டில், ‘தி அக்ரிகல்ச்சர் கோர்ஸ்’ (The Agriculture Course) என்ற பெயரில் இந்த உரைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டன.

‘உயிர் சூழலில் மண் வளம், பயிர் வளர்ச்சி, கால்நடைப் பராமரிப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட விஷயங்கள்’ என்று பயோடைனமிக் வேளாண்மை கூறுகிறது. ஸ்டைனர், ‘நிலமொரு வாழும் உயிரினம். விவசாயம் செய்வதற்கு இயற்கையுடன் நேரடித் தொடர்பு அவசியம்’ என்றார். ஸ்டைனரின் முயற்சிகளின் விளைவாகவே, 1924-ம் ஆண்டில் உலகின் முதல் இயற்கை வேளாண் சான்றிதழான ‘டிமீட்டர்’ (Demeter) உருவாக்கப்பட்டது. தானியங்கள் மற்றும் மண்வளத்துக்கான கிரேக்கப் பெண் தெய்வமான ‘திமீதிர்’ பெயரில் இயங்கும், ‘டிமீட்டர் இன்டர்நேஷனல்’ (Demeter International), இன்று இயற்கை வேளாண் சான்றிதழ்கள் வழங்கும் உலக நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. ஸ்டைனர் இந்தியாவுக்குப் பயணம் செய்து, நமது பாரம்பர்ய விவசாய முறைகளை அறிந்துகொண்டு, மேலைநாட்டு விவசாயத்தையும் கீழைநாட்டு விவசாயத்தையும் சேர்த்து உருவாக்கியதுதான் பயோடைனமிக் வேளாண்மை முறை என்பது கவனிக்கதக்கது.

- பயணம் தொடரும்.

க.சரவணன்