Published:Updated:

கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!

கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!
பிரீமியம் ஸ்டோரி
கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!

வாசகர்கள்

கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!

வாசகர்கள்

Published:Updated:
கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!
பிரீமியம் ஸ்டோரி
கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!
கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!

புத்தம் புதிய மூன்று தொடர்களும் அருமை. இயற்கை விவசாயத்தில் விளைந்த விளைபொருள்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சமயத்தில் ஏற்றுமதி குறித்த தொடர் கட்டுரை வெளிவருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

-எம்.சுதாராணி, நீலாம்பூர்.

துராந்தகத்தில் நடைபெற்ற ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிரலங்கு செய்தியைப் படித்தேன். தமிழக அரசின் பேரூராட்சி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட பயிலரங்கு, இவ்வளவு சிறப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் பல மாதங்களாக நாங்கள் தேடிக்கொண்டுள்ள ‘வேஸ்ட் டீகம்போஸர்’ கரைசலையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப் பட்டது எனப் படித்தபோது ஆச்சர்யப்பட்டேன். கடைசியில் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.

-கே.தேவநாதன், கடலூர்.

சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அணை இருந்தாலும் அதன் பலனை, எங்கள் மாவட்ட விவசாயிகளால், அனுபவிக்க முடியவில்லை. காவிரி நீரை, வறண்டு கிடக்கும் வசிஷ்ட நதி வழியாகக் கொண்டு வரலாம் என்று ஆய்வு செய்து கட்டுரை எழுதிய பொறிஞர் வீரப்பன் அவர்களை, சேலம் மாவட்ட மக்கள் மறக்கமாட்டார்கள். சேலம் மண்ணின் மைந்தர்தான், தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்துள்ளார். காவிரி நீரைச் சேலம் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தால், வரலாற்றில் அவர் பெயர் வாழும்.

-எம்.ஜெயராமன், ஏத்தாப்பூர்.

கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்றுக் கொடுத்தார்!

ண், மக்கள், மகசூல் தொடர் கட்டுரை நிறைவுபெற்றதை அறிந்தபோது, வருத்தமாகவே இருந்தது. விவசாயிகளுக்குக் குழப்பமான அறிவியல் நுட்பங்களை, எளிமையாக அறிந்துகொண்டோம். ஒவ்வொரு இதழிலும் இடம்பெற்ற கட்டுரைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

-ஆர்.சுஜாதா, திருவெறும்பூர்.

‘மண்புழு விஞ்ஞானி’ முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை விவசாயத்துக்கு மண்ணும் மண்புழுக்களும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொடுத்துவிட்டார்.

-கே.பாண்டுரங்கன், காட்பாடி.

ண் வளம் என்று பேசியவர்கள் மத்தியில் மண் நலம்தான் முக்கிய என்று அடித்துச்சொன்ன, ‘மண்புழு விஞ்ஞானி’க்கு வாழ்த்துகள். அப்புறம், மறந்துவிடாமல், இந்தத் தொடரை விகடன் பிரசுரத்தின் மூலம் நூலாக வெளியிடுங்கள்.

-எம்.சின்னசாமி, திருப்போரூர்.

யற்கை விவசாயிகள் விஞ்ஞானிகளாக மாற வேண்டும். மாறினால்தான் நல்லது நடக்கும்.

-அ.மாரியப்பன், பாரியூர்.

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.