Published:Updated:

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!
பிரீமியம் ஸ்டோரி
சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

தீர்வு

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

தீர்வு

Published:Updated:
சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!
பிரீமியம் ஸ்டோரி
சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள், நீர் மேலாண்மையில் உலகுக்கே வழிகாட்டின. ஆனால் இன்றோ... நீர் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது. காவிரியிலும் கொள்ளிடத்திலும் தண்ணீர் கரை புரண்டோடியும்கூட, பெரும்பாலான கிராமங்களுக்குத் தண்ணீர் வந்து சேரவில்லை. காவிரி டெல்டா வரலாற்றில் இதற்கு முன் இப்படியொரு விநோத அவலம் நிகழ்ந்ததில்லை.

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

‘தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக இதில் சிறப்பு கவனம் செலுத்தினால்தான் இனிவரும் காலங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்’ என்று எச்சரிக்கை குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரங்கராஜன், “கல்லணைக் கால்வாயை நம்பியுள்ள கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையிலும், தண்ணீர் வரவேயில்லை. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால்தான் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வந்து சேரும். ஆனால், கரைகள், மதகுகள் பலவீனமாக இருப்பதால் 1,700 கனஅடி அளவுதான் தண்ணீர் திறக்கப்படுகிறது. 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் 240 கோடி ரூபாய் செலவில் கல்லணைக் கால்வாய்ச் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு, இதுவரை பராமரிப்புப் பணிகள் நடக்கவேயில்லை. ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால்தான் நீர்நிலைகள் உயிர்ப்போடு இருக்கும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

“தேவைக்கு மேல் மிதமிஞ்சிய நீரைத்தான் உபரிநீர் என்கிறோம். அப்படிப்பட்ட உபரிநீர் கடலில் கலந்தால், அது இயல்பானது என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தற்போது நாம் இழந்திருப்பது, தமிழக அரசின் அக்கறையின்மையால் வீணடிக்கப்பட்ட நீர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை. இதனால், விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள்.

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

இங்குள்ள வாய்க்கால்கள் அனைத்தையும் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு தூர்வாரிச் செப்பனிட வேண்டும். சேதமடைந்துள்ள மதகுகளைச் சீரமைக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணும் வகையில் காவிரி டெல்டா நீர் மேலாண்மையை வெற்றிகரமாகச் செயல்படுத்த... தமிழக அரசு அனைத்துப் பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் நடத்தி, விவசாயிகளிடம் ஆலோசனை பெற்று மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.

சீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா!

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், “பொதுப்பணித் துறைக்கு எனத் தனி அமைச்சர் இருந்தால்தான், அத்துறையில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும். துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் பேசி முடிவுகள் எடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் முதல்வரே பிடிவாதமாக அத்துறையைத் தன்னிடமே வைத்துக்கொண்டு எந்தப் பணியிலும் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுக்கத் தண்ணீருக்காகப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முதல்வர் கண்டுகொள்ளவேயில்லை” என்றார்.

காவிரியால் டெல்டா பகுதிகள் பாசனம் பெறுவது அரசின் கைகளில்தான் உள்ளது.

- கு.ராமகிருஷ்ணன், படங்கள்:ம.அரவிந்த்