Published:Updated:

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன்

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன்

Published:Updated:
தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

மேட்டூர் அணையிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, முக்கொம்பு மேலணை. இங்கிருந்துதான் காவிரி இரண்டாகப் பிரிந்து கொள்ளிடம், காவிரி எனப் பயணிக்கிறது. அடுத்ததாக, கல்லணையிலிருந்து... காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் என நான்காகப் பிரிகிறது. இதில் கொள்ளிடம் ஆற்றில் குறைவான தண்ணீர்தான் வெளியேறும். காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் வழியாகச் செல்லும் தண்ணீர் மூலமாகத்தான் கடைமடைப்பகுதி விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். ‘இதுவரை தண்ணீர் திறக்கவில்லை’ எனப்போராடி வந்த காவிரி டெல்டா விவசாயிகள், இந்த முறை வரலாற்றிலேயே முதன்முறையாக... ‘திறந்துவிட்ட தண்ணீர் எங்களுக்கு வரவில்லை’ என்று போராடி வருகிறார்கள். மானமுள்ள ஆட்சியாளர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

கடந்த 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22-ம் நாளன்று, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள மேலணையில் கொள்ளிடப்பகுதி நீரொழுங்கியிலுள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பழைமையான மேலணை, 1836-ம் ஆண்டில் அதாவது 182 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டது. கூடுதலான வெள்ளம், கூடுதலான வேகத்துடன் தொடர்ந்து 10 நாள்களுக்கு மேல், கொள்ளிடம் நீரொழுங்கியில் (Water Regulator) பாய்ந்த காரணத்தால்... அடித்தளம் அரிக்கப்பட்டு, இவ்விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்குப் பிறகு பாசன வல்லுநர்கள் பலர், “தமிழ்நாட்டில் கல்லணை, கீழணை (அணைக்கரை) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழைமையான பாசனக் கட்டமைப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டறிந்து வலிமைப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம். போதுமான நிதி ஒதுக்கப்பட்டுப் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளதோடு, தமிழக அரசுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். இத்தகைய பழைமையான பாசனக் கட்டமைப்புகளை விரைவாக வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப விஷயங்களையும் எங்கள் அமைப்பின் சார்பில் பரப்பி வருகிறோம். இனிமேலும் சீரமைக்கவில்லை யென்றால், பழம்பெருமை மட்டும்தான் பேச முடியும். அதனால், யாருக்கும் பலன் கிடைக்கப்போவதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

கனமழை காரணமாக, கடந்த 16.6.2018-ம் தேதியியன்றே கர்நாடகா மாநிலத்தில் அணைகள் திறக்கப்பட்டுத் தமிழகத்துக்குத் தண்ணீர் வரத்தொடங்கியது. 22.7.2018-ம் தேதியன்று மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து, 22.7.2018-ம் தேதியன்றே கல்லணையிலிருந்து வெண்ணாறு, காவிரி, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வெண்ணாறு, காவிரி ஆறுகளில் விநாடிக்கு 7,000 கனஅடி நீரும், கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 1,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. படிப்படியாக இது உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டது. முதலில் கடைமடைக்குத் தண்ணீர் விடுவது என்றும் முடிவாயிற்று. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகும், கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் பல பகுதிகளிலிருந்தும் குரலெழுப்பினார்கள். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் வலுத்தன.

தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தியதின் பேரில், உண்மை நிலையை அறிய, அனைத்துப் பகுதிகளுக்கும் ஆய்வுக்குழுக்கள் அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அந்த ஆய்வுக்குழுக்கள், ஆறுகளின் போக்கிலேயே பயணம் மேற்கொண்டு தண்ணீரின் போக்குக்கு உள்ள தடைகள் என்னவென்று ஆய்வு செய்தன.

இந்த ஆய்வின்போது கிடைத்த தகவல்களின் சாராம்சங்களைப் பார்ப்போம்...

ஆறுகள் பெரும்பாலும் தூர்வாரப்பட்டுள்ளன. தூர்வாரியதோடு, நாணல், நெய்வேலிக்காட்டாமணக்கு போன்ற களைகளையும், மணல் திட்டுகளையும் அகற்றியிருக்க வேண்டும். அவற்றை அகற்றவில்லை. ஆனால், தூர்வாராததாலோ, செடிகொடிகளாலோ தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. கடந்த 28.8.2018-ம் தேதி வரை கல்லணைக் கால்வாய் நீர் பேராவூரணியை எட்டவில்லை. அதேபோலப் பாமணி, கோரையாறு மற்றும் கிளை நதிகளான முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறுகள் ஆகியவற்றில் ஓடிய தண்ணீரும் கடைமடையை எட்டவில்லை.

20.8.2018-ம் நாளன்று கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த தகவலின்படி... காவிரியில் ஒரு விநாடிக்கு 9,801 கன அடி தண்ணீர், வெண்ணாற்றில் ஒரு விநாடிக்கு 10,010 கனஅடி, கல்லணைக் கால்வாயில் ஒரு விநாடிக்கு 3,406 கன அடி என்ற அளவுகளில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆறுகளிலும் ஓடிய மொத்த தண்ணீரின் அளவு ஒரு விநாடிக்கு 23,217 கனஅடி. இதன்படி ஒரு நாளில் ஓடிய தண்ணீரின் அளவு, 2 டி.எம்.சி. இந்த 2 டி.எம்.சி அளவு தண்ணீரை ஒரு நாளில் 46,325 ஏக்கர் பரப்புக்குப் பாய்ச்ச முடியும். 22.7.2018-ம் தேதி முதல் 28.8.2018 வரை கிட்டத்தட்ட 30 நாள்கள் தண்ணீர் பாய்ந்ததாகக் கணக்கு வைத்துக் கொண்டாலும்... 60 டி.எம்.சி நீர் பாய்ந்து கிட்டத்தட்ட 13 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் அளவு நிலங்கள் பயனடைந்திருக்க வேண்டும். ஆனால், நிலங்கள் காய்ந்துதான் கிடக்கின்றன.

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

காவிரி, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் ஓடிய தண்ணீர் கரைகளுக்கு உள்ளடங்கியே ஓடியுள்ளன. அதனால், முழுக்கொள்ளளவில் ஓடியதாகத் தோன்றவில்லை. நீடாமங்கலம் ரெகுலேட்டரில் இருந்து ஓடும் பாமணி ஆறு, மன்னார்குடி வழியாக ஓடும் வழியெல்லாம் கதவணைகளால் தேக்கப்பட்டு ஆற்றில் ஒருபகுதி அளவே தண்ணீர் சென்றது. முத்துப்பேட்டை அருகே தண்ணீரின் அளவு சுருங்கிவிட்டது. கோரையாறு சுமார் பாதியளவு தண்ணீருடன் துவங்கி, முள்ளியாறு, மானங் கொண்டான் ஆறாகப் பிரிந்த பிறகு, தண்ணீர் மிகவும் குறைந்து போய்விட்டது. வெண்ணாற்றின் தண்ணீர் போக்கு தலைப்பிலேயே குறைவாக வைக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்ல... முக்கிய ஆறுகளான காவிரி, வெண்ணாறு ஆகியவற்றில் அதிக நீர் திறந்திருக்கலாம். ஆனால், கரைகள் பழுதடைந்துள்ளதால் திறக்கமுடியாது என்று கூறப்பட்டது.

அதீத மணல் கொள்ளையால், ஆறுகளின் தரைமட்டம் 2 அடியிலிருந்து 3 அடி வரை கீழே இறங்கியுள்ளது. ஆற்றுக்கரையில் பாய்வாய்க்கால் தலைப்பு அல்லது வடிகால் வாய்க்காலில் உள்ள மதகின் ‘சில் லெவல்’ (SILL LEVEL), ஆற்றின் தரைமட்டத்தைவிட உயரத்தில் உள்ளது. ஆற்றின் முழுக்கொள்ளளவு தண்ணீர் பாயும்போது கூட வாய்க்காலில் சுமார் பாதியளவு தண்ணீர்தான் ஓட முடிகிறது. ஆறுகள், மிகவும் சிதைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மணல்படுகை முழுதாக அரிக்கப்பட்டு ஆற்றுப்படுகை கரடுமுரடான கற்களாக உள்ளன. இந்த இடங்கள் எளிதாக அரிக்கப்பட்டுப் பள்ளமாகின்றன. பாலங்களின் அஸ்திவாரங்களைச் சுற்றி பெரிய அளவில் பள்ளங்களாக அறுத்தெடுக்கப்படுகின்றன. இந்த நிலையிலும் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது.

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

ஆற்றுக்கரைகளில் நாற்சக்கரவண்டிகள், இருசக்கரவண்டிகளின் போக்குவரத்துக்குப் போடப்பட்ட சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. இதனால், பருவமழை காலங்களில் கரைகளில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் மணல் மூட்டைகள் போன்றவற்றை எடுத்துச்செல்வது மிகவும் கடினமாக இருக்கும். வெண்ணாற்றின் வட கரையில் கூடலூர் என்ற ஊரின் அருகே ரெகுநாதக் காவிரி என்ற 5,000 ஏக்கர் பாசனப்பரப்புக் கொண்ட வாய்க்காலுக்கு ஒரு தடுப்பணை கட்டப் பட்டுள்ளது. ஆனால், தடுப்பணை கட்டிய பிறகும் வாய்க்காலில் முழுக்கொள்ளளவுக்கு நீர் பாய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

சுமார் ஆறு வார காலம் தண்ணீர் பாய்ந்தோடியும் ஒரு ஆற்றில்கூடக் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் எட்டவில்லை. வேறெங்கும் பெரிய அளவில் பாசனம் மேற்கொள்ளப்படவில்லை. இதற்குக் காரணமாக இருக்கும் மணல் கொள்ளையை எதிர்த்துப் பெரும் போரையே நடத்த வேண்டியிருக்கிறது. மணல் கொள்ளையை மூடி மறைப்பதற்காகத்தான் காவிரி கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வராததற்குப் பல காரணங்களைச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறது, தமிழக அரசு. இந்த அரசு மட்டுமில்லை. எந்த அரசு வந்தாலும் இதைத்தான் செய்கிறது. மணல் கொள்ளைக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றாத வரை... தமிழக ஆறுகளுக்கு விமோசனமே இல்லை. அதனால், காவிரி டெல்டா பாசனப் பகுதிக்குக் காவிரி நீர், இனி கானல் நீராகத்தான் இருக்கும்.

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

மேட்டூர் தொடங்கி கடைமடை வரை காவிரியாற்றில் மட்டும் 24,000 கால்வாய்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. காவிரி மற்றும் காவிரி உப நதிகளின் மூலம் பயன்பெறும் நிலங்களின் அளவு 28 லட்சத்து 20 ஆயிரத்து 800 ஏக்கர். இதில் முதல் போகத்தில் 22 லட்சம் ஏக்கரும், இரண்டாம் போகத்தில் 6 லட்சம் ஏக்கர் நிலங்களும் பயன்பெற வேண்டும். இதற்குத் தேவையான தண்ணீரைக் கால்வாய்கள்தான் எடுத்துச் செல்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை, சோழர் காலத்தில் கட்டமைக்கப் பட்டவை. நாம் பெரிய அளவில் எதையும் கட்டமைக்கவில்லை. இருந்தாலும் இருப்பதையாவது காப்பாற்றி வைத்திருக்கலாமல்லவா... தூர்வாருவது மட்டும் பலன் தராது. ஆற்றின் அடிப்படையைத் தகர்க்கும் செயல்களைத் தடுத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். உடலுக்கு நரம்புகள்போல், பாசனத்துக்குக் கால்வாய்கள் அவசியம். இந்தக் கால்வாய்கள் ஆற்றை நம்பித்தான் இருக்கின்றன. ஆறுகளே அறுத்தெடுக்கப் படும்போது, கால்வாய்கள் என்ன செய்ய முடியும்.

- அடுத்த இதழில் நிறைவுபெறும்.

- தொகுப்பு: த.ஜெயகுமார், படங்கள்: தே.தீட்ஷித்

நிபுணர்களைக் கலந்தாலோசியுங்கள்!

“நீர்மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் தண்ணீர், பாசனத்துக்கு அனுப்பப்படுகிறது. அதே தண்ணீரை மீண்டும் பயன்படுத்தி, ஏன் அதிக மின்சாரம் தயாரிக்கக் கூடாது?”

அசோக், திருநெல்வேலி.


“நீர் மின்சாரம் தயாரிப்பின்போது உயரமான இடத்திலிருந்து அதிக அழுத்தத்தில் தண்ணீரானது மின்சாரம் எடுக்க அனுப்பப்படுகிறது. அங்கு தண்ணீர் இயக்கத்துக்கு உட்பட்டு அதன் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதேநீரைத் திரும்ப பயன்படுத்தி மின்சாரம் எடுக்க போதுமான உயரமோ, அழுத்தமோ இருப்பதில்லை. அதனால், மீண்டும் மின்சாரம் தயாரிக்க அந்தத் தண்ணீர் பயன்படுத்தபடுவதில்லை. அதனால்தான் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வெளியேற்றப்படுகிறது.

“நான் கொஞ்சம் நிலம் வாங்கியுள்ளேன். அதில் புதிதாக ஆழ்த்துளைக் கிணறு (போர்வெல்) அமைத்து விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன், தங்களின் ஆலோசனை தேவை?”

திலீப், தருமபுரி.


“இளைஞர்களெல்லாம் நிலம் வாங்கி விவசாயம் செய்வது ஆரோக்கியமான விஷயம். எங்கே நிலம் வாங்கினாலும், அங்கே தண்ணீர் இருந்தால்தான் விவசாயத்தையே தொடங்க முடியும். மானாவாரி நிலங்களை வாங்கிவிட்டு அங்கே போர்வெல் போட்டுதான் விவசாயம் செய்வேன் என்று அடம் பிடிப்பது சரியான முறையல்ல. தக்க நிபுணர்களைக் கலந்தாலோசித்து, ஜியோ பிஸிக்கல் கருவியைக் கொண்டு நிலத்துக்குள் ஊற்றுகள் இருக்கிறதா, அங்கே போர்வெல் போட்டால் தண்ணீர் வருமா என்பதையெல்லாம் அறிந்த பிறகே போர்வெல் போட வேண்டும். ஊருக்கு நாலு போர்வெல் வண்டிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதற்காக ஒரு போர் போட்டுப் பார்ப்போமே என்று காசைக் கரியாக்க வேண்டாம். இப்போது  நிலத்தடி நீர் இருப்பை எளிதாக அறிய கருவிகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி முயன்று பாருங்கள்."