Published:Updated:

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

Published:Updated:
நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

‘‘ ‘ஃபெரோசிமென்ட்’ தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் நில அதிர்வு வந்தாலும், பாதிப்பு ஏற்படாது என்று வாட்ஸ் அப்பில் படித்தேன்.  அந்தத் தகவல் உண்மையா, அதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

எம்.மகாலிங்கம், சிதம்பரம்.

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

ஆரோவில் பகுதியில் பல ஆண்டுகளாக ‘ஃபெரோசிமென்ட்’ கட்டடத் தொழில்நுட்பத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுத்து வரும் தொழில்நுட்ப பயிற்றுநர் து.ராஜாராமன், பதில் சொல்கிறார். ‘‘தற்போது வீடு கட்டுவதில் பலவிதமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவை அதிகமான செலவு பிடித்தாலும் சூழலுக்கு உகந்ததாக இல்லை. அதற்கு மாற்றாகத்தான் ஃபெரோசிமென்ட் (Ferrocement) தொழில்நுட்பங்களை முன் வைக்கிறோம். புதுச்சேரி-தமிழக எல்லையில் அமைந்துள்ள ‘ஆரோவில்’ சர்வதேச நகரத்துக்குச் சென்றால்… உங்களின் கண் முன்பாகவே அந்த வீடுகளைக் காண முடியும். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள், அங்கேயுள்ள வீடுகளெல்லாம் அதிகபட்சம் 30 நாள்களில் கட்டபட்டவைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

பெரும்பாலும் வெளிநாட்டினர் வசிக்கும் இந்தப் பகுதியில், ஃபெரோசிமென்ட் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இதைப் பற்றிய விவரம் கேட்பவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார்கள். ‘ஃபெர்ரோஸ்’ (Ferrous) என்ற வார்த்தைக்கு இரும்பு சார்ந்த பொருள் என்று அர்த்தம். செங்கல் இல்லாமல்… இரும்பு, சிமென்ட் மற்றும் மணலைக் கொண்டு மட்டுமே கட்டப்படுவதால் அதற்கு ‘ஃபெரோசிமென்ட்’ என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. நன்றாகக் கட்டட வேலை தெரிந்த கொத்தனார், ஒரே நாளில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளமுடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பூகம்பம் (நில அதிர்வு) ஏற்பட்டபோது, அங்கிருந்த பெரிய பெரிய கட்டடங்கள்கூடச் சரிந்து விழுந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு கட்டடம் மட்டும் அசையாமல் நின்றது. அது ஆரோவில்லில் பயிற்சிபெற்ற ஒருவரால் ‘ஃபெரோசிமென்ட்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டடம். அதைப் பார்த்து ஆச்சர்யத்தால் அதிசயத்து நின்றவர்கள், தற்போது குஜராத்தில் இந்த வகைக் கட்டடங்களை அதிகமாக உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். ஓர் இடத்தில் நீங்கள் நிறைய செலவு செய்து வீடு கட்டுகிறீர்கள். ஆனால், அந்த இடம் உங்களுக்கு ஏற்றதாக இல்லை. ‘இனி என்ன செய்ய முடியும்?’ என்று சகித்துக்கொண்டு வாழ்வீர்கள். ஆனால், ஃபெரோசிமென்டில் இப்பிரச்னை கிடையாது. காரணம்… வீட்டை அப்படியே பிரித்து, வேறொரு இடத்தில் கட்டிக்கொள்ள முடியும். மேலும், இந்த வகை வீடுகளில் பத்து அடிக்கு ஒன்று என்று, குறைந்தது ஐந்தடி ஆழத்தில் வைக்கப்படும் பில்லர்களை, வீட்டைப் பிரிக்கும்போது வேறு இடத்துக்குக் கழற்றிக்கொண்டு சென்றுவிடலாம். கூடவே, சுவர்கள், கூரை போன்றவை அச்சு போன்ற அமைப்பின்மீது வைத்து வடிவமைக்கப் படுகிறது. கதவு, ஜன்னல் என்று எதற்கும் மரங்களைப் பயன்படுத்தாமல் ஃபெரோசிமென்ட்டை வைத்தே வேலையை முடிப்பதால், இதை ‘கிரீன் பில்டிங்’ (பசுமை கட்டடம்) என்கிறோம்.

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’
நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

ஆக… இரும்புக் கம்பி, இரும்பு வலை, சிமென்ட், மணலை எல்லாம் தயார் செய்யும் அந்த நிமிடமே, புதுமனை புகுவிழா அழைப்பிதழையும் சொந்த பந்தங்களுக்குக் கொடுத்துவிடலாம். அடுத்த ஒரு மாதத்தில் அழகான வீடு எழுந்து நிற்கும். சாதாரண முறையில் கட்டடம் கட்டுவதைக் காட்டிலும் இந்த முறையில் கட்டினால் 30 சதவிகிதம் செலவு குறையும். இந்த நுட்பத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கப்பல்கள்கூட, இன்றைக்கும் நன்றாக உள்ளன. வெளிநாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான், கட்டடங்களைக் கட்டி வருகிறார்கள். இந்த முறையின் மூலம் 10 அடுக்கு மாடிகளைக்கூட எளிதாகக் கட்டிவிடலாம். பூகம்பம், நில அதிர்வு ஏற்படும் பகுதிகளில், இந்தத் தொழில்நுட்பத்தில்தான், வீடு கட்ட வேண்டும் எனச் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இந்திய அளவில், ஆரோவில் பகுதியிலும், கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் ‘ஃபெரோசிமென்ட்’ மூலம் வீடுகட்ட வேண்டும் என்ற விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பசுமை விகடன் இதழில் தொடர்ந்து, இந்தத் தொழில்நுட்பம் குறித்து எழுதிவருகிறார்கள். ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. வெளிநாட்டுக் காரர்கள் எதைச் செய்தாலும், அதைப் பின்பற்றும் நம் மக்கள், இந்த நல்ல விஷயத்தையும் பின்பற்றலாமே.’’

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

தொடர்புக்கு, செல்போன்: 88257 22924.

- புறாபாண்டி, ஓவியம்: வேலு

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள காய்கறி விதைகளை வாங்க விரும்புகிறேன். எங்கு கிடைக்கும்?’’
 
எஸ்.மாலா, பாலக்கோடு.


‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், காய்கறி பயிர்கள் துறையில் முருங்கை, தக்காளி, கத்திரி, மிளகாய், கொத்தவரை, பாகற்காய், சுரைக்காய், அவரை, புடலங்காய், வெண்டை, அகத்தி... போன்ற விதைகள் விற்பனைக்கு உள்ளன. விதை கையிருப்புக்கு தக்கபடி விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.’’

தொடர்புக்கு, காய்கறி பயிர்கள் துறை, தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்-641003.

தொலைபேசி: 0422 6611374.

நீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்?’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.