Published:Updated:

இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

இயற்கை பொருள்களுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

கண்காட்சி

இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

கண்காட்சி

Published:Updated:
இயற்கை பொருள்களுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

யற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு, இயற்கை வாழ்வியல் ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், இயற்கைச் சார்ந்த நிகழ்வுகளும் அதிகம் நடந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில், சென்னையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் ‘எய்ம் ஃபார் சேவா’ என்ற அமைப்பைச் சேர்ந்த ‘ஸ்பிரிட் ஆப் தி எர்த்’ குழு, இந்திய இயற்கை வேளாண்மைக் கண்காட்சியை நடத்தியது.

இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

சென்னை,  வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னைதெரசா மகளிர் வளாகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை 5 நாள்கள் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில், 14 மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பர்ய விதைகள், கலைப்பொருள்கள் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தொழில்முனைவோர் எனப் பல தரப்பினரும் கண்காட்சியைப் பார்வையிட்டுப் பயனடைந்தனர். கல்வி மற்றும் விழிப்பு உணர்வு மூலம் இயற்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இக்கண்காட்சி... சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆலோசகர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

அரிசி, தேன், சர்க்கரை, மசாலா மற்றும் நறுமணப் பொருள்கள், இனிப்புப் பொருள்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், காபி, தேயிலை பானங்கள், அழகுப்பொருள்கள், ஆர்கானிக் காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள், சந்தன மரத்தால் செய்யப்பட்ட அழகுப் பொருள்கள்... என ஐம்பது அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விதைகள், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கலைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட அரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசிய இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் கே.விஜயலட்சுமி, “பாரம்பர்ய அரிசி வகைகளை இன்று முற்றிலுமாக மறந்துவிட்டோம். புதிய வீரிய ரக நெல் எல்லா இடங்களுக்கும், எல்லாச் சூழலுக்கும் ஒத்து வராது. நம் முன்னோர் பின்பற்றிய பாரம்பர்ய நெல் ரக விதைப்பே என்றும் நிலையான பயனைத் தரும். விவசாயம் என்றுமே இயற்கையைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். கருங்குறுவை, மாப்பிள்ளைச் சம்பா, வாடன் சம்பா, சிவப்பு அரிசி எனப் பல பாரம்பர்ய அரிசி வகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. இன்றைக்குச் சத்துகள் இல்லாத அரிசியைத்தான் சாப்பிடுகிறோம். அதோடு, பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு விளைந்த நஞ்சுகளைத்தான் சாப்பிட்டு வருகிறோம். பாரம்பர்ய அரிசியை உண்டதால்தான் நம் முன்னோர் நோய்நொடி இல்லாமல் அதிக நாள்கள் வாழ்ந்தனர். விவசாயிகளுக்கு அதிகச் செலவில்லாமல் விளையக்கூடியவை பாரம்பர்ய ரகங்கள்தான்” என்றார். கண்காட்சி நடந்த ஐந்து நாள்களும் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடைபெற்றன. டி.வி.எஸ் குழும நிர்வாக அறங்காவலர் ஷீலா பாலாஜி, சாம்பவ் அமைப்பின் நிறுவனர் மற்றும் நாரிசக்தி விருது பெற்றவருமான சபர்மதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி மகாதேவன் ஆகியோர் இயற்கை விவசாயம் பற்றி உரையாற்றினர்.

- துரை.நாகராஜன்,  படங்கள்: ப.சரவணகுமார்

“பாரம்பர்ய விழாவாக பார்க்கிறார்கள்!”

பஞ்சாபிலிருந்து வந்து அரங்கு அமைத்திருந்த வினோத் ஜயானியிடம் பேசினோம். “பாரம்பர்ய விதைகள், உணவுப் பொருள்கள் அடங்கிய இந்தக் கண்காட்சியை மக்கள் பாரம்பர்ய விழாவாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் இத்தனை பேர் வந்து பார்வையிடுகிறார்கள். நான் பஞ்சாபிலிருந்து பூசணி விதைகள், பீன்ஸ் விதைகள் என்று பஞ்சாப் நாட்டு காய்கறி விதைகளைக் கொண்டுவந்தேன். இந்த விதைகளை மாடித்தோட்டம் போடுபவர்கள் விரும்பி வாங்கிச் சென்றார்கள். இங்கே கடலை எண்ணெய், எள் எண்ணெய்தான் வாங்குவார்கள் என்று நினைத்து பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்பட்ட கடுகு எண்ணெயைக் குறைவாக கொண்டு வந்தேன். அதையும் விரும்பி வாங்கியது ஆச்சர்யமாக இருக்கிறது.

இயற்கை பொருள்களுக்கு மரியாதை!

நான் பஞ்சாபில் பஸில்கா மாவட்டம், கதேரா கிராமத்தில் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வருகிறேன். இந்தப் பண்ணையை ஒரு இயற்கை விவசாய சுற்றுலா பண்ணையாக மாற்றியிருக்கிறேன். இங்கு இயற்கை விவசாயம் செய்வதைப் பார்ப்பதற்கு நகர மக்கள், மாணவர்கள் என்று நிறைய பேர் ஆர்வத்தோடு வருகிறார்கள். அவர்கள் தாங்கள் மறந்துபோன ஒரு பாரம்பர்யத்தையே காணவே வருகிறார்கள் என்று நினைப்பதுண்டு. அதையேதான் இந்த கண்காட்சியும் நினைவுப்படுத்துகிறது. மாநில எல்லைகள் நம்மைப் பிரித்தாலும் பாரம்பர்யம் ஒன்றிணைக்கிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.