இயற்கை விவசாயத்தில் விளைந்த நஞ்சில்லாக் காய்கறிகளை உண்ண வேண்டும் என்றால், அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று இயற்கை விவசாயம் செய்வது. இரண்டாவது, இயற்கை விவசாயப் பொருள்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவது. மூன்றாவது, வீட்டு மாடியிலோ சுற்றுப்புறத்திலோ தோட்டம் அமைத்துக் காய்கறிகளை உற்பத்தி செய்வது. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு இவற்றில் மூன்றாவது வழிதான் சாத்தியமாகிறது. அந்த வகையில், சென்னை, கிழக்குத் தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் பிரேமா சுப்ரமணியன், வீட்டுத்தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவித்து கொள்கிறார்.

ஒரு காலைப்பொழுதில் பிரேமா சுப்ரமணியனைச் சந்தித்துப் பேசினோம். “எனக்கு 68 வயசாகுது. சின்ன வயசுல இருந்து எனக்குச் செடிகள்னா ரொம்பப் பிரியம். வீட்டைச்சுத்தி செடிகளா இருக்கணும்னு நினைப்பேன். மதுரையில குடியிருந்தப்போ வீட்டைச் சுத்தியும் செடிகளும், மர வகைகளும் இருந்துச்சு. 1999-ம் வருஷம் மதுரையில இருந்து சென்னைக்குக் குடி வந்தோம். அப்போ எங்க வீட்டைச் சுத்தி வயக்காடுதான் இருந்துச்சு. அதனால, செடிகளை வளர்க்குறதுல சிரமம் இல்லை. வீட்டைச் சுத்தி 5 தென்னை மரங்கள், மூணு கொய்யா, 5 பப்பாளி, எலுமிச்சைனு வெச்சேன். அடுத்து, மூலிகை செடிகள், காய்கறிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். என் கணவருக்கும் மகளுக்கும்கூடச் செடிகள் வளர்க்குறதுல ரொம்பவே ஆர்வம். அவங்கதான் நான் கேக்குற பொருள்களை வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க.

ஆரம்பத்துல மாடியில்தான் தொட்டிகளை வெச்சு காய்கறிச் செடிகளை வளர்த்துட்டுருந்தேன். இப்போ சில வருஷமா மாடியேற முடியலை. அதனால, தொட்டிகளைக் கீழே கொண்டு வந்துட்டேன். வீட்ல கட்டட வேலை செஞ்ச ஒருத்தர் திராட்சைச் செடிகளைக் கொண்டு வந்து கொடுத்தாரு. அதை ஒரு தொட்டியில நட்டு வெச்சேன். அது நல்லா வளர ஆரம்பிக்கவும், அதை எடுத்துத் தனியா நட்டு வெச்சு, ஒரு பந்தலைப் போட்டு விட்டுட்டேன். அதுல திராட்சைக் கொடி படர்ந்து நல்ல விளைச்சல் கொடுக்குது” என்ற பிரேமா சுப்ரமணியன், தோட்டத்திலிருந்த செடிகளைக் காட்டிக்கொண்டே பேசினார்.

“இந்தத் திராட்சைக்கொடி ஏழு வருஷமா காய்ச்சுட்டுருக்கு. ஒவ்வொரு சீசனுக்கும் 15 கிலோவுல இருந்து 20 கிலோ வரைக்கும் திராட்சை கிடைக்குது. பூ எடுக்குற நேரத்துல இலைகளைக் கழிச்சு விட்டுட்டா திராட்சை அதிகமாகக் கிடைக்கும். பூச்சித்தாக்குதல் இருக்குதானு கவனிச்சு இஞ்சிப் பூண்டு கரைசலைத் தெளிச்சு விட்டுடுவேன். வீட்ல வீணாகுற மட்கக்கூடிய குப்பைகள், காய்கறிக் கழிவுகளை எல்லாத்தையும் செடிகளுக்கு உரமாக்கிடுவேன். இப்போ இங்க தென்னை, பப்பாளி, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, நெல்லி, கத்திரி, வெண்டை, மிளகாய், புதினா, கொத்தமல்லி, அல்லி, தாமரை, முல்லை, சித்தரத்தை, தூதுவளை, இஞ்சி, மஞ்சள், ஓமம், துளசி, திப்பிலி, லெமன்கிராஸ்னு பல மரங்களும் செடிகளும் இருக்கு. பூக்கள், காய்கறிகள், மூலிகைகள்னு கலந்து வெச்சுருக்கேன். மொத்தமா 80 தொட்டிகள் இருக்கு.

எங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்குமே தோட்டம் போடுறதுல ரொம்ப ஆர்வம். எங்கேயாவது வித்தியாசமா ஒரு செடியைப் பார்த்தா அதைக் கொண்டு வந்து இங்க நட்டு வெச்சுடுவாங்க. எந்தச்செடியா இருந்தாலும் சாணம் போட்டுதான் நடவு செய்வோம். தினமும் ஒரு மணிநேரம் மட்டும்தான் வீட்டுத் தோட்டத்துல வேலை செய்றேன். காலையில மட்டும்தான் தண்ணீர் விடுவேன். வெயில் காலத்துல மட்டும் சாயங்காலமும் தண்ணீர் விடுவேன்” என்ற பிரேமா சுப்ரமணியன் நிறைவாக,

“முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில இருக்குற மூலிகைகளைத்தான் அவசரகால மருத்துவத்துக்குப் பயன்படுத்துனாங்க. ஆனா, இப்போ எதுக்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடிட்டுருக்கோம். ஒவ்வொரு வீட்டுலயும் மூலிகைச்செடிகளையும் காய்கறிகளையும் வளர்த்தா வைத்தியத்துக்கான செலவு பெருமளவு குறையும்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு

பிரேமா சுப்ரமணியன், செல்போன்: 98405 82152.

- துரை.நாகராஜன், படங்கள்: பெ.ராக்கேஷ்