Published:Updated:

முத்தாெரை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் தாெடர்ந்து செயல்பட வேண்டும் - நல்லசாமி கோரிக்கை!

முத்தாெரை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் தாெடர்ந்து செயல்பட வேண்டும் - நல்லசாமி கோரிக்கை!
முத்தாெரை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் தாெடர்ந்து செயல்பட வேண்டும் - நல்லசாமி கோரிக்கை!

முத்தாெரை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் தாெடர்ந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ``நீலகிரி மாவட்டத்தில் அட்டப்பாடியை அடுத்த சம்பர்கோடு என்ற இடத்தில் கேரள அரசு, சிறுவாணியின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் கோவை மாவட்டத்துக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். கோவை மாவட்டத்துக்குப் பாேதிய குடிநீர் கிடைக்காததால், தற்பாேது பில்லூர் அணையிலிருந்து கோவைக்கு நீர் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தடுப்பணை கட்டும் பணியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை காடாக இருந்த நீலகிரியில், காலப்போக்கில் காப்பி, தேயிலை, பயிர்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டன. அதுவே ஆபத்தானது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறி வருகின்றன. இது ஒரு பேராபத்து, இதன் விளைவு இயற்கை பேரிடராக இருக்கும். அரசு உரிய சட்டம் இயற்றி அத்து மீறி கட்டப்படும் கட்டடங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் உலக அளவில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்துக்கு அடுத்ததாக நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த முத்தாெரையில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. முத்தாெரையில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். முத்தாெரையில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மேலும், உருளைக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்காதபோது விவசாயிகள், விளைந்த உருளைக்கிழங்குடன் நிலத்தை உழுது விடுகின்றனர். அதனால் கடும் நஷ்டத்தையும் சந்திக்கின்றனர். எனவே, உருளைக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்காத சமயங்களில், உருளைக்கிழங்கை மூலதனமாக வைத்து ஓட்கா மதுவகையை தயாரித்து, ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீலகிரி மாவட்டத்தின் வருவாய் கூடுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். தமிழக அரசு பூரண மது விலக்கு காெண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் ஓட்கா மது வகையை விற்பனை செய்ய வேண்டும். 

வரும் 17-ம் தேதி, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை பனை மற்றும் தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம் மேற்காெள்ளவுள்ளாேம். இதன் நாேக்கம் பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் மாற்றாக  பனை, தென்னை பாெருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. நீராவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையும், கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். மேலும், தென்னை விவசாயிகள் நல வாரிம், பனைத் தாெழிலாளர் நல வாரியம், ஸ்ரீவில்லிப்புத்துார் பனை ஆராய்ச்சி நிலையம் இவை அனைத்தும் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட வேண்டும். குட்டை ரக பனை மரங்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதேபாேல ரேஷன் கடைகளில், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை மற்றும் பனை வெல்லம் விநியோகிக்க வேண்டும். தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் வெறுப்பு அரசியல்தான் வென்றுள்ளது. கடந்த கால ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சி மீது இருந்த வெறுப்பின் காரணமாக, மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். தற்போது அந்த வெறுப்பின் காரணமாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு அரசியல் ஜனநாயகத்துக்கு சரியானதல்ல, பாெதுமக்கள் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.