நவீன நகர வாழ்க்கைமுறை கொடுத்துவரும் அழுத்தம், நாம் மீண்டும் பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்பிவிட முடியாதா என்ற ஏக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காகச் சுற்றுலா, சுற்றுப்பயணம், ஆன்மிகப் பயணம் என்று விதவிதமாகப் பயணிக்கிறார்கள் மக்கள். ஆனால், அதைவிடச் சிறந்தது, ஒரு மனிதன் உள்ளுக்குள் சென்று தன்னை அறிவது. அதிலும், விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்து, மனதை இளகுவாக்கிக் கொள்வது ஒரு டிரெண்டாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இளைஞர்களிடையே இந்த விஷயம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயம், ஆன்மிகம் இந்த இரண்டுக்கும் களம் அமைத்து, அதைப் பற்றிப் புரிந்துகொள்ள வழி அமைத்துக்கொடுத்து வருகிறது, நவதர்ஷனம்.

‘குட்டி இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள ஊர் தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்). குளுகுளு குளிருக்கும், அடர்ந்த புதர்க்காடுகளுக்கும் பெயர் பெற்றது இப்பகுதி. தளிக்கு அருகே உள்ள பழைமை வாய்ந்த குக்கிராமம் கெங்கனஅள்ளி. தமிழும் கன்னடமும் கலந்து பேசும் இவ்வூர் மக்கள், நவதர்ஷனம் என்று கேட்டால், பொறுமையாக வழிகாட்டுகிறார்கள். ஊரைக் கடந்து சிறிய ‘ஓனி’ (இருபுறமும் உயிர்வேலிகள் அடர்ந்த பாதை) வழியாகச் சென்றால் வருகிறது நவதர்ஷனம்.

பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்த சோலைதான் இந்த நவதர்ஷனம். ஆன்மிகத்தையும் விவசாயத்தையும் போதிக்கும் இடமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.டி வேலை செய்பவர்கள், நகரவாசிகள், வட மாநிலத்தவர், வெளிநாட்டினர், அமைதியாக வாசிக்க வேண்டும் என நினைப்பவர்கள், தனிமையை விரும்புபவர்கள் எனப் பலரின் விருப்ப இடமாக இருந்துவருகிறது. நகர வாடை எதுவும் இல்லாத ஒதுக்குப்புறமான இந்தக் கிராமத்தில், அமைதியாகச் செயல்பட்டுவரும் நவதர்ஷனம், பழைமையான கட்டடத்தமைப்பில் வீடுகள், ஓவியம் தீட்டப்பட்ட சுவர்கள், தொழுவத்தில் நாட்டு மாடுகள் என்று உள்ளே நுழையும்போதே நம்மை 30 ஆண்டுகளுக்கு முன்பான கிராம வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறது.

மன இளைப்பாறலுக்காக வந்திருந்தவர்கள், திண்ணையில் அமர்ந்து இயற்கை உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஏறுவெயிற்பொழுதில் நவதர்ஷனத்தை வலம்வந்தபடியே, அமைப்பில் ஒருவரான நாகராஜனுடன் பேசினேன்.

“உலகம் போகிற வேகம், அதன் திசை, அதற்கான காரணம், இவற்றில் எதையும் கணிக்க முடியாத இடத்தில் நாம் வாழ்கிறோம். இன்று நாம் ரசாயன விவசாய முறைகளை மாற்றாவிட்டால், இன்னும் ஐம்பது, அறுபது ஆண்டுகளில், பயிரையும் நம் உயிரையும் காக்கும் இந்த மண்ணுக்கு மரணம் நிச்சயம். தவிர, அடுத்த சந்ததிகளின் பங்கையும் நாம் சேர்த்துக் காலி செய்துகொண்டிருக்கிறோம். ரசாயனப் பயன்பாட்டால் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்துகொண்டிருக்கின்றன. இது, மகசூலைக் குறைத்து, உணவு உற்பத்தியைக் கடுமையாக பாதிக்கும். விவசாயம் குறைந்து வருவதால், கிராமங்கள் காலியாகிக்கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு பத்து விழுக்காட்டிற்கும் குறைவாகத்தான் உள்ளது. பெரும்பான்மையினரின் பார்வையும் முக்கியத்துவமும் விவசாயம் தவிர்த்து மற்ற துறைகளின் மீதுதான் இருக்கின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றுகூட மாசுபட்டிருக்கிறது. குடிநீரில் அசுத்தம். உணவில் ரசாயன ஊடுருவல் எனப் பல பிரச்னைகளைக் கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் 1980-களிலேயே உணர்ந்தோம். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் பிறந்ததுதான் நவதர்ஷனம் (நவ=புதிய, தர்ஷனம்=பார்வை).

டில்லி ஐ.ஐ.டி வாசகர் வட்டத்தில் நண்பர்களெல்லாம் கலந்துரையாடிபோது, `வருடக்கணக்கில் இயற்கை, விவசாயம், ஆன்மிகத்தைப் பற்றிப் பேசியது போதும்; இனி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம்' என்று மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு 1990-ல் தளி வந்துசேர்ந்தோம். இந்தக் குழுவிலுள்ள அனைவருமே உயர்கல்வி கற்றவர்கள். ஆனால், ஆன்மிகத்தில் பற்றுள்ளவர்கள். ஒரு விழுப்பு உணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த, ஒரு சோதனையை நம் வாழ்வில் நடத்த முடியுமா என்று ஒரு முயற்சி. அதன் விளைவாக ஆரவாரமில்லாத இந்தப் பகுதியில் உருவானது நவதர்ஷனம்” என்று அமைப்பு தொடங்கிய கதையைச் சொன்னவர், தொடர்ந்தார்...

“தேவைக்கான பொருள்களை மட்டும் கொண்டு வீடுகள் கட்டி, ரசாயன உரங்களின்றிப் பயிர் செய்து, மின்சாரத்தைச் சூரியசக்தி (சோலார்) மூலம் உற்பத்திசெய்து, மாற்று எரிபொருளில் சரிவிகித உணவு சமைத்து, மண் வளத்தை மேம்படுத்திவருகிறோம். ஊசி, மாத்திரை இல்லாமல் நோயைச் சரியாக்க முயன்றுவருகிறோம். பறவைகளும் வன விலங்குகளும் வந்துசெல்வதற்கு வாய்ப்பளிக்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். சூழலோடு இணைந்து விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக நிலையான விவசாயம் (Sustainable Farming) என்பதைப் பயிற்சியாக அளிக்கிறோம். இந்த விவசாயமுறை, ஒரு மனிதனைத் தற்சார்புகொண்டவனாக மாற்றும். அதேபோல், இன்று நம் உடல்மீதான அக்கறை பெருகிவருகிறது. அதற்காக ‘நம் உடல் நம் உணவு’ என்ற பெயரில் கலந்துரையாடலும் நடத்துகிறோம். இதில் அனைவரும் சேர்ந்து சமையல் செய்தல், கலந்துண்ணல் (Reflection on Food- Farming/Processing/Cooking/Eating) என்ற முறைகளைப் பின்பற்றுகிறோம்'' என்றவர் ஆன்மிகம் பற்றிப் பேசினார்.

“இந்த விவசாய முயற்சிகளுக்கிடையே உள்நோக்கிய தேடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். `நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன்; இந்தப் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஒரு வாழ்க்கை; இந்த வாழ்க்கையின் பல முடுச்சுகளை ஒன்றொன்றாக அவிழ்க்க மனிதனுக்கு ஒரு எத்தனிப்பு உண்டு. அதேபோல், வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும்’ என்கிற ஆவல் பலருக்கும் உண்டு. அதனால், ஓர் உள்நோக்கிய பயணம்... அதன்மூலம் அடையும் அமைதி, தெளிவு மனிதர்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறோம். இதற்காகத் தன்னைத் தேடல் (Atma Vichara), தத்துவம் பக்தி சேர்ந்த பாடலும் பொருளும் (Philosophical Devotional Songs and Meanings), உண்ணாநோன்பு (Fasting) போன்ற பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. விவசாயம், ஆன்மிகம் சார்ந்த பயிற்சிகளுக்குத் திட்டமிட்ட அட்டவணை எதுவும் இல்லை. தேவையேற்படும்போது நடத்துவோம். இங்கு சாதாரண கேழ்வரகுக் களி, சிவப்பரிசிச் சோறு, காய்கறிகள் கூட்டு என்ற எளிமையான உணவுகள்தாம் பரிமாறப்படுகின்றன.

அனைத்திலும் எளிமையைக் (Simplisity) கொண்டு வந்தால், இந்த வாழ்வு மேலும் சிறப்பாக இருக்கும் என்கிற புரிந்துணர்வோடுதான் நவதர்ஷனத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இங்கே எந்தவொரு ஆடம்பரமும் கிடையாது. சொல்லப்போனால், எளிமையைப் புரியவைக்கும் இடமாக இது இருக்கும். பத்து ஆண்டுகளாக என் மனைவி பத்மினி, சகாக்கள் கோபி, சுமதி ஆகியோருடன், சில குடும்பங்களும் இந்தப் பணியில் கைகோத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கள் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எங்களால் ஆனவரை செய்கிறோம். இந்தப் பாதைதான் ஊர்போகும் என்று கிடையாது. இது எங்கள் வழி... வாருங்கள்... உணருங்கள்... உங்களுக்கும் சரி என்று பட்டால் உங்கள் வாழ்வில் சிறு மாற்றங்கள் நிகழலாம்” என்று விடைகொடுத்தார் நாகராஜன்.

எப்படிச் செல்வது?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து தளி 27 கி.மீ. தளிக்கு 1 கி.மீ முன் வலதுபுறம் திரும்பும் சாலையில் 8 கி.மீ பயணித்தால் குமுளாபுரம் வருகிறது. ஊருக்கு முன் இடதுபுறச் சாலையில் திரும்பி 1 கி.மீ மண்சாலையில் சென்றால், கெங்கன அள்ளி கிராமம். அதைக் கடந்தால் நவதர்ஷனம். முன்பதிவு செய்து விட்டுதான் செல்ல வேண்டும். வாழ்க்கையைப் பற்றித் தேடல் உள்ளவர் நவதர்ஷனம் செல்லலாம்.

தொடர்புக்கு:

4/70, கெங்கனஅள்ளி குக்கிராமம்,

குமுளாபுரம் கிராமம், தளி வட்டம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் - 635118.

மின்னஞ்சல்: navadarshanam@gmail.com இணையதளம்: www.navadarshanam.org

மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கைப் பொருள்கள்

நவதர்சனம் நுழைவுவாயிலில் சுவையான ஊறுகாய், ராகி மாவு, நாட்டுச் சர்க்கரை, சிறுதானிய அரிசி வகைகள் என்று கிராம மக்கள் தயார் செய்துகொண்டிருந்தனர். அதைப் பற்றிப் பேசிய நாகராஜன், “2008-ல் கிராமப்புற வேலை வாய்ப்பு, நுகர்வோருக்கு நல்ல உணவுப்பண்டங்கள் சேர வேண்டும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்கிற நோக்கங்களால் உருவானது இந்த வியாபார முயற்சி. ஒரு சின்ன வட்டத்திற்குள், பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், சுற்றியிருக்கும் கிராம மக்களைக் கொண்டு எவ்வளவு தயார் செய்ய முடியுமோ, அவ்வளவு தயார் செய்து அருகிலுள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அனுப்புகிறோம். ஒவ்வொரு ஊரிலும் நகரத்திலும் இந்த மாதிரியான ஆரோக்கிய உணவு பதார்த்தங்கள் தயாரிக்கும் அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் அவா. இதில் லாப நோக்கு எதுவும் இல்லை. இதில் வரும் வருமானத்தைச் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டுவிடுகிறோம்” என்றார்.

- த.ஜெயகுமார், படங்கள்: க.மணிவண்ணன்