Published:Updated:

“என் அப்பாவும் விவசாயிதான்!”

“என் அப்பாவும் விவசாயிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“என் அப்பாவும் விவசாயிதான்!”

அனுபவம்எஸ்.சந்திரமெளலி

ரோகிணி ஐ.ஏ.எஸ், சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர். மகாராஷ்டிர மாநிலத்தில் சோலாப்பூரைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் பிரத்யேக பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிளகாய் விவசாயி ஆக இருந்த இவருடைய அப்பா ராமதாஸ், ஒரே இரவில் திராட்சை விவசாயியாக மாறிய சுவாரசியமான கதையை, இங்கே ஆட்சியர் ரோகிணி பகிர்ந்துகொள்கிறார்.

“அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் சின்னச் சின்னச் சலுகைகளைப் பெறுவதற்குக் கூட என் அப்பாவைப் போன்ற விவசாயிகள் ரொம்பக் கஷ்டப்பட வேண்டி இருந்தது. ஒருநாள் அப்பாவிடம், ‘இந்தப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைக்கக் கூடியவர் யார்?’ என்று கேட்டபோது, ‘மாவட்ட கலெக்டரால் முடியும்’ என்று பதில் சொன்னார். அந்தப் பதில்தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என என் மனதில் ஊன்றப்பட்ட முதல் விதை

“என் அப்பாவும் விவசாயிதான்!”

ஒருமுறை என் அப்பா, தான் அறுவடை செய்த மிளகாயை எடுத்துக்கொண்டு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குப் போனார். அங்கே ஓர் அதிகாரியைச் சந்திக்கச் சென்றபோது, அந்த அதிகாரி, திராட்சைச் சாகுபடி தொடர்பான ஒரு முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவும், மிளகாய் விவசாயிக்கு என்ன அவசரம், காத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதனால், அப்பாவின் மனசு ரொம்பவும் புண்பட்டது, ‘மிளகாய் விவசாயி என்றால் கேவலமா, திராட்சை மட்டும் என்ன உசத்தி, அந்தத் திராட்சையை என்னால் சாகுபடி செய்ய முடியாதா’ என்று அவருக்குக் கோபம் வந்தது.

அன்று இரவு ஊருக்குத் திரும்பும் வழியில், திராட்சைச் சாகுபடிக்கென்றே வெளியாகிற ‘திராட்சை விருத்தி’ என்ற மராத்தி பத்திரிகையை வாங்கிக்கொண்டு வந்தார். இரவோடு இரவாக, விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி, திராட்சைச் சாகுபடி செய்வதற்கான குழிகளை வெட்டத் துவங்கினார். ‘இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, இந்த இருட்டு வேளையில் வேலை வாங்குகிறாரே என்று அவர்கள் முணுமுணுத்தனர். ஆனால், அன்று இரவு திராட்சைச் சாகுபடிக்குப் பிள்ளையார் சுழி போட்ட அப்பா, அடுத்த ஆண்டில் திராட்சை உற்பத்தி செய்து, தான் உதாசீனப் படுத்தப்பட்ட அதே மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வெற்றிகரமான திராட்சைச் சாகுபடியாளராகத் தலை நிமிர்ந்து நின்றார். மனிதர்களுக்குத் தார்மீகக் கோபம் மிகவும் அவசியம். அந்தக் கோபம் நேர்மறையான திசையில் செலுத்தப்பட்டால், நம்மால், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz