Published:Updated:

உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!

இடம்பெயரும் விவசாயத் தொழிலாளர்கள்

உலகம் சுற்றும் உழவு!



வட அயர்லாந்து நாட்டின் வேளாண்மைத் துறை நடத்திய கணக்கெடுப்பில், ‘விளைநிலங்களில் பணிபுரியும் 7,000 தொழிலாளர்களில் 1,400 பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள்’ எனத் தெரியவந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலகம் சுற்றும் உழவு!

இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே, ‘வருங்காலங்களில் உயர் திறன் உள்ளவர்கள் மட்டுமே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இடம்பெயர முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். இதனால், உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது எனக் கவலை தெரிவிக்கிறார்கள், அயர்லாந்து விவசாயிகள். அதனால், மனிதர்களைக் குறைத்து எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது, அந்நாட்டில்.

உலகம் சுற்றும் உழவு!

அதிகரிக்கும் சோயாச் சாகுபடி...

இந்திய சோயா செயலாக்கச் சங்கம்(SOPA), இந்த ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில்... 2018-ம் ஆண்டில் சோயா உற்பத்திக்கான விளைநிலங்கள் 6.7% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டில் 1,08,39,000 ஹெக்டேர் நிலப்பரப்பில், 1,14,83,000 டன் சோயா உற்பத்தி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 37.4% அதிகம். தேவையைவிட உற்பத்தி அதிகமாக உள்ளதால் சோயாவின் விலை குறைந்து வருகிறது. தற்போது, குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 3,390 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் சோயாவை மத்திய அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அம்மாநிலம் கோரிக்கை வைத்துள்ளது.

உலகம் சுற்றும் உழவு!

இயந்திரங்கள் மூலம் காய்கறிச் சாகுபடி!

கலிபோர்னியாவில், சான் கார்லோஸ் பகுதியில், ‘கூகுள் இன்ஜினியர்’ பிரான்டன் அலெக்ஸாண்டர் என்பவர் அயர்ன் ஆக்ஸ் (Iron ox) என்ற பண்ணையை நடத்தி வருகிறார். இப்பண்ணையில் 1,000 பவுண்ட் எடையுள்ள ஏங்குஸ் (Angus) என்னும் தானியங்கி இயந்திரம் மூலம்... ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 8 ஆயிரம் சதுரஅடி கொண்ட இப்பண்ணை, துளியும் மனித உதவியின்றிச் செயல்படுகிறது. ‘சுத்தமான புதிய காய்கறிகளை நகரங்களில் கிடைக்கச்செய்வதே இந்நிறுவனத்தின் நோக்கம்’ என்கிறார், பிரான்டன் அலெக்ஸாண்டர்.

உலகம் சுற்றும் உழவு!

அஸ்ஸாம் மாநிலத்தின் அதிசய நெல் ரகம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் பிரபலமான நெல் ரகம், ‘போக்கா சவுல்’ (Boka Saul). ஜுன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் இந்த நெல் ரகத்தை அந்தப் பகுதிக்கான அடையாளமாக அங்கீகரித்துள்ளது, இந்திய அறிவுசார் காப்புரிமை ஆணையம். இந்த ரகத்துக்குச் சில சிறப்புகள் உண்டு. இதைச் சமைக்கத் தேவையில்லை. குளிர்ந்த நீரில் ஊறவைத்தாலே சோறாகிவிடும். இதைத் தயிர், வெல்லம், வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள், அஸ்ஸாம் மாநில மக்கள். இது உடல்சூட்டைக் குறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. முழுமையான இயற்கை வழி விவசாய முறையில்தான் இந்த ரக நெல் விளைவிக்கப்படுகிறது.

- நந்தினி.பா