Published:Updated:

முதலிடத்தை நோக்கி...

முதலிடத்தை நோக்கி...
பிரீமியம் ஸ்டோரி
News
முதலிடத்தை நோக்கி...

முதலிடத்தை நோக்கி...

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

முதலிடத்தை நோக்கி...



‘‘2030-ம் ஆண்டுக்குள் பசியில்லா தேசமாக மாற்றுவோம்’’ எனச் சூளுரைத்துள்ளார், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங். கடந்த அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற, ‘உலக உணவு தின’ நிகழ்ச்சியின் போதுதான் இப்படிப் பேசியுள்ளார்.

இந்தியாவின் உணவு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால்தான் அமைச்சரை இப்படி நம்பிக்கையோடு பேச வைத்துள்ளது. அதாவது, 2017-18-ம் ஆண்டுகளில், நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களின் உற்பத்தி 284.83 மில்லியன் டன், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி 307 மில்லியன் டன் என உயர்ந்து சாதனை அளவைத் தொட்டுள்ளது.

ஒருபக்கம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு கண்டாலும், மறுபக்கம் உணவுப்பொருள்களை வீணாக்குவதில், இந்தியா முன்னிலையில் உள்ளது என உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு, தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இந்தியாவில் விளையும் காய்கறி, பழங்களை அறுவடைக்குப் பின், பயன்படுத்துவதற்குரிய சரியான நுட்பங்களைப் பின்பற்றாமல் இருப்பதால், மொத்த உற்பத்தியில் சுமார் 25% வீணாகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு, நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கூடவே, இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

‘களத்தில் அறுவடை செய்த பொருள்களைப் பதமாகப் பக்குவப்படுத்தி, சந்தைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்குரிய தொழில்நுட்பங்களை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். போதுமான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க வேண்டும்’ என்று பல காலமாகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நூறு சதவிகிதம் அதை நாம் நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை. இதை மட்டும் சாதித்துவிட்டால், உணவுப் பொருள்கள் வீணாவதை தடுக்கமுடிவதோடு, உலக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்துக்கு இந்தியா முன்னேறவும் முடியும்.

சாதிப்போமா?!

- ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz