Published:Updated:

தமிழகத்தில் வறட்சி பகுதியில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

தமிழகத்தில் வறட்சி பகுதியில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு
தமிழகத்தில் வறட்சி பகுதியில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

சென்னை: தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் மதுரையில் வறட்சி குறித்த ஆய்வை இன்று தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வறட்சி பகுதியில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மத்திய குழுவினர் சென்னை எழிலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், ஆய்வு செய்யவுள்ள மாவட்டங்கள், ஆய்வின் அடிப்படை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து வந்துள்ள 10 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஆய்வு பணிகளை நடத்துகின்றனர்.

வேளாண்துறை செயலர் பிரவேஷ் சர்மா தலைமையில், தமிழக அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கொண்ட குழு, முதலில் மதுரையில் தங்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வறட்சி பகுதியில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

வடக்கு வட்டம் கருப்பாயூரணி காளிகாப்பான் கிராமத்தில் உள்ள அப்பர் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற அம்மா திட்டத்தினை பார்வையிட்டு பொது மக்களிடம் வறட்சி பற்றி குழுவினர் கேட்டறிந்தனர்.

பின்னர் மதுரை ஒத்தக்கடையில் பொது மக்கள் குடி தண்ணீரை லாரியில் மூலம் தண்ணீர் பிடிப்பதை குழு பார்வையிட்டது. அப்போது, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உடன் இருந்தார்.
 

தமிழகத்தில் வறட்சி பகுதியில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

இதையடுத்து, மதுரை தெப்பக்குளம் அண்ணாநகர் மேம்பாலத்திலிருந்து வைகையாற்றினை குழுத் தலைவர் எஸ்.எப்.ஏ.சி. நிர்வாக இயக்குனர் பிரவேஷ் சர்மா தலைமையில் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த குழு ஆய்வு நடத்த உள்ளது.

இதேபோல் மானஸ் சவுத்ரி உள்பட 11 பேர் கொண்ட மற்றொரு குழு திருச்சியில் இன்று ஆய்வை தொடங்கியது. பளையகுறிச்சி, வேம்பூர், கல்லணையில் ஆய்வை முடித்துவிட்டு இந்த குழு தஞ்சாவூர் சென்றது. அங்கு, வல்லத்தில் கால்நடைக்கு புல் வளர்க்கும் தி்ட்டத்தை ஆய்வு செய்த குழு, ஆழக்குடியில் உள்ள உழவர் திருவிழாவை ரசித்தது.

அப்போது, பயிர்க்கடனை ரத்து செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, சரியான திட்டமிடுதல் இல்லாததால் வறட்சி பாதி்த்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிடவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அங்கு ஆய்வை முடிக்கும் குழு, நாளை  திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறது.

##~~##
வரும் 9ஆம் தேதி வரை ஆய்வு நடத்தும் இந்த குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது.
இதனிடையே, மத்தியக் குழுவினர் வரும் 9ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.