Published:Updated:

உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

Published:Updated:
உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!

 இயற்கை விவசாயிகளுக்குப் பாராட்டு!

உலகம் சுற்றும் உழவு!

ர்நாடக மாநிலத்தில், கடந்த நவம்பர் 15-ம் தேதி, ‘காந்தி வேளாண் அறிவியல் நிலையம்’ (GKVK) சார்பாக ‘விவசாயத் திருவிழா-2018’ (கிரிஷி மேளா) நடைபெற்றது. மூன்று நாள்கள் நடந்த இந்தத் திருவிழாவில் விவசாயக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, “இந்திய அளவில் வேளாண் பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதம் மாணவிகள் பயில்கின்றனர். இது பெண்களுக்கு விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்தியாவில் 55 சதவிகிதத்துக்கு மேலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். அவர்களின் பிரதான தொழில் விவசாயம்தான். விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகங்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்து உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்களின் வாழ்வு மேம்படுகிறது” என்றார். இந்நிகழ்ச்சியில், இயற்கை விவசாயம் மேற்கொண்டு சாதனை செய்து வரும் 445 விவசாயிகள் கௌரவப்படுத்தப்பட்டனர்.

உலகம் சுற்றும் உழவு!

மக்காச்சோள மரணத் திசு!

ப்ரிக்காவின் பிரதான உணவுப்பயிர் மக்காச்சோளம். இப்பயிரை, ‘மக்காச்சோள மரணத் திசு சிதைவு’ நோய் (Maize Lethal Necrosis-MLN) அதிகளவில் தாக்குகிறது. இதனால், 90 சதவிகித அளவு மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் குறித்த ஆய்வில் ஈடுபட்ட ‘நிக் கன்னிப்பி’ என்ற பேராசிரியர், இந்நோயைப் பரப்பும் வைரஸ், விதை மற்றும் மண்ணின் மூலம் பரவும் விதத்தைக் கண்டறிந்து ஆய்வறிக்கை வெளியிட்டார். ‘பயிர் சுழற்சி, நோய்த்தாக்குதல் இல்லாத விதைகளை விதைப்பது, தாக்குதலுக்கு உள்ளான செடிகளை உடனடியாக அகற்றுவது ஆகியவற்றைச் சரியாகக் கடைப்பிடித்தால், ஓரளவு நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்நோயை முழுமையாகத் தடுப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உலகம் சுற்றும் உழவு!
உலகம் சுற்றும் உழவு!

 சீனாவுக்குச் சர்க்கரை ஏற்றுமதி!

2019-ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கச்சா சர்க்கரை ஏற்றுமதியாக உள்ளது. இந்தியாவிலிருந்து பாசுமதி அல்லாத அரிசி ரகங்களுக்கு அடுத்து சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதியாவது சர்க்கரைதான். அடுத்த ஆண்டிலிருந்து 15 ஆயிரம் டன் கச்சா சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, இந்திய சர்க்கரை ஆலைச் சங்கம் மற்றும் ‘கோஃப்கோ’ (COFCO) என்னும் சீனா அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை ஏற்றுமதி மூலம் இந்தியா - சீனா இடையே ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக வித்தியாசத்தைச் சரி செய்ய முடியும்.

உலகம் சுற்றும் உழவு!
உலகம் சுற்றும் உழவு!

விவசாயிக்கு மரியாதை!

னடா வேளாண் வாழ்த்தரங்கம் (Canadian Agriculture Hall of Fame) எனும் அமைப்பு, உலகளவில் வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி வருகிறது. இவ்வமைப்பில் பீட்டர் பொவிட்டர் தில்லான் என்னும் சீக்கியர்  இடம்பெற்றுள்ளார். இவர் சீமை களாக்காயைச் (Cranberry) சாகுபடி செய்து வருகிறார். இவர் உலகின் மிகப்பெரிய சீமை களாக்காய் விவசாயி. ‘ரிச்பெரி குரூப் ஆஃப் கம்பெனி’ (Richberry Group of Company) என்ற நிறுவனத்தைப் பிரிட்டன் மற்றும் கொலம்பியாவில் நடத்தி வருகிறார், தில்லான். இவர் கடந்த ஆண்டில் 2,000 ஏக்கர் பரப்பில், 20 மில்லியன் சீமை களாக்காயை உற்பத்தி செய்துள்ளார். இந்த ஆண்டு 30 மில்லியன் பவுண்டு உற்பத்தி செய்ய இலக்கு வைத்திருக்கிறார். இவர் சீமை களாக்காயைச் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பான ‘ஓசோன் ஸ்பிரே’ (Ocean Spray) எனும் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்தக்கூட்டமைப்பு கிட்டதட்ட 90 நாடுகளில் 2.5 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் செய்கிறது. தில்லானுக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது உருவப் படம் டொரன்டோவில் திறக்கப்பட்டுள்ளது.

உலகம் சுற்றும் உழவு!

வறட்சிப் பாதிப்புக்கு உதவும் செயற்கைக்கோள்!

பொ
துவாக, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்கள் குறித்த கணக்கெடுப்புக்குப் பல நாள்கள் ஆகின்றன. அதனால், காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தாமதமாகிறது. இத்தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், ஆஸ்திரேலிய நாட்டில், ‘குறியீட்டு சார் காப்பீடு’ (Index Based Insurance) எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மழை, புயல் காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற வானிலை மாற்றங்கள், செயற்கைக்கோள் மூலம் அளவிடப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது. இந்த மாற்றங்கள் சராசரிக் குறியீட்டு அளவைவிடக் கூடினாலோ, குறைந்தாலோ விவசாயிகளுக்கு எந்தக் கேள்வியுமின்றி இழப்பீட்டுத்தொகை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

பா.நந்தினி