Published:Updated:

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

மகசூல்

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

மகசூல்

Published:Updated:
8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

 ‘ரசாயன முறை விவசாயம் மேற்கொள்ளும்போது உரங்களின் அளவைப் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டியிருக்கும். ஆனால், மகசூல் அளவு குறைந்து கொண்டேயிருக்கும். இயற்கை விவசாயத்தில் ஆரம்ப நிலையில் அதிக இடுபொருள்கள் தேவைப்படும். நாளடைவில் படிப்படியாக இடுபொருள்களின் தேவை குறைந்துகொண்டே வரும். அதே நேரத்தில் மகசூல் அளவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கும்’ என்று இயற்கை வல்லுநர்கள் சொல்வார்கள். இக்கூற்றை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம். எட்டு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார், இவர்.

வலங்கைமான் தாலூகா, பொன்மங்கலத்தில் இருக்கிறது, கல்யாணசுந்தரத்தின் வயல். ஒரு காலைப்பொழுதில் கல்யாணசுந்தரத்தைச் சந்திக்கச் சென்றோம். குறுவைப்பருவத்தில் 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த சொர்ணமசூரி, செழிப்பாக விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. 6 ஏக்கர் பரப்பில், சம்பாப்பருவத்தில் விதைத்த தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, கறுப்புக்கவுனி, வெள்ளைப்பொன்னி ஆகியவை இளம்பயிராக இருக்கின்றன.

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

“பி.ஏ படிச்சிட்டு, என் அண்ணன் திருநாவுக்கரசுவோடு சேர்ந்து பிசினஸ் பண்ணிட்டுருந்தோம். தொழில்ல கொஞ்சம் சரிவு ஏற்பட்டதும், 2000-ம் வருஷத்துல விவசாயத்துல இறங்கிட்டோம். எங்களுக்குப் பூர்விக நிலம் ஒண்ணே கால் ஏக்கர்தான் இருந்துச்சு. ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்கிற ஆசையில 32 ஏக்கர் நிலம் வாங்கினோம். 5 ஏக்கர் நிலத்துல மீன் குளம் அமைச்சுட்டு, மீதி நிலத்துல நெல் சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம். 100 மாடுகள், 30 ஆடுகள்னு வளர்த்ததால, எருவுக்குப் பஞ்சமில்லை. நாங்க வாங்குறதுக்கு முன்னாடி, இந்த நிலத்துல ரசாயன உரத்தைத்தான் அதிகமாகப் பயன்படுத்தியிருந்தாங்க. நாங்கதான் இயற்கைக்கு மாத்துனோம். எரு, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், திறன்மிகு நுண்ணுயிரி, மீன் அமினோ அமிலம்னு அதிகளவுல பயன்படுத்துனதால மண் நல்ல வளமாகிடுச்சு. வருஷத்துக்கு ஒருமுறை நவதானிய விதைப்பு செஞ்சுடுவோம்.

ஆரம்பத்துல ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை அளவுலதான் மகசூல் கிடைச்சது. போகப்போக, மண் வளம் அதிகரிக்க ஆரம்பிக்கவும் மகசூலும் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சது. அதே சமயத்துல இயற்கை இடுபொருள்களோட தேவையும் குறைய ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல ஆள் பற்றாக்குறை, வறட்சினு பல பிரச்னைகளால ஆடு, மாடு, மீன் வளர்ப்பு எல்லாத்தையும் கைவிட்டுட்டோம். இப்போ 8 ஏக்கர்ல மட்டும் நெல் சாகுபடி செய்றோம். மீதி 24 ஏக்கர்லயும் மரப்பயிர்கள் இருக்கு. எரு தேவைக்காக ஒரே ஒரு மாடு மட்டும் இருக்கு. தேவைப்பட்டா வெளியில எரு வாங்கிக்கிறோம். ஆரம்பத்துல ஒரு ஏக்கருக்கு ஆறு டன் அளவுல எரு கொடுத்துட்டு இருந்தோம். இப்போ ஒரு ஏக்கருக்கு இரண்டரை டன் அளவுதான் எரு கொடுக்குறோம். எருவோடு இலைதழைகளைக் கலந்து கொடுத்துடுவோம். அதோட உயிர் உரங்களையும் பயன்படுத்துறதால, நல்ல மகசூல் கிடைக்குது. பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு இடுபொருள்களோட தேவையும் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. இப்போ ஒரு ஏக்கருக்கு 27 மூட்டை அளவுல நெல் மகசூல் கிடைக்குது” என்ற கல்யாணசுந்தரம், தொடர்ந்தார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

“ஆரம்பக் காலங்கள்ல குறுவை, சம்பானு ரெண்டு போகமும் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சுட்டுருந்தோம். ஆனா, அப்போ விற்பனை செய்றது கஷ்டமா இருந்துச்சு. வழக்கமான நெல் கொள்முதல் நிலையங்கள்லதான் விற்பனை செஞ்சோம். அது மாதிரியான சில காரணங்களால குறுவைச் சாகுபடியை விட்டுட்டு வருஷத்துக்கு ஒரு போகம் சம்பாச் சாகுபடி மட்டும் செஞ்சுட்டுருந்தோம். இப்போ நாலு வருஷமா பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு விற்பனைக்குப் பிரச்னையில்லை. சென்னை, தஞ்சாவூர் பகுதிகள்ல இருந்து நிறைய பேர் விரும்பி வாங்குறாங்க. எங்க ஊர் மக்களே பாரம்பர்ய நெல் ரகங்களை விரும்பி வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. தேவை அதிகமாகியிருக்குறதால, இந்த வருஷம் 2 ஏக்கர்ல சொர்ணமசூரி சாகுபடி செஞ்சேன். இது களிமண் நிலங்கிறதால, தண்ணீர் பாய்ச்சுனா சொதசொதனு ஆயிடும். வழக்கமான நாற்று நடவு முறைதான் இந்த மண்ணுக்கு ஏற்றதா இருக்கு.

இந்த முறை, சொர்ண மசூரி ரகத்தை எந்திரம் மூலமா நேரடி விதைப்பு செஞ்சேன். அது அறுவடைக்கு வர தாமதமாகிடுச்சு. ஆனாலும்கூடக் கதிர்கள் நல்லா வாளிப்பா இருக்கு. வழக்கம்போல ஏக்கருக்கு 27 மூட்டை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். சம்பாப்பருவத்துல 6 ஏக்கர்ல மட்டும் தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, வெள்ளைப்பொன்னினு வழக்கமான முறையில நடவு பண்ணிருக்கேன். நேரடி விதைப்புல களை அதிகமா வருது. வழக்கமான நாற்று நடவுல களைகள் குறைவாத்தான் இருக்கு. அதனால, களையெடுக்குற செலவும் குறையுது” என்ற கல்யாணசுந்தரம், நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

“எந்த ரகமாக இருந்தாலும் ஏக்கருக்குச் சராசரியாக 27 மூட்டை மகசூல் கிடைச்சுடுது. அதை அரிசியாக மதிப்புக்கூட்டிதான் விற்பனை செய்றோம். ஒரு மூட்டை (60 கிலோ) நெல்லை அரைச்சா, 35 கிலோ அரிசி கிடைக்கும். 27 மூட்டை நெல் மூலமாக, 945 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 60 ரூபாய்னு விற்பனை செய்றோம். அந்த வகையில ஒரு ஏக்கர்ல இருந்து 56,700 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிடு, குருணை எல்லாத்தையும் சேர்த்தா 61,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச்செலவும் போக ஏக்கருக்கு 36 ஆயிரம் ரூபாய் லாபமாக நிக்கும். எட்டு ஏக்கர் நெல் சாகுபடி மூலமா ஒரு வருஷத்துக்கு 2,88,000 ரூபாய் அளவுல லாபம் கிடைச்சுட்டுருக்கு” என்று மகிழ்ச்சியாக விடைகொடுத்தார். 

தொடர்புக்கு

கல்யாணசுந்தரம்,
செல்போன்: 99525 19588.

- கு.ராமகிருஷ்ணன்,  படங்கள்: ம.அரவிந்த்

ஒரு ஏக்கர் விதைப்புக்கு 8 சென்ட் நாற்றங்கால்

ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்துக் கல்யாணசுந்தரம் சொல்லிய விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 8 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் 300 கிலோ எரு, 100 கிலோ இலைதழைகள் போட்டு 2 சால் சேற்றுழவு செய்து, நிலத்தை நன்கு சமப்படுத்தி, 45 கிலோ விதையைத் தெளிக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் கட்டி, வடிக்க வேண்டும். 10-ம் நாள் 4 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 4 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாளில் ஓர் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் 3 டன் எரு போட்டுச் சேற்றுழவு செய்து, ஒரு குத்துக்கு 3-5 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 500 கிலோ எருவுடன் தலா 250 கிராம் பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பொட்டாஷ் மொபைலைசிங் பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து 2 நாள்கள் வைத்திருந்து 15-ம் நாள் நிலத்தில் இட வேண்டும்.

20-ம் நாள் 60 லிட்டர் தண்ணீரில் தலா 8 லிட்டர் மூலிகைப்பூச்சிவிரட்டி, மாட்டுச்சிறுநீர், அமுதக்கரைசல் ஆகியவற்றைக் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். 22-ம் நாள் களையெடுக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் மட்டும் பாய்ச்சி வந்தால் போதுமானது. பயிரின் வயதுக்கேற்ப அறுவடைக்கு வந்துவிடும்.