Published:Updated:

கூட்ட நெரிசலில் விவசாயிகள்... சுலபமாக்கிய கலெக்டர்!

கூட்ட நெரிசலில் விவசாயிகள்... சுலபமாக்கிய கலெக்டர்!
கூட்ட நெரிசலில் விவசாயிகள்... சுலபமாக்கிய கலெக்டர்!
கூட்ட நெரிசலில் விவசாயிகள்... சுலபமாக்கிய கலெக்டர்!

பெரம்பலூர்:  வறட்சி நிவாரணம் பெறுவதற்கான ஆதாரமான சுய விவரங்கள் அடங்கிய‌ புதிய 'கம்யூட்டர் சிட்டா'  பெறுவதற்காக அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் கூட்ட நெரிசலில் விவசாயிகள் சிக்கியதை அறிந்த கலெக்டர், 'சிட்டா தேவையில்லை' என உத்தரவிட்டுள்ளார்.

இந்த வருடம் பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டனர். இதற்காக பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த‌து. அன்றிலிருந்தே தமிழகம் முழுவதும்  நிவாரண நிதிக்காக விவசாயிகள் அலைந்து திரியும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும்  1 லட்சத்து 58 ஆயிரத்து 975 விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ. 60 கோடியே 79 லட்சத்து 26 ஆயிரத்து 590 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில்  நிவாரணத் தொகை வழங்கும் பணி மாவட்டம் முழுவதும் உள்ள 52 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் புதியதாக கம்யூட்டர் சிட்டா எடுத்து வர வேண்டும் என வதந்திகள் பரவின. இதனால் விவசாயிகள் பெருந்திரளாக தாலுகா அலுவலகங்களுக்கு ஒரே நேரத்தில் படை எடுத்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்கள் பரபரப்பானது. ஒரே நேரத்தில் பலர் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிற சூழல் உருவானது.

கூட்ட நெரிசலில் விவசாயிகள்... சுலபமாக்கிய கலெக்டர்!

இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் தரேஸ் அக‌மது, ''வறட்சியால் பயிர் விளைச்சல்

##~~##
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் புகைப்படத்துடன் கூடிய உரிய அனுமதிச் சீட்டு பெற்று, சம்பந்தப்பட்ட முதன்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், நிவாரணத் தொகை பெற கூட்டுறவு கடன் சங்கங்களில் கம்யூட்டர் சிட்டா நகல் அளிக்கத் தேவையில்லை'' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ள நிவாரணம் வழங்கும்போது, ஒருவருடைய பணத்தை அதே பெயருள்ள இன்னொருவர் வாங்கி சென்று விட்டதாக புகார் எழுந்தது. இது போன்ற தவறுகள் இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக, தற்போது விவசாயிகளின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க கலெக்டர் தரேஸ் அகமது உத்தரவிட்டுள்ளார்.
கூட்ட நெரிசலை தவிர்க்க பிற மாவட்டங்களும் இதையே பின்பற்றலாமே?
- சி.ஆனந்தகுமார்
படம்:
எம்.ராமசாமி