Published:Updated:

திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

புயல்

திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

புயல்

Published:Updated:
திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

யானை புகுந்த கரும்புத் தோட்டமாகச் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது, திண்டுக்கல் மாவட்டம். குறிப்பாகக் கொடைக்கானல் பகுதி அதிகமாகவே சிதிலமடைந்து கிடக்கிறது. மலைப்பயிர்கள், சமவெளிப்பயிர்கள் என அனைத்து வகையான பயிர்களும் விளையும் மாவட்டம், திண்டுக்கல். கேரட், வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு, ஆப்பிள், அவகோடா, சௌசௌ, காபி, எலுமிச்சை, தென்னை, வாழை, மக்காச்சோளம், பலவிதக் காய்கறிகள்... என அனைத்துப் பயிர்களும் நாசமாகியிருக்கின்றன, திண்டுக்கல்லில் உள்ள விவசாய நிலங்கள். கொடைக்கானல் பகுதியில் ஒரு தலைமுறை விவசாயமே நாசமாகிவிட்டது.

மலை வாழை, மிளகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் லட்சக் கணக்கில் நஷ்டத்துக்குள்ளாகி உடைந்து போயிருக்கிறார்கள். வத்தலகுண்டு, பழநி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 30,000 வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன.

திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

பழநி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கும் மேல் மக்காச்சோளப் பயிர் பாதிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமைக்குடில்கள் அமைத்துக் கிட்டத்தட்ட 60,000 சதுரமீட்டர் பரப்பில் கிரசாந்தி மலர், வெள்ளரி, மல்லிகை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வீசிய புயல் காற்றால், பசுமைக்குடில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாகச் சுமார் ஏழு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், பசுமைக்குடில் விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

மலைப்பகுதிகளில் எலுமிச்சை, மிளகு, ஆரஞ்சு, வெள்ளைப்பூண்டு போன்றவற்றில் இன்னமும் பாதிப்பின் அளவு முழுமையாகக் கணக்கிடப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கிடுவதற்காகக் குழுக்களை அமைத்திருக்கிறார், மாவட்ட ஆட்சியர் வினய்.

- ஆர்.குமரேசன்