Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

வன மரங்கள் சாகுபடி

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 11-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 13-ம் தேதி ‘வன மரங்கள் சாகுபடி’, 18-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல்’, 27-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு,

செல்போன்: 77088 20505, 94885 75716
.

தண்டோரா

நாட்டுக்கோழி வளர்ப்பு

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 11 மற்றும் 12-ம் தேதிகளில் ‘பால் மதிப்புக்கூட்டல்’, 18 மற்றும் 19-ம் தேதிகளில் ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

கட்டணப் பயிற்சிகள்

அலங்கார மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 5-ம் தேதி, ‘காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்’, 7-ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்’, 11-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மானாவாரி பகுதி தொழில்நுட்பங்கள்’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.
மேலும், டிசம்பர் 3-ம் தேதி ‘எள் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்’, 6-ம் தேதி ‘பண்ணைக்குட்டை பராமரிப்பு’, 7-ம் தேதி ‘காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்’, 27-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ ஆகியவை இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

தண்டோரா

இயற்கை விவசாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர் 28-ம் தேதி ’நாட்டுக்கோழி வளர்ப்பு’, 29-ம் தேதி ’சிறுதானிய மதிப்புக்கூட்டல்’, 30-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

 மாடித்தோட்டம் அமைத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 8-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 29-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.