Published:Updated:

கடுதாசி

கடுதாசி
பிரீமியம் ஸ்டோரி
கடுதாசி

கடுதாசி

கடுதாசி

கடுதாசி

Published:Updated:
கடுதாசி
பிரீமியம் ஸ்டோரி
கடுதாசி

ங்கள் ஊரில் சீத்தா பழ மரங்கள் வேலியில் வளர்ந்து நிற்கும். காய்க்கும்போது மட்டுமே, சீத்தா மரத்தின் பக்கம் செல்வோம். மற்ற மரங்களைப்போல, சீத்தா மரத்தையும் தனிப்பயிராக வளர்க்க முடியும் என்ற தகவல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

- எம்.சி.கணேஷ், பொன்னேரி.

புதுச்சேரி மாநிலத்துக்கு விவசாயம் செய்பவரே விவசாய துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சர் கமலக்கண்ணனின் விவசாய ஈடுபாடு தொடரட்டும். புதுச்சேரி பக்கம் போனால், அமைச்சருக்கு வாழ்த்துச் சொல்ல திட்டமிட்டுள்ளோம்.

- கே.தங்கராசு, ஆலத்தூர்.

கோ
யம்புத்தூரில், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் ஒன்று இருப்பதைப் பசுமை விகடன் மூலம்தான் தெரிந்தது. அதுவும் அங்கு 35-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் உள்ளன என்பதை அறிந்தபோது, ஆச்சர்யமாக இருந்தது. விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை, தேனீக்களைப்போலத் திரட்டி வந்து கொடுக்கும் ‘புறாபாண்டி’ இன்னும் இன்னும் பறக்கட்டும்; கொடுக்கட்டும்.

- எ ஸ்.கமலாதேவி, சித்தர்கோவில்.

கடுதாசி

சின்ன வெங்காயத்தில், நல்ல லாபம் எடுக்கும் மனோகரனுக்கு வாழ்த்துகள். முழுக்க இயற்கை விவசாயம் செய்தால், மட்டுமே சின்ன வெங்காயம், சிவந்த ரோஜா நிறத்தில் இருக்கும். இதழில் வெளியான படங்களைப் பார்த்தபோது, சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா என்று ஐயம் ஏற்பட்டது. அதுதான் இயற்கை விவசாயத்தின் மகிமை.

- எம்.குமார், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

‘‘மா மரத்தில் பிஞ்சுப்பிடிக்கும் போது, அதாவது ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதிவரை பாசனம் செய்யக்கூடாது’’ என்று முக்கியமான தொழில்நுட்பத் தகவலைச் சொல்லியிருக்கிறார், முனைவர் செந்தூர்குமரன். இந்தச் சமயத்தில், கிணற்றில் நீர் உள்ளது என்று, மரங்களுக்குப் பாசனம் செய்து, மாம்பூக்கள் கொட்டியதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

- ந.வீரராகவன், திருவள்ளூர்.

மிழ்நாட்டில் அதிகம் கவனம் பெறாமல் உள்ள வேளாண் உபதொழில்களில் வெண்பன்றி வளர்ப்பும் ஒன்று. கேரளாவில் வெண்பன்றி இறைச்சியை விரும்பி உண்கிறார்கள். நாம் வளர்ப்பதுமில்லை. நல்ல உணவை உண்பதுமில்லை.

- சி.சுப்பையா, கடையம்.

செங்குன்றம் அடுத்துள்ள, கொடுவேளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. நண்பர்கள் இணைந்து மாட்டுப் பண்ணை தொடங்கி, பால் விற்பனை செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தோம். தற்போது பாலைக் காட்டிலும், சிறுதானிய ஐஸ்கிரீம்கள், யோகார்ட்... என மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவுள்ளோம்.

- கே.சுரேஷ், மரக்காணம்.