Published:Updated:

`நிபந்தனை இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடுங்கள்!’ - விவசாயிகள் வலியுறுத்தல்

`நிபந்தனை இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடுங்கள்!’ -  விவசாயிகள் வலியுறுத்தல்
`நிபந்தனை இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடுங்கள்!’ - விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளிடமிருந்து  நெல் கொள்முதல் செய்வதில், நுகர்பொருள் வாணிபக் கழகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி  தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கவேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மேலும், கடுமையான  பனிப்பொழிவால் நெல்மணிகள் ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். தமிழக முதல்வர் அனைத்து நெல்லையும் எந்தவித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும் எனக் கூறி, தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமலநாதன் தலைமையில் அறுவடை செய்யப்படும் நெல்லை எந்த விதமான நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் கையில் நெற்கதிர்களையும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளைத் தரையில் கொட்டியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு ஆண்டுதோறும்  சம்பா நெல் அறுவடைக் காலத்தில் வேளாண்துறை, உணவுத்துறை, விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை நடத்துவது வழக்கம். இந்தக் கூட்டத்தில், 'கொள்முதல் கொள்கை முடிவுகள்' எடுக்கப்படும். ஆனால், இந்தக் கூட்டத்தை கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசு கூட்டுவதில்லை. எனவே, உடனடியாக விவசாயிகள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைக்க ஏதுவாக, முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் நுகர்பொருள் வாணிபக் கழகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கவேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. 

எனவே, நெல் கொள்முதலில் நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். கஜா புயல் தாக்குதலால்  சம்பா நெல் மகசூல் 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும், கடுமையான பனிப்பொழிவால் நெல்மணிகள் ஈரப்பதத்துடன் உள்ளது. இந்நிலையில், அறுவடையான நெல்லில் ஈரப்பதம் 17 சதவிகிதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, 20 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். ஆந்திராவில் பெய்ட்டி புயல் தாக்கியதால், அங்குள்ள விவசாயிகளின் நெல் அனைத்தையும் அரசு எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டது போல, தமிழக முதல்வரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து நெல்லையும் எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.