Published:Updated:

தேனியில் மாங்காய் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனியில் மாங்காய் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி!
தேனியில் மாங்காய் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்த வருடம் மாங்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதாக, தேனி மாவட்ட மா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, தேனி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் மா பயிர் செய்யப்படுகிறது. ``தேனி மாவட்டம் முழுவதிலும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் மாந்தோட்டங்கள் உள்ளன. குறிப்பாக, அல்லிநகரம், தேவதானப்பட்டி, மஞ்சலாறு ஆகிய பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன. பங்கனப்பள்ளி, காதர், செந்தூரம், கல்லா, காலைப்பாடி ஆகிய ரகங்கள் பெரும்பாலும் இப்பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. இந்த வருடம் கோடை ஆரம்பிக்கும் முன்னரே மா விளைச்சல் அதிகமாக இருக்கிறது. அதற்கான உரிய விலையும் கிடைக்கிறது. கரிக்காய் என்று சொல்லக்கூடிய ஊறுகாய்க்கு உகந்த மாங்காய்கள், கிலோ 30 ரூபாய்க்கும், பழத்துக்கான மாங்காய்கள் கிலோ 70 ரூபாய்க்கும் எங்களிடம் இருந்து வாங்கிச்செல்கிறார்கள் வியாபாரிகள்.

கடந்த முறை மழை அதிகமாக இருந்ததால், மாங்காயில் கறுப்பு விழுந்தது. அதனால், பெரும்பாலும் யாரும் காயை மரத்திலிருந்து பறிக்கவில்லை. ஆனால், இந்த வருடம் அந்தப் பிரச்னை இல்லை. போதிய மழை இருந்ததால் நல்ல விளைச்சலை அடைந்திருக்கிறோம். அடுத்து, கோடை மழையை எதிர்பார்க்கிறோம். அப்போதும் நல்ல விளைச்சல் இருக்கும் என நம்பிக்கைகொள்கிறோம்” என்றார் பெரியகுளத்தைச் சேர்ந்த மா விவசாயி.